Maargan Review: மார்கன் விமர்சனம்.. நிதானமான நடிப்பு.. பரபரப்பான திரைக்கதை.. விஜய் ஆண்டனிக்கு வெற்றி மாலையா?

Rating:
3.5/5
Star Cast: Vijay Antony, Ajay Dhishan, Samuthirakani, Brigida, Deepshikha, Mahanathi Shankar, Vinodh Sagar
Director: Leo John Paul

சென்னை: தெகிடி, முண்டாசுப்பட்டி உள்ளிட்ட படங்களுக்கு படத்தொகுப்பாளராக பணியாற்றிய லியோ ஜான்பால் மார்கன் படத்தின் மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளர். படத்தை தயாரித்தது மட்டுமல்லாமல் விஜய் ஆண்டனி கதையின் ஒரு நாயகனாகவும் நடித்துள்ளார். க்ரைம் இன்வெஸ்டிகேஷன் படமாக உருவாகியுள்ள இந்த படத்தில் மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் அறிமுகமாகியுள்ளார் நடிகர் அஜய் தீஷன். இவர்கள் மட்டுமல்லாமல் சமுத்திரக்கனி, பிரிஜிதா, தீப்ஷிகா, மகாநதி ஷங்கர், வினோத் சாகர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். க்ரைம் திரில்லர் வடிவில் உருவாகியுள்ள இந்த படம் எப்படி உள்ளது என்பது குறித்த விமர்சனத்தை பார்க்கலாம்.

படத்தின் கதையை பொறுத்தவரையில், சென்னையில் ஒரு பெண்ணை மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு, குப்பைத் தொட்டியில் வீசப்படுகிறார். கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடல் முழுவதும் கருப்பு நிறமாக மாறிவிடுகிறது. ஏற்கனவே மும்பையில் தனது மகளை யாரோ இதேபோல் கொலை செய்ததையும், தன்னையும் அதேபோல் கொலை செய்ய முயற்சித்ததால், காவல் அதிகாரியாக உள்ள விஜய் ஆண்டனி இந்த வழக்கை விசாரிக்க சென்னைக்கு வருகிறார்.

வழக்கை விசாரிக்க வந்த விஜய் ஆண்டனி மற்றும் காவல்துறைக்கு அஜய் தீஷன் மீது சந்தேகம் வருகிறது. அவர் தான் குற்றவாளி என நினைத்த போது, கதை வேறு கட்டத்திற்கு நகர்கிறது. அதன் பின்னரும் ஒரு பெண் அதேபோல் கொலை செய்யப்படுகிறார். கொலை செய்வது யார்? அவருக்கு என்ன நோக்கம்? எதனால் இப்படி கொலை செய்கிறார் என்பதுதான் மீதிக்கதை.

Vijay Antony Maargan Movie Review Screenplay And Making Was Very Good By Director Leo John Paul
Photo Credit:

திரைக்கதை எப்படி இருக்கு?: படத்தின் திரைக்கதையை பொறுத்தவரை முதல் பாதி மற்றும் இரண்டாம் பாதி என இரண்டிலும் ஒரே மீட்டரை மெயின்டையின் செய்தது படத்திற்கு பிளஸ். அதேபோல் முதல் பாதி திரைக்கதையில் அஜய் தீஷனின் ப்ளாஷ் - பேக்கிலேயே கொண்டு சென்றது படத்திற்கு கொஞ்சம் தொய்வு தான். அதேபோல், யுவாவின் ஒளிப்பதிவும் லியோ ஜான் பாலின் படத்தொகுப்பும் பரபரப்பை கூட்ட முயற்சிக்கிறது. படத்தை எழுதி இயக்கியது மட்டுமல்லாமல் படத்தொகுப்பு லியோ ஜான் பால் செய்துள்ளதால், படத்தொகுப்பும் கவனிக்க வைக்கிறது. விஜய் ஆண்டனியின் பின்னணி இசை பயத்தையோ பரபரப்பையோ கூட்டும் அளவுக்கு இல்லை என்றாலும், படத்துக்கு ஓரளவுக்கு சப்போர்ட் செய்துள்ளது. நடிப்பு மற்றும் மேக்-அப்பில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்.

மைனஸ்: படத்தில் மைனஸ் என்று எடுத்துக் கொண்டால், தேவையில்லாத சில காட்சிகள் இடம் பெற்றுள்ளன. குறிப்பாக அஜய் தீஷனின் மொபைல் போனை எதற்காக அவரது பயிற்சியாளர் எதற்காக திருடுகிறார் என்ற கேள்விக்கு படத்தில் பதில் இல்லாதது ஏமாற்றம். ஃப்ளாஷ்பேக்கில் பயன்படுத்தப்பட்டுள்ள சி.ஜி. காட்சிகளை இன்னும் தத்ரூபமாக கொண்டுவர முயற்சித்திருக்கலாம்.

Vijay Antony Maargan Movie Review Screenplay And Making Was Very Good By Director Leo John Paul
Photo Credit:

மொத்தத்தில் படம்: அதேபோல், அஜய் தீஷன் தனது கற்பனையில் கொலை நடந்த இடத்திற்கும், கொலையாளியை பின் தொடர்ந்து செல்வதையும் பார்க்கும்போது இது டைம் டிராவல் படமா என்ற சந்தேகமே எழுந்துவிட்டது. அதற்கு படத்திலேயே அறிவியல் பூர்வமாக விளக்கம் கொடுத்தது அருமை. படத்தின் கிளைமேக்ஸில் கொலையாளியின் நோக்கம் மட்டுமல்லாது, முந்தைய கொலைகள் எல்லாவற்றையும் கனெக்ட் செய்ததற்காகவே இயக்குநருக்கு தனி பாராட்டுகள். கிளைமாக்ஸ் ட்விஸ்ட் ரசிகர்களை திருப்தியுடனே சீட்டில் இருந்து எழுந்து செல்ல வைக்கிறது. மக்கள் கவனம் பெற்றால் மார்கன் விஜய் ஆண்டனி திரை வாழ்க்கையில் நல்ல மார்க் வாங்கிய படமாக மாறும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X