Kolai Twitter Review : விஜய் ஆண்டனியின் "கொலை" படம் எப்படி இருக்கு? ட்விட்டர் விமர்சனம்
சென்னை: Kolai Review (கொலை விமர்சனம்) விஜய் ஆண்டனி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் கொலை படத்தின் ட்விட்டர் விமர்சனத்தை பார்க்கலாம்.
சுக்ரன் படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் விஜய் ஆண்டனி. அந்தப் படத்தில் அவர் பாடல்களுக்கு மட்டும் இசையமைத்திருந்தார். இதனையடுத்து ஜீவா நடித்த டிஷ்யூம் படத்திற்கு இசையமைத்ததன் மூலம் அடையாளப்பட்டார் விஜய் ஆண்டனி. இருப்பினும் அவரை முன்னணி இசையமைப்பாளர் வரிசையில் அமர வைத்தது காதலில் விழுந்தேன் திரைப்படம்.

ஹீரோவான விஜய் ஆண்டனி: இந்தச் சூழலில் விஜய் ஆண்டனி 'நான்' படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். முதல் படத்திலேயே கனகச்சிதமான நடிப்பை வழங்கிய விஜய் ஆண்டனிக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் அமைந்தன. அப்படி அவர் நடித்த 'சலீம்' படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனையடுத்து அவர் நடித்த பல படங்களில் பிச்சைக்காரன் மட்டும்தான் ஹிட்டடித்தது.
இயக்குநரான விஜய் ஆண்டனி: பிச்சைக்காரன் கொடுத்த வெற்றியை அடுத்து அந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை விஜய் ஆண்டனியே தயாரித்து இயக்கினார். பிச்சைக்காரன் 1 போல படம் இருக்கும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அதுமட்டுமின்றி விஜய் ஆண்டனியின் நடிப்பு ஒரே மாதிரி இருப்பதாகவும் விமர்சனம் எழுந்தது. இதன் காரணமாக படத்துக்கு கலவையான விமர்சனமே கிடைத்தது.
கொலை: பிச்சைக்காரன் 2 படத்துக்கு பிறகு அவர் பாலாஜி கே.குமார் இயக்கத்தில் கொலை படத்தில் நடித்திருக்கிறார். அவருடன் ரித்திகா சிங், ராதிகா சரத்குமார் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். படமானது இன்று திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. த்ரில்லர் ஜானரில் உருவாகியிருக்கும் கொலை எப்படி இருக்கிறது என்பது குறித்து நெட்டிசன்கள் ட்விட்டரில் பதிவிட்டுவருகின்றனர்.
இதற்கு முன் பார்த்ததில்லை: கொலை படம் த்ரில்லர் ஜானரில் உருவாகியிருக்கிறது. இதற்கு முன்னதாக விஜய் ஆண்டனியை இப்படி ஒரு அவதாரத்தில் பார்த்ததில்லை. இசையும், விஷுவல்களும் அருமையாக இருக்கின்றன. பாலாஜி குமார் நல்ல கம்பேக் கொடுத்திருக்கிறார் என இந்த நெட்டிசன் பதிவு செய்திருக்கிறார்.
நல்ல தயாரிப்பு: கொலை திரைப்படம் ஒரு நல்ல தயாரிப்பு. இதை தயாரித்ததற்கு வாழ்த்துகள். ரசிகர்களையும், அவர்களது புத்திசாலித்தனத்தையும் நீங்கள் மதித்திருக்கிறீர்கள் என பிரபல சினிமா விமர்சகர் பாண்டா பிரசாந்த் கொலை படத்தை பாராட்டி ட்வீட் செய்திருக்கிறார்.
முதல் பாதி மோசம்: கொலையை விசாரிக்கும் காட்சிகள் நன்றாக இருக்கின்றன. விஷுவலும், செட் ஒர்க்கும் சிறப்பு. முதல் பாதி மோசம், இரண்டாம் பாதி பரவாயில்லை. ஒரு மாடல் கொலை செய்யப்படுகிறார் அந்த கொலைக்கு பின்னாடி இருக்கக்கூடிய காரணங்களை தேடி ஒரு ஒரு போலீஸ் வந்து கண்டுபிடிக்கிறான் அது தான் கதை என இந்த நெட்டிசன் கதையையே சொல்லிவிட்டார்.
கொலை இல்லை தற்கொலை: அதேபோல் இந்த நெட்டிசன் கொலை படத்துக்கு ஒற்றை வார்த்தையில் விமர்சனம் கூறியிருக்கிறார். அதாவது கொலை = தற்கொலை என கூறியிருக்கிறார். படம் படு மொக்கையாக இருக்கிறது என்பதை அவர் இப்படி வெளிப்படுத்தியிருக்கிறார்.
கொலை டல்: கொலை படம் டல். புத்திசாலித்தனாமமான அணுகுமுறை. ஆனால் கதை சொல்லல் ரொம்ப தாமதமாக இருக்கிறது. ஆனால் அது சுவாரஸ்யமானதாக இருந்திருக்க வேண்டும். படம் முழுவதும் விஜய் ஆண்டனி நிதானமாக இருக்கிறார். ரித்திகா ஸ்கோர் செய்ய ஒன்றுமே இல்லை. அலுப்பூட்டும் கொலை மர்மம் இந்த நெட்டிசன் பதிவிட்டிருக்கிறார்.
இப்படி படத்துக்கு பாஸிட்டிவ், நெகட்டிவ் விமர்சனங்கள் தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றன. இன்றைய நாள் முடிவில் படத்தின் உண்மையான ரிசல்ட் தெரியவந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











