Maharaja Review: மகாராஜா விமர்சனம்.. விஜய் சேதுபதி தேடும் அந்த லட்சுமி இதுதானா?..தரமான சம்பவமா?

நடிகர்கள்: விஜய் சேதுபதி, அனுராக் காஷ்யப், நட்டி நட்ராஜ்

இசை: அஜனீஷ் லோக்நாத்

நேரம்: 2 மணி நேரம் 22 நிமிடங்கள்

இயக்கம்: நித்திலன் சுவாமிநாதன்

Rating:
4.0/5
Star Cast: விஜய் சேதுபதி, அனுராக் காஷ்யப், நட்டி நட்ராஜ்
Director: நித்திலன் சுவாமிநாதன்


சென்னை: விஜய் சேதுபதியின் 50வது படமாக உருவாகி உள்ள மகாராஜா திரைப்படம் ஜூன் 14ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. அட்மாஸ்பியர் ஆர்ட்டிஸ்ட்டாக இருந்த விஜய் சேதுபதி தனது கடுமையான உழைப்பால் தற்போது பாலிவுட்டிலும் பாலிவுட் நடிகர்களுடனும் இணைந்து நடிக்கும் அளவுக்கு உயர்ந்து நிற்கிறார்.

Review  Vijay Sethupathi  Maharaja  Anuragh Kashyap


விஜய் சேதுபதியின் கால்ஷீட் வேண்டும் என பலர் காத்துக் கொண்டிருக்கும் நிலையில், கதைகளை தேடித் தேடி தேர்வு செய்து ரசிகர்களை என்டர்டெயின் செய்யும் வேலையையும் தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.

குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் உருவாகி உள்ள மகாராஜா திரைப்படத்தின் பத்திரிகையாளர் காட்சி நேற்று திரையிடப்பட்ட நிலையில், படத்தின் முழு விமர்சனம் குறித்து இங்கே பார்க்கலாம் வாங்க..

மகாராஜா கதை: முடி திருத்தும் தொழிலாளியாக மகாராஜா எனும் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். விபத்து ஒன்றில் அவருடைய மனைவி திவ்யபாரதி (பேச்சுலர் பட நடிகை) உயிரிழந்து விட மகளை மட்டும் பாதுகாத்து வளர்த்து வருகிறார். இன்னொரு பக்கம் திருட்டுத் தொழில் செய்யும் அனுராக் காஷ்யப் திருட செல்லும் இடங்களில் இருக்கும் பெண்களை பலாத்காரம் செய்வதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார். தனது வீட்டில் இருந்த லட்சுமியை காணவில்லை என போலீஸ் ஸ்டேஷனில் விஜய் சேதுபதி புகார் அளிக்க அந்த லட்சுமி என்பது விஜய் சேதுபதியின் மனைவியா? மகளா? வீட்டில் இருந்த பணப்பெட்டியா? என போலீஸார் விசாரணை நடத்த லட்சுமி என்பது என்ன? என்கிற ட்விஸ்ட்டுடன் முதல் பாதி நிறைவடைகிறது.

இரண்டாம் பாதியில், லட்சுமியை கண்டு பிடித்துக் கொடுத்தால் போலீஸாருக்கு பெரிய தொகையை லஞ்சமாக தருகிறேன் என விஜய் சேதுபதி டீல் பேச, கெட்ட போலீஸாக வரும் நட்டி நட்ராஜ் அந்த லட்சுமியை தேட அதன் பின்னர் பல திடுக்கிடும் விஷயங்கள் ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட்டாக இரண்டாம் பாதியில் வந்து கிளைமேக்ஸில் பெரிய ட்விஸ்ட்டை கொடுக்கிறது.

விஜய் சேதுபதி மிரட்டல்: மகாராஜாவாக நடித்துள்ள விஜய் சேதுபதி நடிப்பின் மகாராஜாவாகவே ஒவ்வொரு காட்சியிலும் தெரிகிறார். தரமான படத்தை தனது ரசிகர்களுக்கு கொடுத்தாக வேண்டும் என ரொம்பவே மெனக்கெட்டு அவர் போட்டுள்ள உழைப்பு தெளிவாக தெரிகிறது. விஜய் சேதுபதியை தாண்டி படத்தில் அனுராக் காஷ்யப், அபிராமி, மம்தா மோகன்தாஸ், பாரதிராஜா, நட்டி நட்ராஜ், சிங்கம் புலி, பாய்ஸ் மணிகண்டன், முனிஷ்காந்த் என ஒவ்வொருவரும் கொடுத்த கதாபாத்திரத்தில் கச்சிதமாக நடித்துள்ளனர்.

பிளஸ்: குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நித்திலன் சுவாமிநாதன் வித்தியாசமான கதைகளையும் ட்விஸ்ட்டுகள் அடுக்கப்பட்ட திரைக்கதைகளையும் இயக்குவதில் தான் மகாராஜா என்பதை நிரூபித்துள்ளார். அஜனீஷ் லோக்நாத் இசையில் வரும் பின்னணி இசை படத்திற்கு பெரிய பலம். ஒரே ஒரு பாடல் என்றாலும் வருடும் ரகம். நடிகர்களின் தேர்வு மற்றும் திரைக்கதை வடிவமைப்பு மற்றும் இரண்டாம் பாதியை இயக்கியுள்ள விதம், சிங்கம் புலியை பயன்படுத்திய விதம் என படத்தில் பல பாசிட்டிவான விஷயங்கள் கொட்டிக் கிடக்கின்றன.

மைனஸ்: முதல் பாதியில் சில இடங்கள் புரியாமல் பிட்டு பிட்டாக செல்வது போன்ற உணர்வு தோன்றுவது மற்றும் ஸ்டேஷனில் நடக்கும் காட்சிகள், அனுராக் காஷ்யப்பின் டப்பிங் பிரச்சனை என சில மைனஸ்கள் மட்டுமே தென்பட்டாலும், ஒட்டுமொத்தமாக இந்த மகாராஜா படம் தமிழ் சினிமாவில் ஒரு மாஸ்டர் பீஸ் படமாகவே இருக்கும் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X