twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'Victim' anthology review: ’கன்ஃபஷன்’ வெங்கட் பிரபு படம்தானா?..ஏமாற்றத்தில் ரசிகர்கள்

    |

    Rating:
    2.5/5

    விக்டிம் ஆந்தாலஜி

    கன்ஃபஷன் மூவி

    நடிகர்கள்: பிரசன்னா, அமலா பால், கிரிஷ்

    இயக்கம்: வெங்கட் பிரபு

    இசை: பிரேம்ஜி

    சென்னை: விக்டிம் ஆந்தாலஜி தொடரில் 4 படங்கள் வெளியாகியுள்ளன. அதில் ஒன்று வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் வெளியாகியுள்ளது. ஆவலுடன் பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது.

    ஓடிடி தளத்தில் சோனி லைவ் தளத்தில் விக்டிம் ஆந்தாலஜி தொகுப்பு வெளியாகியுள்ளது. இதில் 4 பிரபல இயக்குநர்களின் படம் வெளியாகியுள்ளது.

    இதில் வெங்கட் பிரபுவின் Confession (ஒப்புதல் வாக்குமூலம்) படம் அவரது படம் தானா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

    இயக்குநர், நடிகர் வெங்கட்பிரபு நகைச்சுவை உணர்வு மிக்கவர். இவரது அசிஸ்டெண்டாக இருந்தவர்தான் பா.ரஞ்சித். வெங்கட்பிரபுவின் நகைச்சுவை உணர்வை அவரது வெற்றிப்படமான சென்னை 28 உட்பட பல படங்களில் பார்க்கலாம். அதேபோல் மங்காத்தா, மாநாடு உள்ளிட்ட வித்தியாசமான கிரைம் சப்ஜக்டுகளாக வெளியாகி கலக்கியது. தமிழ் சினிமாவின் வித்தியாச இயக்குநர் மட்டுமல்ல வெற்றி இயக்குநராகவும் வெங்கட்பிரபு உள்ளார்.

    சோனி லைவில் வெளியானது விக்டிம் ஆந்தாலஜி.. வெங்கட்பிரபு, பா ரஞ்சித், ராஜேஷ், சிம்புதேவன் மாயாஜாலம்! சோனி லைவில் வெளியானது விக்டிம் ஆந்தாலஜி.. வெங்கட்பிரபு, பா ரஞ்சித், ராஜேஷ், சிம்புதேவன் மாயாஜாலம்!

     விக்டிம் ஆந்தாலஜியில் வெங்கட் பிரபுவின் கன்ஃபஷன் படம்

    விக்டிம் ஆந்தாலஜியில் வெங்கட் பிரபுவின் கன்ஃபஷன் படம்

    ஓடிடி டீ தளத்தில் விக்டிம் என்கிற பெயரில் ஆந்தாலஜி வெளியாகி உள்ளது. அதில் நான்கு வெவ்வேறு கதைகள் முன்னணி இயக்குநர்களால் இயக்கப்பட்டு வெளியாகியுள்ளது. இயக்குநர்கள் வெங்கட்பிரபு, சிம்புதேவன்,பா ரஞ்சித் , ராஜேஷ் இயக்கத்தில் 4 படங்கள் அதில் உள்ளது. இதில் முதலில் வருவது வெங்கட் பிரபு இயக்கத்தில் கன்பஷன் (ஒப்புதல் வாக்குமூலம்) என்கிற குறும்படம். இதில் அமலா பால், பிரசன்னா, கிரிஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

     அமலாபாலின் என்ட்ரி

    அமலாபாலின் என்ட்ரி

    இந்த கதையின் ஆரம்பத்தில் உயர்ரக அபார்ட்மெண்டுக்கு அவசரஅவசரமாக வரும் நாயகி அமலாபால், தனக்கு தொடர்ந்து வரும் போன் அழைப்பை கட் செய்கிறார். அவசர அவசரமாக வீட்டைத் திறந்து உள்ளே சென்று இயற்கை உபாதையை கழிக்கிறார் (இப்போதெல்லாம் ஆங்கில பட பாணி யதார்த்தம் என்கிற பெயரில் பாத்ரூம் காட்சிகள், அவர்கள் முகத்தில் தோன்றும் மெல்லிய உணர்வுகளை (?) காண்பிப்பது போன்றவைகளில் முன்னேற்றம் கண்டுள்ளார்கள்) பின்னர் சரக்கு பாட்டிலை எடுத்து கிளாஸில் ஊற்றி அமர்ந்து பனியனை கழற்றாமல் பிராவை கழற்றி ரிலாக்ஸ் ஆகிறார். உணவுக்கு ஆர்டர் செய்கிறார். இப்படி பொறுமையை முதல் 5 நிமிடம் சோதிக்கிறார்கள்.

     அடுத்து ட்விஸ்ட் வரும்னு எதிர்ப்பார்ப்பில் மெல்ல நகரும் கதை

    அடுத்து ட்விஸ்ட் வரும்னு எதிர்ப்பார்ப்பில் மெல்ல நகரும் கதை

    நாமும் வெங்கட் பிரபு படம் அடுத்து வரப்போகுது பார் ட்விஸ்ட் என நினைத்து தொடரும்போது, உணவு வருகிறது அதை வாங்க கதவை திறக்கும்போதே ஒரு இளைஞன் என் போனை ஏன் கட் பண்றீங்க எனக்கேட்க இங்கே யார் வரச்சொன்னது, காலையில் ஆஃபீஸுக்கு வா பேசலாம்னு துரத்தி விட்டு கதவைச் சாத்துகிறார். பின்னர் லண்டனிலிருந்து கிரிஷ் பேசுகிறார், அவர்கள் பேச்சிலேயே இருவரும் கணவன் மனைவி விசா கிடைப்பதில் சிக்கல் உள்ளது என புரிகிறது.

     அஞ்சாதேவில் கலக்கிய பிரசன்னா ரோல் இதுதான்

    அஞ்சாதேவில் கலக்கிய பிரசன்னா ரோல் இதுதான்

    பின்னர் நாயகியின் அம்மா அப்பா பேச அவர்கள் 30 வயசுக்கு மேலாகுது எப்பத்தான் கல்யாணம் செய்துக்க போகிறாய் என்று கேட்கும்போது குழப்பம் வருது. மற்றொரு இடத்தில் பிரசன்னாவை காட்டுகிறார்கள். ஐடி ஊழியர் நைட் டூட்டிக்கு கிளம்புவதுபோல் காட்டுகிறார்கள். ஒரே நைட் டூட்டித்தானா பகல் டூட்டி இல்லையா என மனைவி கேட்க ஆள்பற்றாக்குறை என மழுப்பிவிட்டு கிளம்புகிறார் பிரசன்னா. காரை ஓட்டிக்கொண்டு நேராக அடையாறில் ஒரு இடத்தில் வாகனத்தை நிறுத்துகிறார். காரின் பின் டிக்கியிலிருந்து பையை எடுக்கிறார். அப்போதே இவர் ஏதோ இல்லீகலாக வேலை செய்கிறார், பையில் துப்பாக்கி இருக்குமோ என என்னத் தோன்றுகிறது.

     வழக்கமான பாணி திடீர் ட்விஸ்ட் எங்கேங்க

    வழக்கமான பாணி திடீர் ட்விஸ்ட் எங்கேங்க

    பாதிக்கட்டப்பட்டுள்ள கட்டடத்தில் ஏறுகிறார். அங்கு யார் போவார்கள், ஸ்னைப்பர்கள் தான் போவார்கள் என்பது சினிமாவில் எழுதப்படாத விதி அல்லவா, ஆமாம் இவர் ஸ்னைப்பர். இவர் மாடியிலிருந்து அமலாபாலுக்கு குறி வைக்கிறார். அதன் பின் அவரிடம் போனில் பேசி கொல்ல வந்திருப்பதாக சொல்கிறார். அமலாபாலை கொன்றாரா? அவர் ஏன் அமலாபாலை குறி வைக்கணும் என்பது மீதிக்கதை.

     கொத்துப்பரோட்டாவுக்கு பேர் போன ஓட்டலில் கோதுமை சப்பாத்தி கொடுத்த கதை

    கொத்துப்பரோட்டாவுக்கு பேர் போன ஓட்டலில் கோதுமை சப்பாத்தி கொடுத்த கதை

    படத்தில் வலுவான ஒட்டுதல் இல்லை. வெங்கட்பிரபு என்பதால் தான் இந்த பதிவு, வேறு யாராவது அமெச்சூர் டைரக்டர் இருந்தால் சொல்லப்போவதில்லை. கொத்துபரோட்டாவுக்கு பேர்போன புகழ்பெற்ற ஓட்டலுக்குச் சென்று அங்கு மட்டமான கொத்துபரோட்டா கிடைத்தால் என்னங்க நம்பி வந்தோம்னு கேட்க தோணுது அல்லவா அதுபோல் கேட்க தோன்றுகிறது. உங்க ஓட்டல் பிராண்ட் வச்சிகிட்டு வெளியிலிருந்து கொத்துபரோட்டான்னு கோதுமை ரொட்டியை வரவச்சி எங்களுக்கு சப்ளை பண்றீங்களான்னுகூட மனதில் தோன்றும். அதுபோல் என்ன சார் அசிஸ்டெண்ட் யாரையாவது 'டைரக்ட் பண்ணு என் பேரில் போட்டுக்க'ன்னு அனுமதித்த மாதிரி இருக்குன்னு சமூக வலைதளங்களில் ஏமாற்றத்தை வெளிப்படுத்துகிறார்கள். நமக்கும் அதுதான் தோணுது.

    வீணடிக்கப்பட்ட பிரசன்னா, அமலா பால்

    பிரசன்னா, அமலாபால் போன்றவர்கள் வீணடிக்கப்பட்டுள்ளார்களோ என்கிற உணர்வு தோன்றுவதை யாரும் மறுக்க முடியாது. எடுத்துக்கொண்ட கதைக்கருதான் பிரச்சினை. படம் பொசுக்குன்னு ம்போது என்ன அவ்வளவுதானான்னு எண்ணத்தோனுது. கேமரா, பின்னணி இசை மற்றவைகள் பற்றி பெரிய இயக்குநரிடம் என்ன இருக்குமோ அது இருக்கிறது. கன்ஃபஷன் நம்மை கன்ஃப்யூஷன் ஆக்கிவிட்டது. இதற்கு 2.5 ஸ்டார்கள் கொடுக்கலாம்.

    English summary
    4 films have been released in the Victim Anthology series. One of them has been released under the direction of Venkat Prabhu. It has disappointed the eager fans.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X