twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    Vezham Review: அசோக் செல்வனின் த்ரில்லர் படம் வேழம் வெற்றியா? தோல்வியா? விமர்சனம் இதோ!

    |

    Rating:
    2.5/5

    நடிகர்கள்: அசோக் செல்வன், ஐஸ்வர்யா மேனன், ஜனனி

    இசை: ஜானு சந்தர்

    இயக்கம்: சந்தீப் ஷியாம்

    சென்னை: இயக்குநர் சந்தீப் ஷியாம் இயக்கத்தில் அசோக் செல்வன், ஐஸ்வர்யா மேனன் மற்றும் ஜனனி நடிப்பில் உருவான வேழம் திரைப்படம் ஜூன் 24ம் தேதி வெளியானது.

    வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் அசோக் செல்வன் இந்த முறை ஒரு சைக்கோ த்ரில்லர் கதையை தேர்வு செய்து நடித்துள்ளார்.

    மாமனிதன், வேழம், பட்டாம்பூச்சி, மாயோன் என நேற்று பல படங்கள் வெளியான நிலையில், அசோக் செல்வனின் வேழம் படம் எப்படி இருக்குன்னு இங்கே பார்ப்போம்..

    விக்ரம் டைட்டில் சாங்கை பாடியவர் லோகேஷ் பள்ளி சீனியரா...அவரே சொன்ன செம தகவல் விக்ரம் டைட்டில் சாங்கை பாடியவர் லோகேஷ் பள்ளி சீனியரா...அவரே சொன்ன செம தகவல்

    வேழம் - என்ன கதை

    ஊட்டிக்கு தனது காதலியுடன் பைக்கில் டிராவல் செய்து கொண்டிருக்கும் ஹீரோ அசோக்கை (அசோக் செல்வன்) ஒரு இரும்பு ராடால் தாக்கி விட்டு அவரது காதலி லீனாவை (ஐஸ்வர்யா மேனன்) மர்ம நபர் கொன்று விடுகிறார். 7 ஆண்டுகள் கழித்து என அதன் பிறகு படம் ஆரம்பிக்க தாடி லுக்கில் படம் முழுக்க கொலைகாரனின் வாய்ஸை மட்டுமே அடையாளமாகக் கொண்டு ஹீரோ அசோக் தேடுவதும், கடைசியில் கண்டுபிடித்தாரா? எதற்காக அந்த கொலை நடந்தது? என்பதும் தான் வேழம் படத்தின் கதை.

    அசோக் செல்வன் நடிப்பு

    அசோக் செல்வன் நடிப்பு

    ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார் நடிகர் அசோக் செல்வன். காதலியை இழந்த துக்கம் தொண்டையை அடைக்க அந்த இடத்தில் அதே போன்ற சீரியல் கொலைகள் நடைபெற்று வருவதை அறிந்து கொள்ளும் அசோக் குற்றவாளியை கண்டுபிடிக்க போராடும் காட்சிகளில் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.

    ஐஸ்வர்யா மேனன்

    ஐஸ்வர்யா மேனன்

    தமிழ்ப் படம் 2, நான் சிரித்தால் படங்களில் நடித்த ஐஸ்வர்யா மேனன் இந்த படத்தில் அசோக் செல்வனின் காதலியாக நடித்துள்ளார். படத்தின் ஆரம்பத்திலேயே அவரை கொலை செய்து கையில் எக்ஸ் மார்க் போட்டு விட அவரை நினைத்து உருகும் காட்சிகளும், ஃபிளாஷ்பேக் காட்சிகளில் அழகான நடிப்பை கொடுத்து செல்கிறார் ஐஸ்வர்யா மேனன்.

    மீண்டும் ஜனனி

    மீண்டும் ஜனனி

    ஜனனி அய்யர் என சொல்ல வேண்டாம் என நடிகை ஜனனி விடுத்த கோரிக்கைக்கு அவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல பாராட்டுக்கள் கிடைத்தன. தெகிடி படத்தில் இணைந்து நடித்த அசோக் செல்வன் - ஜனனி வேழம் படத்திலும் இணைந்து நடித்துள்ளனர். காதலியின் பிரிவால் உடைந்து கிடக்கும் அசோக்கிற்கு ஒரு தோழியாக ஆதரவு கொடுத்து அவரை ஒரு தலையாக காதலிக்கும் காட்சிகளில் அப்ளாஸ் அள்ளுகிறார். இறுதியில் இவர்கள் இருவரும் சேர்ந்தார்களா? இல்லையா? கொலையாளி யார் என்பது தான் இந்த வேழம் படத்தின் மொத்தக் கதையே..

    பிளஸ்

    பிளஸ்

    த்ரில்லர் படத்தை பார்த்த அனுபவத்தை நிஜமாகவே முதல் பாதி ரசிகர்களுக்கு கொடுத்தது. ஊட்டி அழகை மறைத்து படத்திற்கு தேவையான சோக ஒளிப்பதிவை ஒளிப்பதிவாளரும் துக்க பின்னணி இசையை இசையமைப்பாளரும் கொடுத்துள்ளனர். அசோக் செல்வன் தான் அந்த கொலைகாரனா என்கிற ரேஞ்சுக்கு கதை நகர்வதெல்லாம் சுவாரஸ்யத்தின் உச்சம். அதை விட கிளைமேக்ஸ் காட்சியில் வரும் ட்விஸ்ட் வேறலெவல்.

    மைனஸ்

    மைனஸ்

    நல்லா வந்திருக்க வேண்டிய படத்தை இரண்டாம் பாதியில் இயக்குநர் தேவையில்லாமல் சுற்றி வளைத்து சொல்லியிருப்பதை தவிர்த்து இருக்கலாம். எழுத்தில் அந்தளவுக்கு க்ரிப் இல்லாமல் போனது தான் படத்திற்கு மிகப்பெரிய மைனஸ் ஆக மாறி உள்ளது. பல இடங்களில் அடுத்து இந்த காட்சி தான் வரும், அவங்க ஒன்றாக சேர்ந்துடுவாங்கன்னு ரசிகர்கள் கதை சொல்வது அப்படியே திரையிலும் வருவது வேழத்தின் பலத்தை வீணடித்து விடுகிறது.

    English summary
    Vezham movie Review in Tamil
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X