Pichaikkaran 2 Review: பில்டப் பண்ண அளவுக்கு வொர்த்தா பிச்சைக்காரன் 2? ட்விட்டர் விமர்சனம் இதோ!

சென்னை: விஜய் ஆண்டனி இயக்கி நடித்துள்ள பிச்சைக்காரன் 2 திரைப்படத்துக்கு கலவையான விமர்சனங்கள் குவிந்துள்ளன.

இயக்குநர் சசி இயக்கத்தில் கடந்த 2016ம் ஆண்டு வெளியான பிச்சைக்காரன் திரைப்படம் விஜய் ஆண்டனி கரியரில் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது.

 Vijay Antony’s Pichaikkaran 2 Movie Review in Tamil and Ratings

இந்நிலையில், பிச்சைக்காரன் 2 படத்தை விஜய் ஆண்டனியே இயக்குநர் அவதாரம் எடுத்து இயக்கி உள்ளார். இன்று வெளியான பிச்சைக்காரன் 2 படம் எப்படி இருக்கு என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வரும் கமெண்ட்டுகளை இங்கே பார்க்கலாம் வாங்க..

பிச்சைக்காரன் 2 ரிலீஸ்: பிச்சைக்காரன் முதல் பாகத்துக்கும் இந்த 2வது பாகத்துக்கும் டைட்டிலை தவிர வேறு எந்தவொரு சம்பந்தமும் இல்லை என்கின்றனர். இந்த படம் முழுக்க முழுக்க வேறு ஒரு கதை. மேலும், கதை திருட்டு சர்ச்சையிலும் விஜய் ஆண்டனி சிக்கினார். அதன் பின்னர் வழக்கு நடைபெற்று விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் 2 படத்தை ரிலீஸ் செய்ய அனுமதி கிடைத்த நிலையில், இன்று வெளியாகி உள்ளது பிச்சைக்காரன் 2.

இந்த படத்தில் ஹீரோயினாக காவ்யா தாப்பர் நடித்துள்ளார். ரித்திகா சிங், தேவ் கில், மன்சூர் அலி கான், ஜான் விஜய் மற்றும் ஹரீஷ் பெரடி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

மொக்கைக்காரன்: பிச்சைக்காரன் - மொக்கைக்காரன் என முதலிலேயே பார்ட் 2வை பங்கமாக நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். விஜய் ஆண்டனி இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த படம் கொஞ்சம் கூட முதல் பாகம் அளவுக்கு சுவாரஸ்யமாக இல்லை என்றும் அந்த ஆன்டி பிகிலி கான்செப்ட் மட்டுமே புதுமையாக உள்ளது என்றும் நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

 Vijay Antony’s Pichaikkaran 2 Movie Review in Tamil and Ratings

இதுதான் படத்தின் ரிசல்ட்: பிச்சைக்காரன் 2 படம் எப்படி இருக்குன்னு கேக்குறவங்களுக்காக இந்த போட்டோவை அனுப்புறேன். இது எடிட் செய்யப்படல, இதே மாதிரி தான் படமும் செம மொக்கையா இருக்கு.. பிச்சைக்காரன் டைட்டிலை நம்பி ஏமாந்து போகாதீங்க, சசி வேறலெவல் இயக்குநர் விஜய் ஆண்டனி இப்போ தான் டைரக்‌ஷன் கத்துக்குறாரு என கலாய்த்துள்ளார்.

 Vijay Antony’s Pichaikkaran 2 Movie Review in Tamil and Ratings

இதுதான் கதை: வீடு இல்லாத பிச்சைக்காரனின் மூளை பணக்காரனுக்கு மாற்று அறுவை சிகிச்சை மூலம் பொருத்தப்பட அவன் செய்யும் வேலை தான் இந்த படத்தின் கதை என நெட்டிசன் ஒருவர் பதிவிட்டுள்ளார். அந்த கான்செப்ட் ரசிகர்களுக்கு பிடித்து விட்டால் இன்னொரு பிளாக்பஸ்டர் ஹிட்டாக பிச்சைக்காரன் 2 மாறும் என்றும் பதிவிட்டுள்ளார்.

 Vijay Antony’s Pichaikkaran 2 Movie Review in Tamil and Ratings

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X