Bumper Twitter Review: பிக் பாஸ் ஷிவானிக்கு செம ஜாக்பாட் போல.. பம்பர் ட்விட்டர் விமர்சனம் இதோ!
சென்னை: இயக்குநர் செல்வகுமார் இயக்கத்தில் 8 தோட்டாக்கள் வெற்றி, பிக் பாஸ் ஷிவானி நாராயணன், ஜிபி முத்து நடித்துள்ள பம்பர் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
லாட்டரி சீட்டில் முதல் பரிசு பம்பர் பணம் விழுந்து விட பணத்துக்காக எதையும் செய்யும் ஹீரோ வெற்றி தான் வாங்கிய லாட்டரியை கூட துச்சமாக கருதி தூக்கிப் போட்டு விடுகிறார்.

அந்த லாட்டரி சீட்டுக்கு பரிசு விழுந்ததை அறிந்த லாட்டரி சீட்டை விற்றவர் வெற்றியை தேடி அந்த பம்பர் பணத்தை கொடுத்தாரா இல்லையா என்பது தான் இந்த படத்தின் கதைச்சுருக்கம்.
பம்பர் படம் ரிலீஸ்: பெரிய பட்ஜெட் படங்கள் ஒரு பக்கம் சொதப்பி வரும் நிலையில், சிறிய பட்ஜெட் படங்கள் புதிய கதைக்களத்துடன் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. அந்த வரிசையில் இயக்குநர் செல்வகுமார் இயக்கத்தில் வெற்றி நடிப்பில் உருவாகி உள்ள பம்பர் திரைப்படம் உலகம் முழுவதும் இன்று தியேட்டர்களில் வெளியாகி உள்ளது.

இந்த படத்தில் வெற்றிக்கு ஜோடியாக பிக் பாஸ் ஷிவானி ஹீரோயினாக நடித்துள்ளார். காமெடி கதாபாத்திரத்தில் பிக் பாஸ் ஜிபி முத்துவும் நடித்து கலக்கி உள்ளார்.
மதம் கடந்த வாழ்க்கை தத்துவம்: "பம்பர் விமர்சனம் - பம்பர் குலுக்கல் பரிசில் நேர்மையின் சிதறலில் மதம் கடந்த வாழ்க்கை தத்துவம் மனதை அள்ளிச் செல்கிறது | ரேட்டிங்: 3/5" என இந்த நெட்டிசன் பம்பர் படத்துக்கு பாசிட்டிவ் விமர்சனத்தை கொடுத்துள்ளார்.

விமர்சகர்கள் பாராட்டு: "விமர்சகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டு வரும் பம்பர் அகிலமெங்கும் திரையரங்குகளில்" என்றே படத்தை ப்ரமோட் செய்து வருகின்றனர். பிரஸ் ஷோவிலேயே படத்துக்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்துள்ளது. சசிகுமாரின் அயோத்தி படத்தை போலவே பம்பர் படமும் தரமாக உள்ளது என பலரும் பாராட்டி வருகின்றனர்.
பம்பர் ஹிட்: "BUMPER movie preview show பார்ப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது.. மிகவும் நேர்த்தியான படைப்பு.. எனக்கு தெரிந்த வரை ஹரீஷ் பெராடி இதுவரை நடித்ததில் The best performanceனு சொல்லலாம்.. மனுசன் பின்னீட்டாப்ள..

Tito Wilson னு ஒரு மலையாள நடிகர்.. அங்கமல்லி டைரீஸ்ல நடிச்சிருப்பாரு.. இந்த படத்துல ஹரீஷ் பெராடிக்கு பையனா வெளுத்து வாங்கியிருக்காரு.. அதுலயும் அப்பாவ வீட்டுக்குள்ள போட்டு பூட்டீட்டு வாசல்ல பீடிய பத்த வச்சிகிட்டு அவர் reactionஓட பேசுரது வேற லெவல்.. கவிதாபாரதியண்ண நடிப்புல கச்சிதம்..
ஹீரோ வெற்றி கதைகளை இதுவரை சரியாக தேர்வு செய்தே வந்துள்ளார். இதற்கு முன்பு இவருடைய 8 தோட்டாக்கள், ஜீவி போன்ற திரைப்படங்களும்கூட நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படங்கள்... அந்த வகையில் பம்பர் வெற்றிக்கு பம்பர்தான்..
இயக்குநர் திறன்பட நேர்த்தியாக தன்னுடைய வேலையை செய்திருக்கிறார்..
இசை, பின்னனி இசையும் அருமை.. குழுவினருக்கு வாழ்த்துகள்" என இந்த ரசிகர் பாராட்டுப் பத்திரமே வாசித்து விட்டார்.

ஷிவானிக்கு ஜாக்பாட்: பிக் பாஸ் மூலம் பிரபலமான ஷிவானி நாராயணன் கமல்ஹாசனின் விக்ரம் படத்தில் அறிமுகமான நிலையில், நாய்சேகர் ரிட்டர்ன்ஸ், வீட்ல விசேஷம், டிஎஸ்பி உள்ளிட்ட படங்களில் நடித்தார். ஆனால், இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ள ஷிவானிக்கு இந்த படம் ஜாக்பாட் அடித்துள்ளதாக ஷிவானி ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











