அங்கங்க போர் அடிச்சாலும் ஒருவாட்டி பார்க்கலாம்.. காத்துவாக்குல ரெண்டு காதல் மக்கள் விமர்சனம்!

சென்னை: விஜய்சேதுபதி, சமந்தா, நயன்தாரா, ஸ்ரீசாந்த், பிரபு, ரெட்டின் கிங்ஸ்லி நடிப்பில் வெளியாகி உள்ளது காத்துவாக்குல ரெண்டு காதல்.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகி உள்ள இந்த படத்திற்கு அஜித் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.

ஏகே 62 படத்தை விக்னேஷ் சிவன் இயக்க உள்ள நிலையில் இந்த படம் எப்படி இருக்கு என பார்க்க ஆர்வமாக இருந்தனர். இந்நிலையில், படத்தை பார்த்த அஜித் ரசிகர்களும், நெட்டிசன்களும் இந்த படம் பற்றி சமூக வலைதளங்களில் என்ன கருத்துக்களை முன் வைத்துள்ளனர் என்பதை இங்கே பார்ப்போம்..

ரெண்டு பேருமே சூப்பர்

ரெண்டு பேருமே சூப்பர்

படத்தின் முதல் பாதி ஃபன் ரைடாக உள்ளது. நயன்தாரா மற்றும் சமந்தா இருவருமே சூப்பராக நடித்துள்ளனர். விஜய்சேதுபதி அட்டகாசம்.. இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கு நிச்சயம் காத்துவாக்குல ரெண்டு காதல் படம் ஹிட் படம் தான் என இந்த ரசிகர் தனது கருத்தை முன் வைத்துள்ளார்.

அங்கங்க போர்

அங்கங்க போர்

நானும் ரவுடி தான் படம் இப்போ வெளியானாலும் இதே போன்ற விமர்சனங்கள் வரத்தான் செய்யும் ஏனென்றால் பிற மொழிகளில் வெளியான பிரம்மாண்ட படங்களை பார்த்த மன நிலையில், நம்ம ஊர் படங்களை பார்க்கத் தொடங்கும் ரசிகர்கள் தங்களின் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருப்பதே இதற்கு காரணம். "அங்கங்க போர் அடிச்சாலும் ஒருவாட்டி படத்தை பார்க்கலாம்.. அதுவும் சமந்தாவுக்காக" என இந்த நெட்டிசன் விமர்சித்துள்ளார்.

அஜித் ரசிகர்கள் வாழ்த்து

அஜித் ரசிகர்கள் வாழ்த்து

நடிகர் அஜித்தின் 62வது படத்தை விக்னேஷ் சிவன் இயக்க உள்ள நிலையில், இந்த படத்தை வெற்றியடைய செய்யும் வேலையை அஜித் ரசிகர்கள் முடிந்த வரை பார்த்துக் கொள்வார்கள் என தெரிகிறது. படம் வெற்றிப் பெற அஜித் ரசிகர்கள் விக்னேஷ் சிவனுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

மிருகத்தனமான நடிப்பு

மிருகத்தனமான நடிப்பு

"அனைவரும் பார்க்க வேண்டிய படம்.. இளையர்களின் தப்பை சரியான நேரத்தில் வெளிக் கொண்டு வந்தமைக்கு வாழ்த்துக்கள்! சமந்தா என்னா நடிப்பு டா சாமி கண்ணே கலங்கிருச்சு.. விஜய்சேதுபதி மிருகத்தனமான நடிப்பு.. இப்படியும் நடிக்க முடியுமா" என சமந்தா மற்றும் விஜய்சேதுபதியின் நடிப்பை இந்த ரசிகர் பாராட்டி உள்ளார்.

விஜய் ரசிகர்கள் ஆரம்பிச்சுட்டாங்க

விஜய் ரசிகர்கள் ஆரம்பிச்சுட்டாங்க

காத்துவாக்குல ரெண்டு காதல் படத்துக்கு நெகட்டிவ் விமர்சனங்களை போட விஜய் ரசிகர்கள் ஆரம்பிச்சுட்டாங்க.. ஆனால், அஜித் ரசிகர்கள் எப்போதும் உங்களுக்கு ஆதரவாக இருப்போம் என விக்னேஷ் சிவனுக்கு உறுதுணையாக ட்வீட் போட்டு வருகின்றனர் அஜித் ரசிகர்கள்.

நீங்க கல்யாணம் பண்றதுக்கு

நீங்க கல்யாணம் பண்றதுக்கு

"அண்ணே விக்னேஷ் சிவன் அண்ணே.. நீங்க கல்யாணம் பண்றதுக்கு எங்க காசு தான் கிடைச்சுதா.. ஹேப்பி மேரிட் லைஃப்" என இந்த ரசிகர் குறும்புத்தனமான கமெண்ட்டை போட்டிருக்கிறார். விரைவில் விக்னேஷ் சிவன் - நயன்தாரா திருமணம் நடைபெற போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பாலாபிஷேகம்

நடிகர் விஜய்சேதுபதியின் பிரம்மாண்ட கட் அவுட்டுக்கு தியேட்டர் ஒன்றில் ரசிகர்கள் செய்த பாலாபிஷேகம் வீடியோ வைரலாகி வருகிறது. விஜய்சேதுபதி மகன் மற்றும் குடும்பத்தினர் தியேட்டர் ஒன்றில் படம் பார்த்த வீடியோக்களும் ட்விட்டரில் டிரெண்டாகி வருகிறது.

ஏகே 62 அவ்ளோதான்

ஏகே 62 அவ்ளோதான்

எந்தவொரு லாஜிக்கும் இல்லாமல், படம் பல இடங்களில் சொதப்பி இருக்கிறது. அஜித்தின் ஏகே 62 படத்தை இவரை நம்பி கொடுக்கிறாங்க.. அவ்ளோதான் என சில ரசிகர்கள் புலம்பி வருகின்றனர். தானா சேர்ந்த கூட்டம் படமே இதுக்கு நல்லா இருந்துச்சு என சிலர் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X