Maharaja Review: விஜய்சேதுபதியின் வெறித்தனமான நடிப்பு.. மகாராஜா முதல் விமர்சனம் இதோ!
சென்னை: குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, அனுராக் காஷ்யப், பாரதிராஜா, அபிராமி, மம்தா மோகன்தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள மகாராஜா திரைப்படம் வரும் ஜூன் 14ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில், அந்த படத்தின் ப்ரீமியர் ஷோ இன்று வெளியான நிலையில், படத்தை பார்த்த பத்திரிகையாளர்கள் மற்றும் யூடியூப் விமர்சகர்கள் உள்ளிட்ட பலர் மகாராஜா படத்துக்கு பாசிட்டிவ் விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர்.
விஜய் சேதுபதியின் 50வது படமான மகாராஜா அவருக்கு மிகப்பெரிய வெற்றிப் படமாக இருக்கும் என்றும் விஜய் சேதுபதி வேறலெவல் வெறித்தனமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் என்றும் பலரும் பாராட்டி வருகின்றனர்.

ஹீரோவாக விஜய் சேதுபதி நடிக்கும் படங்கள் சமீப காலமாக சொதப்பி வரும் நிலையில், மகாராஜா விஜய் சேதுபதிக்கு கம்பேக் படமாக அமையும் என்றும் இப்படியொரு படத்தில் அவரே இனிமேல் நடிப்பாரா? என்பது சந்தேகம் தான் என்றும் கூறுகின்றனர்.
அனுராக் காஷ்யப்புடன் மீண்டும்: நயன்தாரா நடித்த இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் பாலிவுட் இயக்குநரான அனுராக் காஷ்யப் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அந்த படத்தில் விஜய் சேதுபதி நயன்தாராவின் கணவராக நடித்திருப்பார். அதன் பின்னர் தற்போது மீண்டும் விஜய் சேதுபதி படத்தில் அனுராக் காஷ்யப் வில்லனாக மிரட்டியுள்ளார். லியோ படத்தில் ஒரே ஒரு சீனுக்கு வந்து விஜய் சுட இறந்து போகும் சீனில் நடித்த அனுராக் காஷ்யப் தனது மொத்த நடிப்புத் திறமையையும் இந்த படத்தில் அன்லீஷ் செய்துள்ளார்.
இந்த ஆண்டின் சிறந்த படம்: தமிழ் சினிமாவில் இதுவரை வந்த படங்களிலேயே இது சிறந்த படமாக இருக்கும் என ராஜசேகர் என்பவர் ட்வீட் போட்டுள்ளார். விஜய் சேதுபதி வரும் அனைத்து காட்சிகளும் மிரட்டல் என்றும் சாதாரண மனிதராகவே நடித்திருந்தாலும், அவருடைய ஸ்டார் வேல்யூ படத்தில் தெளிவாக தெரிகிறது என்றும் அனுராக் காஷ்யப், நட்டி நட்ராஜ் என அனைவருமே படத்தில் பக்காவாக நடித்துள்ளதாக இவர் விமர்சித்துள்ளார்.

மாஸ்டர் பீஸ்: விஜய் சேதுபதி நடித்த படங்களிலேயே மகாராஜா படம் மாஸ்டர் பீஸ் என விஜய் ரசிகரான ராம்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் படத்துக்கு பாசிட்டிவ் விமர்சனத்தை கொடுத்துள்ளார். படத்தை பார்த்த பலரும் விஜய் சேதுபதியின் நடிப்பையும் நித்திலன் சுவாமிநாதனின் தரமான ஸ்க்ரீன் பிளேவையும் பாராட்டி வருகின்றனர்.

வின்னர்: இந்த ஆண்டின் சிறந்த படம் என்றும் மகாராஜா க்ளியர் வின்னர் என்றும் பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருகின்றன. ப்ரீமியர் ஷோவில் படம் பார்த்த யாருமே படத்தை பற்றிய நெகட்டிவ் கருத்துக்களை வெளியிடவில்லை என்பதிலேயே விஜய் சேதுபதிக்கு மட்டுமில்லை தமிழ் சினிமாவுக்கும் ஒரு மிகப்பெரிய வெற்றிப் படமாக மகாராஜா மாறும் என தெரிகிறது. நகைச்சுவை, திரைக்கதை, அழுத்தமான நடிப்பு, வில்லத்தனம், ட்விஸ்ட் என ஏகப்பட்ட விஷயங்கள் படத்தில் குவிந்து கிடப்பதாக விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.


Click it and Unblock the Notifications











