Don't Miss!
- Technology
வாத்தி கம்மிங்.. என்னது இது பார்முலா இல்லையா? போன் நம்பரா? முடுஞ்சா கண்டுபிடிங்க பார்க்கலாம்.!
- News
அதிமுக பொதுச்செயலாளர் பதவி.. சசிகலாவின் மேல்முறையீட்டு மனுவை நிராகரிக்க முடியாது - ஹைகோர்ட் அதிரடி
- Lifestyle
உங்க பிறந்த தேதி 2,11,20 மற்றும் 29 இதுல ஒன்னா? அப்ப உங்களுக்கு எப்படிப்பட்ட எதிர்காலம் காத்திருக்கு தெரியுமா?
- Finance
இந்தியாவுக்குக் கிளம்பும் நேரம் வந்தாச்சு.. NRI டெக் ஊழியர்கள் கண்ணீர்..!
- Sports
ஒரே போட்டியில் பல மாற்றங்கள்.. நியூசி, உடனான 3வது ODI போட்டி..ப்ளேயிங் 11ல் ரோகித் சர்மா பலே திட்டம்
- Automobiles
இந்த காருக்கு வெயில்தான் எரிபொருள்.. கரண்ட், பெட்ரோல், டீசல்னு எதுமே தேவையில்ல! காச சூப்பரா மிச்சப்படுத்தலாம்!
- Education
LIC ADO Recruitment 2023:எல்.ஐ.சி.,யில் 1516 பட்டதாரிகளுக்கு வாய்ப்பு...!
- Travel
உலகின் 7வது பழமையான நாடு இந்தியா – முதலிடத்தில் இருப்பது இந்த நாடா?
Vaarasudu Review: டோலிவுட்டில் கெத்துக் காட்டினாரா விஜய்.. வாரிசு தெலுங்கு வெர்ஷன் எப்படி இருக்கு?
ஹைதராபாத்: வாரிசு படத்தின் தெலுங்கு வெர்ஷனுக்கு டைட்டில் வாரசுடு என வைக்கப்பட்டுள்ளது. ஜனவரி 11ம் தேதி தமிழில் வெளியான நிலையில், தெலுங்கிலும் வாரிசு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், பாலகிருஷ்ணாவின் வீர சிம்ஹா ரெட்டி மற்றும் சிரஞ்சீவியின் வால்டர் வீரய்யா உள்ளிட்ட சீனியர் நடிகர்களின் படங்கள் இந்த சங்கராந்தியை முன்னிட்டு அங்கே வெளியாவதால் வாரிசு படத்தின் தெலுங்கு வெர்ஷனை இன்று வெளியிட்டுள்ளனர்.
தயாரிப்பாளர் தில்ராஜு மற்றும் இயக்குநர் வம்சி இருவருமே தெலுங்கு சினிமாவை சேர்ந்தவர்கள் என்பதால் வாரிசு திரைப்படம் தெலுங்கு ரசிகர்களை எந்த அளவுக்கு ஈர்த்துள்ளது என்பது குறித்து ட்விட்டரில் நெட்டிசன்கள் பதிவிட்டு வரும் விமர்சனத்தை இங்கே பார்ப்போம்..
பொங்கல் வின்னர் வாரிசு... ரியல் வின்னர் துணிவு... சபாஷ் சரியான போட்டி... ஆனா ரிசல்ட் இதுதான்

வெளியானது வாரசுடு
தமிழ்நாட்டை போலவே நடிகர் விஜய்க்கு ஆந்திரா, தெலங்கானா, கேரளா உள்ளிட்ட இடங்களிலும் அதிகளவில் ரசிகர்கள் உள்ளனர். வாரசுடு படம் இன்று வெளியாகி உள்ள நிலையில், பவன் கல்யாண் ரசிகர்கள் முழு சப்போர்ட்டைஇந்த படத்துக்கு கொடுத்து வருகின்றனர். விஜய் மற்றும் பவன் கல்யாண் போஸ்டர்களுக்கு ரசிகர்கள் தியேட்டரில் மாலை அணிவித்து முதல் நாள் காட்சியை கொண்டாடி வருகின்றனர்.
|
கொண்டாடும் ரசிகர்கள்
வாரிசு திரைப்படம் தமிழ் படமா? தெலுங்கு படமா? என்கிற விவாதம் படம் தொடங்கியதில் இருந்தே இருந்தது. நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் வம்சி இது தமிழ் படம்ப்பா என அழுத்தம் திருத்தமாக சொன்னாலும் படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் தெலுங்கு சீரியல் என்றும் மகரிஷி, வைகுண்டபுரம் எஃபெக்ட் தான் இருக்கு என கலாய்த்தனர். இந்நிலையில், டோலிவுட் ரசிகர்களுக்கான படமாக வாரசுடு தியேட்டர்களில் தெறிக்கவிடுமா என எதிர்பார்க்கப்படுகிறது.

3.75 ரேட்டிங்
எதிர்பார்க்கவே இல்லை இயக்குநர் வம்சி இப்படியொரு ஃபீல் குட் மூவியை கொடுப்பார் என படத்தின் முதல் பாதியை விட 2வது பாதி ரொம்ப சிறப்பா இருக்கு என தெலுங்கு வாரிசு படத்துக்கு 3.75 ரேட்டிங்கை நெட்டிசன்கள் கொடுத்து வருகின்றனர்.

தமிழ் ரசிகர்களை முந்தும் தெலுங்கு ரசிகர்கள்
வாரிசு படத்திற்கு தமிழ் சினிமா ரசிகர்கள் கொடுத்த ரெஸ்பான்ஸை விட தெலுங்கு ரசிகர்கள் வாரசுடு படத்திற்கு அதிக அளவு ரெஸ்பான்ஸ் கொடுத்து வருகின்றனர். வீர சிம்ஹா ரெட்டி மற்றும் வால்டர் வீரய்யா படங்களின் ரிசல்ட் காரணமாக இன்று வெளியாகி உள்ள வாரிசு படத்துக்கு இந்த சங்கராந்தி விடுமுறை முழுவதும் பல மல்டி பிளக்ஸ் தியேட்டர்களில் காட்சிகள் ஹவுஸ்ஃபுல் ஆகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

வேறலெவல் செலிபிரேஷன்
எண்டர்டெயின் படங்களை விமர்சனங்களை தாண்டி கொண்டாடுவதில் தெலுங்கு ரசிகர்களுக்கு நிகர் தெலுங்கு ரசிகர்கள் தான் என சொல்லும் அளவுக்கு வாரிசு படத்திற்கு வேறலெவல் செலிபிரேஷன் செய்து கொண்டாடி வருகின்றனர் டோலிவுட் ரசிகர்கள் மகேஷ் பாபுவின் மகரிஷி படத்தை இயக்கிய இயக்குநர் வம்சி படம் என்பதால் அங்கே மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.

கடைசி வரை கொண்டாட்டம்
பாலய்யா படத்துக்கு சமீபத்தில் அமெரிக்கா தியேட்டரையே டோலிவுட் ரசிகர்கள் அதிர வைத்த நிலையில், விஜய்யின் வாரிசு படத்துக்கு கோலிவுட்டில் இல்லாத அளவுக்கு படம் தொடங்கியதில் இருந்து இறுதி வரை ரசிகர்கள் கலர் பேப்பர்களை பறக்கவிட்டு கொண்டாடும் காட்சிகள் வெளியாகி உள்ளன. ஜிமிக்கி பொண்ணு பாடல் ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது.
|
தமிழ்நாடு இல்லை ஹைதராபாத்
வாரிசு படத்தின் செலிபிரேஷன் ஆஃப் வாரிசு பாடலுக்கும் ரசிகர்கள் தியேட்டரில் ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடும் காட்சிகளை பதிவிட்டு இது தமிழ்நாடு இல்லை ஹைதராபாத் என ரசிகர்கள் ட்வீட் போட்டு வீடியோக்களை ஷேர் செய்து வருகின்றனர்.

அதிகாலை காட்சிகளே ஹவுஸ்ஃபுல்
தயாரிப்பாளர் தில் ராஜு டோலிவுட்டில் மிகப்பெரிய அளவில் வாரசுடு படத்தை இன்று ரிலீஸ் செய்திருக்கிறார். அதிகாலை காட்சிகளே பல திரையரங்குகளில் ஹவுஸ்ஃபுல்லாக நிரம்பி வழிவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. வாரசுடு டோலிவுட்டில் ஹிட் அடித்தால் மிகப்பெரிய வசூல் வேட்டையை இந்த பொங்கலுக்கு நடத்தும் என்பது கன்ஃபார்ம் என்கின்றனர்.