Hit List Review: ஹிட் லிஸ்ட் விமர்சனம்.. வெற்றிப் பெற்றாரா விக்ரமன் மகன்?.. படம் எப்படி இருக்கு?
நடிகர்கள்: விஜய் கனிஷ்கா, சரத்குமார், கெளதம் மேனன்
இசை: சி. சத்யா
நேரம்: 2 மணி நேரம் 8 நிமிடங்கள்
இயக்கம்: சூர்ய கதிர் & கார்த்திகேயன்
சென்னை: குடும்பங்கள் கொண்டாடும் பல வெற்றிப் படங்களை கொடுத்து ரசிகர்களை குடும்பம் குடும்பமாக தியேட்டருக்கு வரவழைத்த இயக்குநர் விக்ரமன் தனது மகன் விஜய் கனிஷ்காவை ஹீரோவாக ஹிட் லிஸ்ட் படத்தின் மூலம் அறிமுகப்படுத்தி உள்ளார். கே.எஸ். ரவிக்குமார் தயாரிப்பில் உருவாகி உள்ள இந்த படத்தை கே.எஸ். ரவிக்குமாரின் உதவி இயக்குநர்களான சூர்ய கதிர் மற்றும் கார்த்திகேயன் இயக்கி உள்ளனர்.
ஹிட் லிஸ்ட் படத்தில் விஜய் கனிஷ்காவுடன் இணைந்து சரத்குமார், கெளதம் மேனன், ஸ்ம்ருதி வெங்கட், அபி நக்ஷத்ரா, ஐஸ்வர்யா தத்தா, முனீஷ்காந்த், பால சரவணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

விஜய் கனிஷ்காவின் அறிமுக படமான ஹிட் லிஸ்ட் திரைப்படம் ஹிட் அடித்ததா? அல்லது பல்பு வாங்கியதா? என்பது குறித்த விரிவான விமர்சனத்தை இங்கே பார்க்கலாம் வாங்க..
ஹிட் லிஸ்ட் கதை: யாருக்கும் தீங்கு செய்யக் கூடாது என நினைத்து அசைவம் கூட சாப்பிடாமல் ஐடி கம்பெனியில் வேலை செய்து வாழ்ந்து வரும் ஹீரோவின் குடும்பத்தில் உள்ள அம்மாவையும் சகோதரியையும் மாஸ்க் மேன் கடத்திக் கொண்டு செல்கிறான். கடத்தப்பட்ட இருவரையும் வைத்து ஹீரோவை பிளாக்மெயில் செய்து சில கொலைகளை செய்ய வைக்கிறான். அந்த கொலைகளை விசாரிக்க வரும் போலீஸ் அதிகாரியாக சரத்குமார் நடித்துள்ளார். யார் அந்த மாஸ்க் மேன் என்பது கடைசி வரை ட்விஸ்ட்டாக செல்கிறது. ஹீரோவாக அறிமுகமாகியுள்ள விஜய் கனிஷ்கா மாஸ்க் மேன் மற்றும் போலீஸார் என இருவரிடமும் சிக்கித் தவிக்கும் நிலையில், அவர் தனது அம்மாவையும், சகோதரியையும் மீட்டாரா? இல்லையா? என்பது தான் இந்த ஹிட் லிஸ்ட் படத்தின் கதை.
படம் எப்படி இருக்கு?: ஹாலிவுட்டில் சில படங்கள் இதே பேட்டர்னில் வந்துள்ளன. ஸ்பைடர் படத்திலும் எஸ்.ஜே. சூர்யா மாஸ்க் மேனாக நடித்திருப்பார். ஜவான் படத்திலும் சில காட்சிகளில் ஷாருக்கான் அப்படி நடித்திருப்பார். ஆனால், இங்கே கடைசி வரை மாஸ்க் மேன் யார் என்பது தான் ட்விஸ்ட்டாகவே உள்ளது. அதிகம் படங்களை பார்க்கும் ரசிகர்கள் அந்த ட்விஸ்ட்டை ஸ்டார் படத்தின் கிளைமேக்ஸ் காட்சியை போலவே ஈஸியாக கணித்து விடுவார்கள். அந்தளவுக்குத்தான் இந்த படத்தை கே.எஸ். ரவிக்குமாரின் உதவி இயக்குநர்கள் இயக்கி உள்ளனர். சாதாரண ஆடியன்ஸ்களுக்கு அந்த ட்விஸ்ட் ஒரு சுவாரஸ்யத்தை நிச்சயம் கொடுக்கும்.
விக்ரமன் மகன் நடிப்பு எப்படி?: தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர்கள் நிறைந்து வரும் சூழலில் விஜய்யின் பெயரை வைத்துக் கொண்டு பலர் ஹீரோக்களாக வலம் வரத் தொடங்கியுள்ளனர். விஜய் கனிஷ்கா எனும் பெயருடன் அறிமுகமாகி உள்ள விக்ரமன் மகன் முதல் படத்தில் நடிப்பது போன்று தெரியாத அளவுக்கு இந்த படத்துக்காக நடிப்பு பயிற்சியை எடுத்துக் கொண்டு நடித்துள்ள நிலையில், அவரது நடிப்பு பார்க்கும்படியாக உள்ளது. ஆனால், இன்னமும் நடிப்பில் பல இடங்களில் அவர் கவனம் செலுத்த வேண்டியது முக்கியம்.
பிளஸ்: இந்த படத்துக்கு பிளஸ் என்றாலே அது சரத்குமாரின் தேர்ந்த நடிப்பு தான். கதை, திரைக்கதை என அனைத்துமே சுமாராகவே உள்ள நிலையிலும் தனது நடிப்பால் படத்தை தாங்கி நிற்கிறார். முதல் பாதியில் அவருக்கு சண்டைக் காட்சிகள் இல்லை என்றாலும் இரண்டாம் பாதியில் சரத்குமார் போடும் சண்டை அப்ளாஸ் அள்ளுகிறது. சமுத்திரகனி, கெளதம் மேனன், அபி நக்ஷத்ரா உள்ளிட்டோர் தங்களுக்கு கொடுத்த வேலையை செய்துள்ளனர். நீட் பிரச்சனையை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இந்த படம் ஓரளவுக்கு பெட்டராகவே உள்ளது.
மைனஸ்: படத்தில் பெரிதாக ரொமான்ஸ் மற்றும் பாடல்கள் இல்லாதது ஆறுதல் தான் என்றாலும் பல இடங்களில் படம் படுத்து விடுவது ரசிகர்களை கடுப்பாகிறது. கிளைமேக்ஸில் அந்த மாஸ்க் மேன் யார் என்பது ரிவீல் ஆகும் இடங்கள் ரசிகர்களை எந்தளவுக்கு ஈர்க்கும் என்பது கேள்விக்குறிதான். விஜய் கனிஷ்கா படத்தை பார்க்க ரசிகர்கள் தியேட்டர்களுக்கு சென்று ஆதரவு அளிப்பார்களா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications











