twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    விதி மதி உல்டா விமர்சனம் #VidhiMathiUlta

    By Shankar
    |

    Rating:
    2.5/5
    Star Cast: ரமீஸ் ராஜா, ஜனனி ஐயர், டேனியல் பாலாஜி, கருணாகரன்
    Director: விஜய் பாலாஜி

    எஸ் ஷங்கர்

    நடிகர்கள்: ரமீஸ் ராஜா, ஜனனி ஐயர், டேனியல் பாலாஜி, கருணாகரன்

    ஒளிப்பதிவு: மார்ட்டின் ஜோ

    இசை:அஸ்வின் விநாயகமூர்த்தி

    தயாரிப்பு: ரைட் மீடியா ஒர்க்ஸ்

    இயக்கம்: விஜய் பாலாஜி

    இந்த ஆண்டின் முதல் ரிலீஸ் என்ற பெருமையோடு வந்திருக்கிறது விதிமதி உல்டா. பெருமைப்பட்டுக் கொள்ளும்படி படம் வந்திருக்கிறதா... வாங்க பார்க்கலாம்.

    Vidhi Mathi Ulta Review

    நாயகன் ரமீஸ் ராஜா சென்னைவாசி. வேலைக்குப் போகாமல் வீட்டில் இருக்கும் ஜாலி பேர்வழி. இவருடைய அப்பாவான ஞானசம்பந்தம், புரோக்கர் சென்ட்ராயனுக்கு கமிஷன் தரவில்லை. அந்த கோபத்தில், ரமீஸ் ராஜாவை கடத்தி பணம் பார்க்க முயல்கிறார் சென்றாயன்.

    நாயகி ஜனனியை எதிர்பாராமல் சந்திக்கும் ரமீஸ் ராஜா, சினிமா வழக்கப்படி அவரை துரத்தி துரத்தி காதலிக்கிறார். ஒரு கட்டத்தில் ரமீஸ் ராஜாவின் காதலை ஏற்றுக் கொள்கிறார் ஜனனி.

    பெரிய தாதாவான டேனியல் பாலாஜியின் தம்பிக்கும் ஜனனி மீது காதல். ஆனால் அதை ஏற்க மறுக்கிறார் ஜனனி. அந்தக் கோபத்தில் ஜனனியைக் கடத்தி விடுகிறார் ரவுடியின் தம்பி. இதே நேரத்தில் ரமீஸ் ராஜாவையும் கடத்துகிறார் சென்றாயன்.

    Vidhi Mathi Ulta Review

    இருவரையும் இரு வேறு கும்பல் கடத்தினாலும், பாழடைந்த ஒரு கட்டடத்தில்தான் பதுங்குகிறார்கள்.

    அதே கட்டடத்தில் தான் பதுக்கி வைத்திருக்கும் தங்கத்தை எடுக்க வருகிறான் திருடன் கருணாகரன்.

    அப்போது ஏற்படும் மோதலில், டேனியல் பாலாஜியின் தம்பி சுட்டுக் கொல்லப்படுகிறார். இதில் கோபமடைந்த டேனியல் பாலாஜி, தம்பி இறப்புக்கு ரமீஸ் ராஜாதான் காரணம் என்று நினைத்து அவனது குடுபத்தையே தீர்த்துக் கட்டுகிறான். கட்... விழித்துப் பார்த்தால், இது எல்லாமே கனவில் நடந்த சம்பவங்கள்.

    ஆனால் அப்படியே நிஜத்திலும் நடக்க ஆரம்பிக்கிறது. தான் கடத்தப்படுவது, ஜனனி கடத்தப்படுவது, அம்மா, அப்பா கொலை செய்யப்படுவது இவை அனைத்தையும் முன்கூட்டியே உணர்ந்து கொள்ளும் ரமீஸ் ராஜா, இதையெல்லாம் முன்கூட்டியே தடுத்தாரா? இல்லையா? என்பதுதான் மீதி.

    காணும் கனவு நிஜத்திலும் நடக்கும் என்பதுதான் கதையின் அடிப்படை. ஏற்கெனவே பார்த்த மாதிரி கதைதான் என்றாலும் சுவாரஸ்யமான முடிச்சுதான். ஆனால் திரைக்கதையை இன்னும் ஷார்ப்பாக்கியிருந்தால் செம விறுவிறுப்பாக இருந்திருக்கும்.

    படத்தின் நாயகன் ரமீஸ் ராஜா கவனிக்க வைக்கிறார். அனைத்து வகை நடிப்பையும் வெளிப்படுத்த முயற்சித்திருக்கிறார்.

    Vidhi Mathi Ulta Review

    ஜனனி படம் முழுக்க வருகிறார். உறுத்தலில்லாத நடிப்பு. பாடல் காட்சிகளில் நல்ல உடல் மொழியை வெளிப்படுத்தியிருக்கிறார்.

    அஸ்வின் விநாயகமூர்த்தியின் இசை, மார்ட்டின் ஜோவின் ஒளிப்பதிவும் படத்துக்கு ப்ளஸ்.

    டேனியல் பாலாஜியின் வில்லத்தனம் மிரட்டலாக வெளிப்பட்டுள்ளது.
    கருணாகரன், சென்ட்ராயன் ஆகியோரின் நடிப்பும் ஓகேதான். ஆனால் இந்த இருவரையும் இன்னும் நன்றாகப் பயன்படுத்தியிருக்கலாம். ஒன்று முழுக்க காமெடியாகச் சொல்லியிருக்கலாம்... அல்லது செம த்ரில்லராகவாவது கொண்டு போயிருக்கலாம். இரண்டையும் கலந்து கட்டியிருக்கிறார் இயக்குநர் விஜய் பாலாஜி. தடுமாற்றம் இல்லாத தேர்ந்த இயக்கம் என்பதால் போரடிக்காமல் போகிறது படம். ஆண்டின் முதல் படம், ஒரு முறை பார்க்கலாம்.

    English summary
    Vidhi Mathi Ulta is a watchable movie directed by Vijay Balaji.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X