twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சன் ஆப் ரங்கா... கிரான்ட் சன் ஆப் லிங்கா... இவன் கஞ்சடான் ஜுங்கா! விமர்சனம்

    ஒரு கஞ்ச டான் தனது லட்சியத்தை அடைவதற்காக செய்யும் ரகளைகளை, காமெடி கலந்து சொல்லியிருக்கும் படம் ஜுங்கா.

    |

    Recommended Video

    மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஜூங்கா விமர்சனம்- வீடியோ

    Rating:
    3.0/5
    Star Cast: விஜய் சேதுபதி, சாயிஷா, மடோனா
    Director: கோகுல்

    சென்னை: ஒரு டான் கஞ்சனாக இருந்தால், என்ன மாதிரியான ரகளைகளை எல்லாம் செய்வார் என்பதை காமெடியாக காட்டுகிறார் ஜுங்கா.

    ஜுங்கான்னா  இன்னாமா....

    ஜுங்கான்னா இன்னாமா....

    ஓபனிங் சீன்லயே டான் ஜுங்காவை (விஜய் சேதுபதி) என்கவுண்டரில் போட ரெடியாகுது போலீஸ். அதற்காக அவரை சென்னையில் இருந்து தடாவுக்கு (என்கவுண்டர் நாளே தடா தான)அழைத்து செல்கிறார்கள் இன்ஸ்பெக்டர் வினோத்தும், அதிகம் பேசும் ஏட்டு துரைசிங்கமும் (மொட்டை ராஜேந்திரன்). அங்கிருந்து விரியும் பிளாஷ் பேக் காட்சிகளில் பொள்ளாச்சி, பாரீஸ் என ஒரு டிரிப் அழைத்து செல்கிறார்கள்.

    பொள்ளாச்சியில் ஒரு சாதாரண பஸ் கண்டெக்டராக இருக்கும் ஜுங்காவுக்கு, தெலுங்கு பொண்ணு மடோனா செபாஸ்டியன் மேல காதல். அவருக்காக உள்ளூர் ரவுடிகளை புரட்டி எடுக்கிறார் ஜுங்கா. அப்போது தான் தெரிய வருகிறது தான் ஒரு டான் பெமிலி என்பது. தாத்தா டான் லிங்காவும், அப்பா டான் ரங்காவும், டானாக இருப்பதற்காகவே செலவு செய்து சொத்துக்களை அழித்தவர்கள். தான் அப்படி இல்லாமல், டான் பிசினசை லாபகரமாக செய்து, இழந்த சினிமா தியேட்டரை அடைவேன் என தாய் சரண்யாவிடம் சத்தியம் செய்து சென்னை புறப்படுகிறார் ஜுங்கா. அவர் எப்படி தியேட்டரை மீட்கிறார்? போலீஸ் என்கவுண்டர் என்னானது என்பது டர்ராகும் மீதிக்கதை.

    விஜய் சேதுபதி

    விஜய் சேதுபதி

    படத்தின் முக்கிய உயிர்நாடியே விஜய் சேதுபதி தான். அவரை நம்பியே... அவருக்காகவே காட்சிகளை அமைத்திருக்கிறார் இயக்குனர். இந்த படத்தின் தயாரிப்பாளரும் தான் தான் என்பதால், இன்னும் கூடுதல் உழைப்பை தந்திருக்கிறார் விஜய் சேதுபதி. தனது வழக்கமான சீரியஸ் காமெடி வசனங்களில் லைக்ஸ் அள்ளுகிறார். படத்தில் இவருக்காகவே நிறைய வசனங்கள் இருக்கின்றன. போட்ட திட்டம் சொதப்பும் போது டான் டாவடிக்குக் கூடாது என சாயிஷாவிடம் அவர் பேசும் காட்சி செம ஹைலைட்.

    இயக்குனர் கோகுல்

    இயக்குனர் கோகுல்

    விஜய் சேதுபதியை வைத்து இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா எனும் காமெடி பிளாக் பஸ்டர் படத்தை கொடுத்த கோகுல் தான் இப்படத்தின் இயக்குனர். சுவாரஸ்யமான பிளாஷ் பேக் காட்சிகள், பிளாக் காமெடி, சின்னதாக மற்ற படங்களை கலாய்க்கும் ஸ்பூப் காமெடி என முதல் பாதியை அலுப்பில்லாமல் கொடுத்திருக்கிறார். ஆனால் பாரீஸ் எபிசோடில் இருந்து படம் டல்லடிக்க தொடங்கிவிடுகிறது.

    விஜய் சேதுபதியை மட்டுமே நம்பி படத்தை எடுத்திருக்கிறார். அதனால் தானோ என்னவோ, கதை, திரைக்கதை, லாஜிக் இது பற்றி எல்லாம் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை போல. இருந்தாலும், கஞ்ச டான் செய்யும் அட்ராசிட்டிகளுக்காக இயக்குனரை பாராட்டலாம். ஆனா என்னதான் கஞ்ச டானாக இருந்தாலும், ஐஸ் கட்டி ஆறுல நீந்தி போறதெல்லாம் டூ மச் பாஸ். இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரவோட ஒப்பிடும் போது, உங்கக்கிட்ட இருந்து இன்னும் எதிர்பார்தோம் கோகுல்.

    யோ யோ யோகி

    யோ யோ யோகி

    விஜய் சேதுபதியுடன் சேர்ந்து அட்ராசிட்டி செய்யும் அசிஸ்டென்ட் டான் யோ யோவாக யோகிபாபு. காட்சிக்கு காட்சி தெறிக்க விடுகிறார். ரைமிங், டைமிங் வசனங்களால் கைதட்டல்களை அள்ளுகிறார்.

    டான் அம்மா... டான் பாட்டி

    டான் அம்மா... டான் பாட்டி

    டான் அம்மாவாக வரும் சரண்யாவுக்கு இது ஒரு புது களம். மெட்ராஸ் தமிழில் பேசி அசால்டாக வூடு கட்டுகிறார். அதிலும் டான் பாட்டி விஜயா அம்மா ஒவ்வொரு காட்சியிலும் கிச்சுகிக்சு மூட்டுகிறார். சுரேஷ் மேனனை கலாய்ப்பது, சவுண்டு கொடுத்து அளப்பறையை கூட்டுவது... எல்லாமே ஆசம்... ஆசம்...

    ஹீரோயின்கள்...

    ஹீரோயின்கள்...

    சாயிஷா, மடோனா என படத்தில் இரண்டு ஹீரோயின்கள். இருவருக்குமே பெரிதாக வேலை ஒன்றும் இல்லை. செகன்ட் ஹீரோயின் மடோனாவுக்கு ஒரு பாட்டு, நான்கு காட்சிகள். முதல் ஹீரோயின் சாயிஷாவுக்கு மூன்று பாட்டு, நிறைய காட்சிகள். தனது அபாரமான நடனத்தால், ரசிகர்களை ஆட்டிப்படைக்கிறார்.

    மற்றவர்கள்...

    மற்றவர்கள்...

    ராதாரவிக்கு இரண்டு காட்சிகள் மட்டுமே. காட்பாதர் மார்ளன் பிராண்டோ கெட்டப்பில் பழைய டான் சோப்ராஜா வந்து ஸ்மைல் ப்ளீஸ் என்கிறார். இதற்கு தானோ ஆசைப்பட்டாய் பாலகுமாரா படம் அளவுக்கு மொட்டை ராஜேந்திரன், வினோத் காம்போ இதில் ஒர்கவுட் ஆகவில்லை. சாயிஷாவின் தந்தையான நிறைவான நடிப்பை தந்திருக்கிறார் சுரேஷ் மேனன்.

    பாட்டு

    பாட்டு

    இதற்கு தானோ ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் காபி வித் கும்ஸ் என சொல்லி சுமார் மூஞ்சி குமாரிடம் அடிவாங்குவாரே ஒரு அமுல் பேபி... அவர் தான் இந்த படத்திற்கு இசை. பெயர் சித்தார்த் விபின். லோலிக்கிரியா வெஸ்டர்ன் என்றால்... நேனே நூவே செம குத்து... வெரைட்டியான பாடல்கள் தந்து கலக்கியிருக்கிறார். பின்னணி இசையில் இன்னும் நிறைய யோசித்து செய்திருக்கலாமோ என தோன்றுகிறது.

    டட்லியின் ஓவியம்

    டட்லியின் ஓவியம்

    சென்னை எக்ஸ்பிரஸ் போன்ற பாலிவுட் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த டட்லி தான் இந்த படத்தின் கேமரா மேன். சென்னை, பொள்ளாச்சி, பாரீஸ் என ஊருக்கு தகுந்த மாதிரி வண்ணங்களால் ஒளி ஓவியம் படைத்திருக்கிறார். படம் ஒரு விஷூவல் டிரீட்டாக அமைந்திருக்கிறது. வி.ஜே.சாபு ஜோசப் சரியாக படத்தொகுப்பு, முதல் பாதியில் விறுவிறுப்பையும், பிற்பாதியில் அலுப்பையும் தருகிறது.

    ப்ளஸ் (ஆர்) மைனஸ்

    ப்ளஸ் (ஆர்) மைனஸ்

    ஏற்கனவே சொன்னது போல படத்தின் பலம் விஜய் சேதுபதி, யோகிபாவு காம்போ தான். ஆண்டவன் கட்டளை படத்தில் கம்மியா காமெடி செய்த இந்த ஜோடி, ஜுங்காவில் தெறிக்கவிட்டிருக்கிறது. பழைய காரை பட்டி பார்த்து, டிங்கரிங் செய்து, பெயின்ட் அடித்து ஓட்ட முயன்றிருக்கிறார் இயக்குனர். ஒரு டான் உருவாவதெல்லாம் விக்ரமன் படம் மாதிரி ஒரு பாட்ல நடக்குற விஷயமாக பாஸ். லாஜிக் பற்றி எல்லாம் ஜுங்கா கவலைப்படவே இல்லை.

    ஜுங்காவின் ஒரே ஆசை எல்லாம் காமெடி ஒன்று மட்டும் தான். அதற்கு கேரன்டி, வாரன்டி கார்டு எல்லாம் டிக்கெட்டுக்கு உள்ளே வைத்து கொடுக்கிறார்கள். இரண்டரை மணி நேரம் ஜாலியாக பொழுதை கழிக்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு ஜுங்கா ஒரு காமெடி விஷூவல் டிரீட்.

    English summary
    Actor Vijay Sethupathy - director Gokul combo movie 'Junga' is a full length comedy film, with action and romance.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X