Maamanithan Twitter Review: விஜய்சேதுபதியின் மாமனிதன் படம் எப்படி இருக்கு? மக்கள் கருத்து!

சென்னை: விஜய்சேதுபதி மற்றும் காயத்ரி நடிப்பில் இன்று வெளியாகி உள்ள மாமனிதன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

பெரிய கமர்ஷியல் ஆர்ப்பாட்டங்கள் இல்லாமல், பான் இந்தியா புரமோஷன்கள் இல்லாமல் வெளியான அற்புதமான தமிழ் சினிமா என படம் பார்த்த பலரும் கொண்டாடி வருகின்றனர்.

சமூக வலைதளத்தில் மாமனிதன் படத்தை பார்த்த நெட்டிசன்கள் என்ன மாதிரியான விமர்சனத்தை முன் வைத்துள்ளனர் என்பது பற்றி இங்கே பார்ப்போம்..

பார்க்கவேண்டிய படம்

பார்க்கவேண்டிய படம்

விஜய்சேதுபதி நடிப்பில் வெளியாகி உள்ள மாமனிதன் திரைப்படம் முதல் பாதி நல்லா இருக்கு.. இரண்டாம் பாதி எமோஷனலா இருக்கு.. கட்டாயம் அனைவரும் பார்க்க வேண்டிய படம் என இந்த நெட்டிசன் 3.5 ஸ்டார்களையும் கொடுத்து சீனுராமசாமியின் இயக்கத்தையும் படத்தில் நடித்த நடிகர்களையும் வெகுவாக பாராட்டி உள்ளார். சினிமா விமர்சகர்கள் மட்டுமின்றி மக்கள் மத்தியில் இருந்தும் விஜய்சேதுபதியின் படத்துக்கு நல்ல வரவேற்பு குவிந்து வருகிறது.

நெகட்டிவ்

நெகட்டிவ்

நடிகர்கள், இசை, ஒளிப்பதிவு, இயக்கம் மற்றும் அந்த அற்புதமான கிளைமேக்ஸ் என அனைத்துமே மாமனிதன் படத்திற்கு பலமாக உள்ளது. ஒரு சில இடங்கள் அடிக்கடி லேக் அடிப்பதை கொஞ்சம் தவிர்த்து இருக்கலாம். அது மட்டுமே நெகட்டிவாக தெரிகிறது என இந்த ரசிகரும் தனது விமர்சனத்தை முன் வைத்துள்ளார். குடும்பமாக நிச்சயம் இந்த படத்தை பார்த்து ரசிக்கலாம் என்றும் கூறியுள்ளார்.

ரமேஷ் பாலா விமர்சனம்

ரமேஷ் பாலா விமர்சனம்

சினிமா டிராக்கர் ரமேஷ் பாலா தனது ட்விட்டர் பக்கத்தில் மாமனிதன் திரைப்படம் ஒரு சாதாரண மனிதன் எப்படி அவனது நல்ல செயல்களால் மாமனிதன் ஆகிறான் என்பதை காட்டுகிறது. விஜய்சேதுபதி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். இதுவரையில் நடித்ததை விட காயத்ரி நடிப்பு இந்த படத்தில் பிரமாதம். சப்போர்ட்டிங் ரோலில் கலக்கி இருக்கிறார் குரு சோமசுந்தரம் என விமர்சித்து 5க்கு 3.5 மதிப்பெண் கொடுத்துள்ளார்.

நல்ல கிராமத்துப் படம்

நல்ல கிராமத்துப் படம்

பான் இந்தியா அளவுக்கு ஆக்ரோஷமான மற்றும் பிரம்மாண்ட படங்களின் பின்னால் ஓடிக் கொண்டிருக்கும் ரசிகர்களை சற்று கிராமத்து திண்ணைகளில் இளைப்பார வைத்து சுவாரஸ்யமும் இங்கேயும் இருக்குப்பா என சீனுராமசாமி சொல்லி இருப்பது இந்த காலத்து 2கே கிட்ஸ்களுக்கு தேவையான பாடம் என இந்த நெட்டிசன் தனது விமர்சனத்தை முன் வைத்துள்ளார்.

பிரபலங்கள் பாராட்டு

பிரபலங்கள் பாராட்டு

நேற்று மாலை போடப்பட்ட ப்ரீமியர் ஷோவை பார்த்த இயக்குநர்கள் புஷ்கர் - காயத்ரி, நடிகர் ராஜ்கிரண், நடிகைகள் கெளரி கிஷன், சஞ்சிதா ஷெட்டி, அதிதி பாலன், 'விக்ரம்' மாயா உள்ளிட்ட பலரும் படம் பார்த்துட்டு அழுதுட்டோம் என பாராட்டி உள்ளனர். தர்மதுரை படத்தில் இருந்த அளவுக்கு பாடல்கள் இன்னமும் சிறப்பாக இருந்திருக்கலாம் என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X