For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  Victim anthrology Review:ராஜேஷின் மிர்ரேஜ் எப்படி இருக்கு ?

  |

  குறும்பட பெயர் : மிர்ரேஜ்

  நடிகர்கள் : ப்ரியா பவானிசங்கர், நட்டி நடராஜ்

  இயக்கம் : ராஜேஷ்.எம்

  Rating:
  3.0/5

  சோனி லைவ்வில் ஆகஸ்ட் 5 ம் தேதி வெளியாகியுள்ள அந்தாலஜி படம், Victim Who is Next?. 5 கதை, 5 டைரக்டர்கள் இயக்கி உள்ளனர்.இதில் மூன்றாவது கதையாக உருவாகி உள்ளது 'மிர்ரேஜ்' என்கிற கதை. டைரக்டர் ராஜேஷ்.எம் இயக்கி உள்ளார்.

  சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி, மிஸ்டர் லோக்கல் உள்ளிட்ட பல காமெடி படங்களை இயக்கி வெற்றி கண்டவர். சிவகார்த்திகேயன் நடித்த பிளாக் பஸ்டர் படமான வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்திற்கு கதை எழுதியவர் ராஜேஷ்.எம் தான்.

  நெக்ஸ்ட் சூட்டிங் தான் கண்ணா.. ரஜினிகாந்தே சொல்லிட்டாரே.. ஜெயிலர் படப்பிடிப்பு எப்போ தெரியுமா? நெக்ஸ்ட் சூட்டிங் தான் கண்ணா.. ரஜினிகாந்தே சொல்லிட்டாரே.. ஜெயிலர் படப்பிடிப்பு எப்போ தெரியுமா?

  அதனால் இந்த ஆந்திராலஜியும் காமெடியாக இருக்கும் என எதிர்பார்த்து வந்தால், அதற்கு நேர் மாறான ஒரு கதையை தந்துள்ளார் ராஜேஷ். சோனி லைவ்வில் வெளியான விக்டிம் ஆந்திராலஜியின் மூன்றாவது எபிசோடு மிர்ரேஜ்.ப்ரியா பவானிசங்கர், நட்டி நடராஜ் நடித்துள்ளனர்.

  த்ரில்லரில் மிரட்டும் மிர்ரேஜ்

  த்ரில்லரில் மிரட்டும் மிர்ரேஜ்

  ஐடி நிறுவன ஊழியராக பெங்களூருவில் இருந்து சென்னை வரும் ப்ரியா பவானி சங்கருக்கு,ஈசிஆர் அருகே உள்ள வில்லா ஒன்றில் அறை ஒதுக்கப்பட்டுள்ளது. மிரட்டும் இரவில், அதை விட மிரட்டும் படியாக இருக்கும் அந்த விடுதிக்கு செல்லும் ப்ரியா பவானி சங்கர், அங்கு ஒரே ஆளாக வில்லாவை நிர்வகிக்கும் நட்டியை பார்த்து மிரண்டு போகிறார்.

  ஒரு ராத்திரியில் இத்தனை த்ரில்லர்

  ஒரு ராத்திரியில் இத்தனை த்ரில்லர்

  6 மாதமாக விருந்தினர்கள் யாரும் வராமல் உபயோகத்தில் இல்லாமல் இருந்த அந்த வில்லாவில் தனி ஆளாக தங்கும் ப்ரியா, அன்றிரவு வில்லா மேனேஜரான நட்டியின் செயல்களால் மோசமான சூழலை சந்திக்கிறார். தற்கொலை செய்ததாக கூறப்படும் மனைவி, குழந்தைகளுடன் இரவில் உணவு உண்ணும் நட்டி, பிரியாவையும் அவர்களிடம் அறிமுகப்படுத்த முயற்சிப்பதும், பிரியாவை கொலை செய்ய வருவதும், அதன் பின், அவரே கழுத்து அறித்துக் கொள்ள,மிரண்டு போய் ப்ரியா அலறுவதுமாய் ஒரு இரவில், ஓராயிரம் த்ரில்லர்.

  புது மாதிரியான சஸ்பென்ஸ்

  புது மாதிரியான சஸ்பென்ஸ்

  என்ன ஆனார் ப்ரியா பவானி சங்கர்? நட்டியின் செயல்கள் உண்மையா? அமானுஸ்யமா? சைக்கோ தனமா? த்ரில்லரா? என பல கேள்விகளோடு பயணித்து, இறுதியில் பயங்கரமான ட்விஸ்ட் வைத்து முடித்துள்ளார்கள். நினைத்தபடி இல்லாமல், புது மாதிரியான சஸ்பென்ஸ்.எதையோ சொல்ல முயற்சி செய்து, வேறு எதையோ சொல்லி முடித்திருக்கிறாரோ டைரக்டர் என்ற உணர்வு வருகிறது.

  நடிப்பில் மிரட்டிய ப்ரியா

  நடிப்பில் மிரட்டிய ப்ரியா

  ப்ரியா பவானி சங்கர், முதன்முறையாக நன்கு நடித்திருக்கிறார். அல்லது, நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றிருக்கிறார் என்று கூறலாம். அவ்வளவு பெரிய விடுதியை நிர்வகிக்கும் நட்டி, லுங்கியும், பட்டன் இல்லாத சட்டையுமாய் இருப்பது தான் கொஞ்சம் நெருடல். மற்றபடி அவரது கதாபாத்திரம், ரொம்ப கச்சிதமாக உள்ளது.

  ஸ்கோர் செய்த நடிகர்கள்

  ஸ்கோர் செய்த நடிகர்கள்

  இரவில், இல்லாத நபர்களுடன் விருந்து உண்ணும் காட்சி, பார்ப்பதற்கு கொஞ்சம் பயங்கரம் தான். அவர்களோடு ப்ரியா அறிமுகம் ஆகும் காட்சி, நடுக்கத்திற்கு நடுவே கொஞ்சம் கலகலப்பு. அந்தாலஜியில் இப்படியும் கூட த்ரில்லர் படம் எடுக்கலாம் என நிரூபித்திருக்கிறார் இயக்குநர் ராஜேஷ் எம். தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை நன்றாகவே பயன்படுத்தி அதில் ஸ்கோர் செய்திருக்கிறார்கள் ப்ரியா பவானி சங்கரும், நடராஜனும்.

  அடுக்கடுக்காக வரும் கேள்விகள்

  அடுக்கடுக்காக வரும் கேள்விகள்

  6 மாதமாக உபயோகத்தில் இல்லாத வில்லாவில் ஐடி நிறுவனம் ஒன்று ரூம் புக் செய்யுமா, அப்படியே செய்தாலும் தனது பாதுகாப்பை யோசிக்காமல் ஒரு பெண் தனியாக வந்து தங்குவாரா, வந்த பிறகு நெட்டில் வில்லா பற்றிய ரெவ்யூவை தேடி பார்ப்பவர், வருவதற்கு முன் தேடாதது ஏன்? ப்ரியா பவானிசங்கர் மிரண்டு, அலறி ஓடி, இரவு முழுவதும் வெளியில் அமர்ந்திருக்கையில் அப்படி எந்த சத்தமும் கேட்கவில்லை, ப்ரியாவிற்கு என்ன ஆனது என நட்டி அவரின் நண்பரிடம் கேட்பது இவை அனைத்தும் நம்பும்படியாக இல்லை.

  ரசிகர்களின் ரேட்டிங் என்ன?

  ரசிகர்களின் ரேட்டிங் என்ன?

  த்ரில்லிங் நிறையவே உள்ளது. அதை மருத்துவம், சைகாலஜி என எதற்காக டைரக்டர் குழப்பினார், சொதப்பினார் என்று தான் தெரியவில்லை. கதையை இன்னும் கொஞ்சம் நன்றாக, சுவாரஸ்யமாகவே சொல்லி இருக்கலாம் என்றே தோன்றுகிறது. இதில் விக்டிம் ப்ரியாவா அல்லது நட்டியா என்பது தான் கடைசி வரை புரியவில்லை. ப்ரியா மற்றும் நட்டியின் நடிப்பிற்கு ரசிகர்கள் 5க்கு 3 என ரேட்டிங் கொடுத்துள்ளனர்.

  English summary
  Victim - Who Is Next? anthrology releaxsed recently in Sony Liv platform. In this anthrology, third story is titled as Mirrage. This story was directed by Rajesh.M. Priya Bhavanishankar, Nati Nataraj are playing vital role. Here we discussed about this story.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X