Family Star Review: ராஷ்மிகா மந்தனா பிறந்தநாளில் வெளியான விஜய் தேவரகொண்டா படம் சரியான கிரிஞ்சா?
சென்னை: விஜய் தேவரகொண்டா, மிருணாள் தாகூர் நடிப்பில் கீதா கோவிந்தம் படத்தை இயக்கிய பரசுராம் இயக்கத்தில் இன்று வெளியாகி உள்ள படம் தான் ஃபேமிலி ஸ்டார். படத்தின் டைட்டில் மட்டுமின்றி படமே ஒரே கிரிஞ்ச் என தெலுங்கு ரசிகர்களே கழுவி ஊற்றி வருகின்றனர்.
இந்த படத்தின் புரமோஷனுக்கு வாயே பேசமாட்டேன் என ஓவராக வாய் பேசிய விஜய் தேவரகொண்டா மீண்டும் ஒரு மொக்கை படத்தையே ரசிகர்கள் தலையில் கட்டியிருப்பதாக படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் கிரிஞ்ச் மேக்ஸ் என ட்ரோல் செய்து வருகின்றனர்.

விஜய் தேவரகொண்டாவும் ராஷ்மிகா மந்தனாவும் காதலர்கள் என கிசுக்கப்பட்டு வரும் நிலையில், ராஷ்மிகா மந்தனா பிறந்தநாளில் தான் படத்தை வெளியிடுவேன் என வியாழக்கிழமை ரிலீஸை கூட தவிர்த்து விட்டாரா விஜய் தேவரகொண்டா என்றும் கேள்விகள் எழுந்துள்ளன.
ஃபிளாப் ஸ்டாரான விஜய் தேவரகொண்டா: அர்ஜுன் ரெட்டி படம் விஜய் தேவரகொண்டாவுக்கு மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. அந்த படத்தை தொடர்ந்து ராஷ்மிகா மந்தனாவுடன் இணைந்து விஜய் தேவரகொண்டா நடித்த கீதா கோவிந்தம் திரைப்படம் வெற்றிப் பெற்றது. ஆனால், அதன் பின்னர் விஜய் தேவரகொண்டா நடித்த ஒரு டஜன் படங்களும் உப்புமா படங்களாக வெளியான நிலையில், விஜய் தேவரகொண்டாவே ஒரு கட்டத்தில் கடுப்பாகி விட்டார். கடந்த ஆண்டு சமந்தாவுடன் நடித்து வெளியான குஷி திரைப்படம் சுமாரான வெற்றியை பெற்ற நிலையில், ஃபேமிலி ஸ்டார் படம் மொக்கை என ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
ஃபேமிலி ஸ்டார் எப்படி?: ஒரே ஆட்டோவில் இருந்து 9 பேர் வருவது, விஜய் தேவரகொண்டா அழகை பார்த்து அவரை வெளிநாட்டு பெண்கள் கடத்திச் சென்று லவ் டார்ச்சர் கொடுப்பது, விஜய் தேவரகொண்டா வேலைக்கு சேர்ந்த பின்னர் வெளிநாட்டினர் லுங்கி மட்டும் அணிந்துக் கொண்டு மேலே சட்டைப் போடாமல் திரிவது, மாற்றுத்திறனாளியுடன் திருமணம் செய்துக் கொள்வதற்கு மொக்கை காரணம் சொல்வது என படம் முழுக்க மகேஷ் பாபு, கீர்த்தி சுரேஷ் நடித்து வெளியான சர்காரு வாரி பாட்டா படத்துக்கு மேல் கிரிஞ்சாக உள்ளது என ரசிகர்கள் வெளுத்து வாங்கி வருகின்றனர்.

பிலோ ஆவரேஜ்: விஜய் தேவரகொண்டா நடித்து வெளியான ஃபேமிலி ஸ்டார் திரைப்படம் முதல் பாதி நல்லா தான் இருந்தது. ஆனால், 2வது பாதியில் வெளிநாட்டுக்கு கதையை கொண்டு போய் இயக்குநர் பரசுராம் விஜய் தேவரகொண்டாவை மட்டுமல்ல நம்மையும் வச்சு செய்து விட்டார். கிரிஞ்ச் மேக்ஸ் என விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.

டிசாஸ்டர் தேவரகொண்டா: பாவம் தில் ராஜு நிலைமை, இந்த டிசாஸ்டர் தேவரகொண்டாவை நம்பி இன்னும் 2 படங்களில் இவரை ஒப்பந்தம் செய்துள்ளார் என தெலுங்கு ரசிகர்கள் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியாகி இருக்கும் ஃபேமிலி ஸ்டார் படத்தை வெளுத்து வாங்கி வருகின்றனர்.

தேவரகொண்டா உஷாராகுங்க: புதிய இயக்குநர்களை நம்பி படம் பண்ண மாட்டேன் என பழைய மொக்கை இயக்குநர்களை நம்பி படங்களில் நடிப்பதை தவிர்த்து விட்டு நல்ல இயக்குநர்களையும் கதைகளையும் தேடி படம் பண்ணுங்க, இப்படியே தொடர்ந்து ஃபிளாப் கொடுத்தால் உங்க கரியர் காலியாகி விடும் என ரசிகர்கள் அலர்ட் செய்து வருகின்றனர். நான் என்ன வச்சிக்கிட்டாடா வஞ்சனை பண்றேன் என விஜய் தேவரகொண்டா மைண்ட் வாய்ஸ் இருக்கும் என ஏகப்பட்ட ட்ரோல்கள் பறக்கின்றன.



Click it and Unblock the Notifications











