twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வித்யா பாலனின் சகுந்தலா தேவியின் சினிமா கணக்கு வெற்றியா? தோல்வியா? ட்விட்டர் விமர்சனம் இதோ!

    |

    மும்பை: மனித கம்ப்யூட்டர் சகுந்தலா தேவியின் வாழ்க்கை வரலாறு படமான சகுந்தலா தேவி படம் இன்று வெளியாகி இருக்கிறது.

    கொரோனா அச்சம் காரணமாக ஆகஸ்ட் மாதமும் தியேட்டர்கள் திறக்கப்படாத சூழலில், சகுந்தலா தேவி அறிவித்தபடியே அமேசான் பிரைமில் இன்று வெளியானது.

    அனு மேனன் இயக்கத்தில் வித்யா பாலன் நடிப்பில் உருவாகி உள்ள இந்த படம் எப்படி இருக்கிறது என்பதை இந்த ட்விட்டர் விமர்சனத்தில் பார்ப்போம்.

     1980-ல் 'சகுந்தலா தேவி'க்கு அறிவிக்கப்பட்ட கின்னஸ் சர்டிபிகேட்.. வித்யா பாலன் உதவியால் ரீச் ஆனது! 1980-ல் 'சகுந்தலா தேவி'க்கு அறிவிக்கப்பட்ட கின்னஸ் சர்டிபிகேட்.. வித்யா பாலன் உதவியால் ரீச் ஆனது!

    ஹேப்பியான எமோஷனல் படம்

    ஹேப்பியான எமோஷனல் படம்

    அமேசான் பிரைமில் வெளியாகி உள்ள இந்த படத்தை பார்த்து வரும் நெட்டிசன்கள், இந்த படம் தொடர்பான கருத்துக்களை ஆன்லைனில் பதிவிட்டு வருகின்றனர். படத்தை பார்த்த இந்த ரசிகை, படம் மிகவும் ஹேப்பியாகவும் எமோஷனலாகவும் இருக்கிறது. வழக்கம் போல வித்யா பாலன் நடிப்பில் அசத்தி விட்டார். அவரது மகளாக நடித்திருக்கும் சான்யா மல்கோத்ராவின் நடிப்பு அபாரம். நடிகர் அமித் சாத் ஒவ்வொரு காட்சியிலும் அழகாக வந்து செல்கிறார் என பாசிட்டிவ் விமர்சனத்தை முன் வைத்துள்ளார்.

    சிறப்பான சமர்ப்பணம்

    சிறப்பான சமர்ப்பணம்

    கர்நாடகாவில் பிறந்து உலக அரங்கில் இந்தியர்களின் அறிவுத் திறமையை நிலை நாட்டிய பெண் கணித மேதை சகுந்தலா தேவிக்கு சரியான சமர்ப்பணமாக இந்த படம் அமைந்துள்ளது என்றும், சகுந்தலா தேவியாக வித்யா பாலன் காட்சிக்கு காட்சி மிரட்டி எடுத்துள்ளார். மாணவர்கள் நிச்சயம் இந்த படத்தை பார்க்க வேண்டும் என இந்த நெட்டிசன் தனது கருத்தை பதிவிட்டுள்ளார்.

    கணக்கு பிரியர்களுக்கு பிடிக்கும்

    கணக்கு பிரியர்களுக்கு பிடிக்கும்

    குழப்பமான புதிர்களை நொடிப் பொழுதில் தீர்ப்பது, பெரிய பெரிய கணக்குகளை கண் இமைக்கும் நேரத்தில் வலம் இருந்து இடமாகவும், இடம் இருந்து வலமாகவும் கூறும் அபார ஆற்றல் கொண்ட சகுந்தலா தேவியின் படத்தை கணக்கு பிரியர்கள் நிச்சயம் விரும்புவார்கள் என்றும், தான் ஒரு கணக்கு பிரியர் என்பதால், நள்ளிரவே கண் விழித்து இருந்து இந்த படத்தை பார்த்து விட்டேன். சூப்பர் என இந்த ரசிகரும் பாராட்டு தெரிவித்துள்ளார்.

    கோட்டை விட்ட இயக்குநர்

    கோட்டை விட்ட இயக்குநர்

    வித்யா பாலனின் டெரிஃபிக்கான நடிப்பும், அதற்கு போட்டியாக சான்யா மல்கோத்ராவின் ரியாக்‌ஷனும் படத்திற்கு வலிமை சேர்த்து இருந்தாலும், டிராமா தனமான திரைக்கதை பல இடங்களில் போர் அடிப்பதை தவிர்க்க முடியவில்லை என்றும், இயக்குநர் அனு மேனன் அந்த இடத்தில் மட்டும் கோட்டை விட்டார். ஒரு முறை பார்க்கலாம்.. இன்னும் நல்லாவே எடுத்திருக்கலாம் என இந்த விமர்சகர் கலவையான விமர்சனத்தை கொடுத்துள்ளார்.

    English summary
    No problem in Vidya Balan’s and other lead cast actors acting, only the dramatic script was dull the film Shakuntala Devi biopic.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X