Raththaam Twitter Review: தமிழ்ப்படம் இயக்குநரின் வித்தியாசமான முயற்சி.. ரத்தம் ட்விட்டர் விமர்சனம்!

சென்னை: தமிழ்ப்படம், தமிழ்ப்படம் 2 உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் சி.எஸ். அமுதன் பல ஆண்டுகள் கழித்து விஜய் ஆண்டனியை வைத்து இயக்கி உள்ள ரத்தம் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது.

நடிகர் விஜய் ஆண்டனி கடந்த மாதம் தனது மூத்த மகளை பறிகொடுத்த நிலையில், மனவேதனையில் மூழ்கி இருந்தாலும், இந்த படத்திற்கான புரமோஷனுக்கு தனது இளைய மகளுடன் கலந்து கொண்டது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

இந்நிலையில், ரத்தம் திரைப்படம் ரசிகர்களை ஈர்த்ததா? அல்லது சோதித்ததா? என்பது குறித்த ட்விட்டர் விமர்சனங்களை இங்கே காணலாம் வாங்க..

பக்கா இன்வெஸ்டிகேடிவ் த்ரில்லர்: இயக்குநர் சி.எஸ். அமுதன் தன்னால் காமெடி படங்களை மட்டுமல்ல இன்டென்ஸான இன்வெஸ்டிகேடிவ் த்ரில்லர் படத்தையும் கொடுக்க முடியும் என்பதை ரத்தம் படத்தின் மூலம் நிரூபித்து இருக்கிறார் என ரமேஷ் பாலா தனது விமர்சனத்தை கொடுத்துள்ளார். மேலும், இந்த படத்தின் திரைக்கதை ரசிகர்களை கடைசி வரை கட்டிப் போட வைத்துள்ளது சிறப்பு என்றும் 4/5 ரேட்டிங் கொடுத்து பாராட்டி உள்ளார்.

Vijay Antony Raththam Twitter Review and Reactions in Tamil is here

ஆத்மிகா ரிவ்யூ: விஜய் ஆண்டனியுடன் கோடியில் ஒருவன் படத்தில் ஜோடியாக நடித்த நடிகை ஆத்மிகா ரத்தம் படத்திற்கு தனது விமர்சனத்தை கொடுத்துள்ளார். சி.எஸ். அமுதன் இயக்கியுள்ள மெகா சர்ப்ரைஸ் சம்பவம் தான் இந்த ரத்தம் திரைப்படம் என்றும் விஜய் ஆண்டனிக்கு இது வாழ்க்கையிலேயே மறக்க முடியாத படமாக இருக்கும் எனக் கூறியுள்ளார்.

Vijay Antony Raththam Twitter Review and Reactions in Tamil is here

ஒரே மஹிமா மயம்: கடந்த வாரம் மஹிமா நம்பியார் நடிப்பில் சந்திரமுகி 2 வெளியான நிலையில், இன்று ஒரே நாளில் ரத்தம், 800 என இரு படங்களிலும் அவரே ஹீரோயினாக நடித்துள்ளார். சமீபத்தில், மலையாளத்தில் வெளியான ஆர்டிஎக்ஸ் படத்திலும் மஹிமா ஹீரோயினாக நடித்து அசத்திய நிலையில், ஒரே மஹிமா மயமாக உள்ளது.

Vijay Antony Raththam Twitter Review and Reactions in Tamil is here

20 நிமிஷம் ஸ்லோ: ரத்தம் திரைப்படம் ஆரம்பத்தில் ஒரு 20 நிமிஷம் ஸ்லோகாவாக இருக்கும். ஆனால், அதன் பின்னர் கதைக்குள் செல்லும் போது எந்தளவுக்கு இந்த படத்தை ரிசர்ச் செய்து இயக்குநர் சி.எஸ். அமுதன் இயக்கி உள்ளார் என்பது புரியும். இதற்காக அவர் 2.5 ஆண்டுகள் செலவிட்டுள்ளார் என்பது தான் மலைக்க வைக்கிறது என இந்த நெட்டிசன் விமர்சித்துள்ளார்.

Vijay Antony Raththam Twitter Review and Reactions in Tamil is here

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X