Maharaja public Review: விஜய்சேதுபதியின் மகாராஜா படம் எப்படி இருக்கு.. பொதுமக்கள் கருத்து!

சென்னை: நடிகர் விஜய் சேதுபதியின் 50வது திரைப்படமான மகாராஜா.குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நித்திலன் சுவாமிநாதன் இயக்கிய இந்தத் திரைப்படத்தில், அனுராக் காஷ்யப், பாரதிராஜா, அபிராமி, மம்தா மோகன்தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். நேற்று தியேட்டரில் வெளியான படத்திற்கு பாராட்டுக்கள் குவிந்து வரும் நிலையில் படம் பார்த்தவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை பார்க்கலாம்.

விஜய் சேதுபதி சலூன் நடத்திக் கொண்டிருக்கிறார். இவரது மனைவி விபத்து ஒன்றில் இறந்துவிட, அவருக்கு இருக்கும் ஒரே சொந்தமான மகள் ஜோதி தான். மகாராஜாவும், ஜோதியும் தங்கள் குடும்பத்தில் ஒரு அங்கமாக லக்ஷ்மியையும் பார்க்கிறார்கள். மகள் ஜோதி ஒரு நாள் வெளியூர் சென்றுவிட, வீட்டில் தனியாகிறார் விஜய்சேதுபதி. ஒருநாள் வேலை முடித்து வீடு திரும்பிய தன்னை, திடீரென ஒரு கும்பல் தாக்கிவிட்டு வீட்டிலிருந்த லக்ஷ்மியை திருடிவிட்டதாக புகார் கொடுக்கிறார். லட்சுமி என்பது என்ன? விஜய் சேதுபதி வாழ்க்கையில் நடந்த அந்த அதிர்ச்சி சம்பவம் என்ன? இதை காவல்துறை கண்டுபிடித்ததா இல்லையா? என்பது தான் மகாராஜா படத்தின் கதை.

https   tamil filmibeat com news vijay-sethupathi-admits-he-beats-his-son-suriya-sethupathi-several-times-in-an-interview-135275 html

செம த்ரில்லிங்: நேற்று தியேட்டரில் வெளியான படம் பார்த்த ரசிகை ஒருவர் படம் ரொம் பிடித்து இருந்தது, சென்டிமெண்டா இருந்தது, கடைசி வரைக்கும் த்ரில்லிங் தான். உண்மையில் விஜய் சேதுபதி இஸ்ட் பேக் என்று தான் சொல்ல வேண்டும், ஏன் என்றால் படத்தில் செமயா பின்னிட்டாரு, கமலுக்கு பிறகு விஜய் சேதுபதி தான். குறிப்பா அந்த கிளைமாக்ஸ் காட்சி நன்றாக இருந்தது. குடும்பத்தோடு இந்த படத்தை பார்க்க முடியாது தான். ஆனால் அனைவரும் பார்க்க வேண்டிய படம் என்றார்.

சூப்பர் கிளைமாக்ஸ்: படம் பார்த்த மற்றொரு ரசிகர் படத்தின் முதல் பாதியில், என்னடானு ஒன்னுமே புரியாதது போல கதை சென்று கொண்டிருந்தது. ஆனால், இரண்டாம் பாதியில் எல்லாத்திற்கும் விடைகிடைத்துவிட்டது. படத்திற்கு பலமே கதை தான். முதல் பாதியில் ஒரு ட்விஸ்ட் இரண்டாம் பாதியில் ஒரு ட்விஸ்ட், கிளைமாக்ஸில் ஒரு ட்விஸ்ட் என கதையை நன்றாக நகர்த்தி சென்று இருக்கிறார் இயக்குநர். கிளைமாக்ஸில் எழுந்து நின்று கத்திவிட்டேன் என்றார்.

விஜய் சேதுபதி மாஸ்: ரொம்ப நாள் கழித்து ஒரு திருப்தியான க்ரைம் தில்லர் திரைப்படம், நிறைய வன்முறைகள் இருப்பதால், குடும்பத்தோடு படத்தை பார்ப்பது கஷ்டம். விஜய்சேதுபதியின் 50வது படம் நிச்சயம் ஒரு வெற்றிப்படமாக இருக்கும் என்று நம்புகிறேன். ஆனால், குரங்குபொம்மை படத்தின் டச் கொஞ்சம் இருந்தது. நான்கு விதமான கதைக்களத்தில் சற்று வித்தியாசமான கதை. படம் சும்மா தாறுமாறாக இருக்கும், தமிழில் இதுபோன்ற கதை வந்ததே இல்லை, கதை, திரைக்கதை, வசனம் என அனைத்தும் பக்காவாக இருந்தது. அடுத்து என்ன நடக்கும் எனக்கும் என்றே தெரியவில்லை என்பது போல கதை இருக்கிறது என்றார்.

படக்குழுவினருக்கு நன்றி: மகாராஜா படம் பார்த்த நடிகை கீர்த்தி சுரேஷ் படத்தை புகழ்ந்து தள்ளி உள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், என்ன ஒரு அருமையான திரைக்கதை, நித்திலன் நீங்கள் தான் இப்படத்தின் ஸ்டார். தமிழ் சினிமாவிற்கு இது ஒரு பெருமைமிகு படம். விஜய் சேதுபதிக்கு 50வது படம் இதைவிட சிறப்பாக அமைய முடியாது. வழக்கம்போல் அவரை திரையில் பார்ப்பது விருந்தாக அமைந்துள்ளது. அனுராக் கஷ்யப், நட்டி நட்ராஜ், அபிராமி, மம்தா சரியான தேர்வு. பிலோமின் ராஜின் படத்தொகுப்பு சீட்டின் நுனியில் அமர வைக்கிறது. இப்படி ஒரு அருமையான படத்தை கொடுத்த குழுவினருக்கு நன்றி என பாராட்டி பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X