Romeo Review: விஜய் ஆண்டனியின் ‘ரோமியோ’ எப்படி இருக்கு?.. ட்விட்டர் விமர்சனம் இதோ!

சென்னை: இயக்குநர் விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, மிருணாளினி ரவி நடிப்பில் உருவான ரோமியோ திரைப்படம் இன்று அதிகபட்சமாக 1200 ஸ்க்ரீன்களில் வெளியாகி இருக்கிறது. தேர்தலை முன்னிட்டு பல படங்கள் வெளியாகாமல் உள்ள நிலையில், ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இன்று தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் பல பெரிய படங்கள் வெளியாகி உள்ளன.

தமிழில் ஜி.வி. பிரகாஷ் குமார், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகி உள்ள டியர் மற்றும் விஜய் ஆண்டனி, மிருணாளினி ரவி நடித்துள்ள ரோமியோ படங்கள் வெளியாகி உள்ளன.

Vijay Antony s Romeo Twitter Review and Reactions in Tamil

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரிலேயே பிளாக்பஸ்டர் என அறிவிப்பு வெளியிட்ட ரோமியோ திரைப்படம் உண்மையாகவே பிளாக்பஸ்டர் ஹிட் அடிக்குமா? அல்லது கடந்த சில விஜய் ஆண்டனி படங்களை போல சொதப்பியதா? என்பது குறித்து ரசிகர்கள் கொடுத்துள்ள ட்விட்டர் விமர்சனங்களை இங்கே காணலாம் வாங்க..

விஜய் ஆண்டனியின் ரோமியோ: பிச்சைக்காரன் 2, கொலை, ரத்தம் என வரிசையாக நெகட்டிவ் தலைப்புகளுடன் படங்களை கொடுத்து வந்த விஜய் ஆண்டனிக்கு பெரிதாக வெற்றி ஏதும் கிடைக்கவில்லை. பிச்சைக்காரன் படம் ஓடிய அளவுக்கு அதன் இரண்டாம் பாகம் ஓடவில்லை. கொலை மற்றும் ரத்தம் படங்கள் சொதப்பிய நிலையில், தற்போது ரசிகர்களை கவரும் விதமாக ஜாலி மோடில் ரோமியோ எனும் படத்தை இந்த சம்மருக்கு ரிலீஸ் செய்துள்ளார் விஜய் ஆண்டனி. விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக மிருணாளினி ரவி நடித்துள்ளார்.

சரக்கு அடிக்கும் போஸ்டர் முதல் ஜீசஸ் சர்ச்சை வரை: ரோமியோ படத்தில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் ஃபர்ஸ்ட் நைட்டில் ஹீரோயின் சரக்கு அடிப்பது போன்ற காட்சி இடம் பெற்றது சர்ச்சையை கிளப்பியது. பத்திரிக்கையாளர் சந்திப்பில் அதற்கு விளக்கம் அளிக்க நினைத்த விஜய் ஆண்டனி ஜீசஸ் குடிக்கவில்லையா எனக் கேட்டது மேலும் சர்ச்சையை கிளப்பியது. இதெல்லாம் படத்தின் பிரமோஷனுக்காக பயன்படும் என நினைத்தார்களா என்கிற கேள்வியும் எழுந்தது.

ஃபீல் குட் படம்: தயாரிப்பாளர் தனஞ்செயன் ரோமியோ படம் ஒரு நல்ல ஃபீல் குட் படம் என்றும் எமோஷனல் ஃபேமிலி எண்டர்டெயினர் என்றும் பாராட்டியுள்ளார். விஜய் ஆண்டனி மற்றும் மிருணாளினி ரவி இருவருமே நடிப்பில் அசத்தி உள்ளதாக பதிவிட்டுள்ளார்.

Vijay Antony s Romeo Twitter Review and Reactions in Tamil

மனைவியை காதலிக்கும் ஒன் சைடு லவ்வர்: ரோமியோ திரைப்படத்தின் கதை வித்யாசமாக உருவாக்கப்பட்டுள்ளது என்றும் மனைவியை காதலிக்கும் ஒன்சைடு லவ்வராக விஜய் ஆண்டனி தனது வித்தியாசமான நடிப்பில் ரசிகர்களை கவர்ந்துள்ளார். படத்தில் இடம்பெற்றுள்ள காமெடி காட்சிகள் நல்லாவே ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. ஹீரோயின் மிருணாளினி ரவியின் பர்ஃபார்மன்ஸ் சூப்பர் என இந்த ரசிகர் தனது விமர்சனத்தை கொடுத்துள்ளார்.

Vijay Antony s Romeo Twitter Review and Reactions in Tamil

சில குறைகள் இருக்கு: அறிவழகன் எனும் கதாபாத்திரத்தில் விஜய் ஆண்டனி இதற்கு முன் இல்லாத அளவுக்கு வித்தியாசமாக திரையில் தெரிகிறார். அவரது நடிப்பு தான் இந்த படத்துக்கு பெரிய பலம். இந்தப்படத்தில் சில குறைகள் இருக்கு. ஆனால் அதெல்லாம் பரவாயில்லை. இந்த படம் என்னை சிரிக்க வைத்தது சில இடங்களில்அழவும் வைத்தது எதை இந்த ரசிகரும் படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனத்தை கொடுத்துள்ளார். இந்த படமாவது தமிழ் சினிமாவுக்கு வசூலில் வெற்றிப் படமாக அமையுமா? என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம்.

Vijay Antony s Romeo Twitter Review and Reactions in Tamil

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X