twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    Vikrant Rona Review: எல்லாருமே சூணா பாணா ஆகிட முடியுமா சுதீப்.. விக்ராந்த் ரோணா விமர்சனம்!

    |

    சென்னை: கன்னட திரையுலகில் யஷ் நடிப்பில் வெளியான கேஜிஎஃப் சீரிஸ் படங்கள் பாக்ஸ் ஆபிஸ் வேட்டை நடத்திய நிலையில், பிரம்மாண்ட பொருட்செலவில் கிச்சா சுதீப்பும் ஒரு பான் இந்திய படத்தை ரிலீஸ் செய்துள்ளார்.

    இயக்குநர் அனுப் பந்தாரி இயக்கத்தில் கிச்சா சுதீப், ஜாக்குலீன் ஃபெர்னாண்டஸ் நடிப்பில் வெளியாகி உள்ள விக்ராந்த் ரோணா திரைப்படம் 3டி தொழில்நுட்பத்தில் 95 கோடி பட்ஜெட்டில் உருவாகி உள்ளது.

    கேஜிஎஃப் படத்தையே தூக்கி சாப்பிடும் என எதிர்பார்த்த இந்த திரைப்படம் சாதித்ததா? சோதித்ததா? என்பது குறித்து இங்கே விரிவாக பார்ப்போம்..

    தனுஷுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன ரூசோ சகோதரர்கள்.. எப்படி சொல்லியிருக்காங்க பாருங்க! தனுஷுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன ரூசோ சகோதரர்கள்.. எப்படி சொல்லியிருக்காங்க பாருங்க!

    என்ன கதை

    என்ன கதை

    கொலை வழக்கை விசாரிக்கும் ஒரு போலீஸ் அதிகாரியே கொல்லப்படும் நிலையில், அந்த வழக்கையும் சேர்த்து விசாரிக்கும் அதிகாரியாக காமரோட்டு டவுனுக்கு வருகிறார். அங்கே வந்த போது தான் ஏகப்பட்ட குழந்தைகள் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு இருப்பது தெரிய வர, பேய் தான் கொலை செய்வதாக ஊர் மக்கள் சொல்லும் கட்டுக் கதைகளை தாண்டி உண்மையான குற்றவாளியை எப்படி கண்டுபிடிக்கிறார் கிச்சா சுதீப்? யார் அந்த குற்றவாளி என்பது தான் விக்ராந்த் ரோணா படத்தின் கதை.

    ஒரே இருட்டு

    ஒரே இருட்டு

    ஹாலிவுட் லெவல் மேக்கிங்கில் படம் எடுக்கிறேன் என்கிற பெயரில் ஏகப்பட்ட பட்ஜெட்டை செலவழித்துள்ள விக்ராந்த் ரோணா டீம் லைட்டுக்கு மட்டும் செலவு செய்யவே இல்லை போலத் தெரிகிறது. பேய் படத்தின் ஃபீல் வர வேண்டும் என்பதற்காக படம் தொடங்கியது முதல் முடியும் வரை ஒரே கும்மிருட்டாக இருக்கும் நிலையில், 3டி கண்ணாடி வேற ரசிகர்களை மேலும், அவஸ்த்தை படுத்துகிறது.

    இயக்குநர் சொதப்பல்

    இயக்குநர் சொதப்பல்

    கிச்சா சுதீப் மட்டும் இல்லை என்றால் படத்தை பார்க்கவே முடியாது என்கிற நிலைக்கு மொக்கை கதையை எழுதி வைத்து 95 கோடி ரூபாயை ஸ்வாகா செய்திருக்கிறார் இயக்குநர் அனுப் பந்தாரி. எல்லாருமே சூணா பாணா ஆகிவிட முடியுமா என தியேட்டரில் ராக்கி பாய் ரசிகர்கள் கிச்சா சுதீப் ரசிகர்களை பார்த்து கலாய்த்து வருகின்றனர்.

    பிளஸ்

    பிளஸ்

    விக்ராந்த் ரோணாவாக கிச்சா சுதீப் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். கவர்ச்சி புயலாக ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் தனக்கு கொடுத்த வேலையை கச்சிதமாக செய்துள்ளார். அந்த இருட்டிலும் சில காட்சிகளை அழகாக ஒளிப்பதிவு செய்துள்ள ஒளிப்பதிவாளர் வில்லியம் டேவிட்டின் ஒளிப்பதிவு படத்திற்கு பலமாக அமைந்துள்ளது.

    மைனஸ்

    இசையமைப்பாளர் அஜானீஷ் லோக்நாத்தின் இசையில் பாடல்கள் மற்றும் பிஜிஎம் காட்சிகள் ரொம்பவே மோசம். ஒரு சுமாரான பழி வாங்கும் கதையை பான் இந்தியா பெரிய பட்ஜெட் படத்துக்கு திரைக்கதையாக எழுதி ஒட்டுமொத்த படக்குழுவின் உழைப்பையும் வீணடித்துள்ளார் இயக்குநர் அனுப் பந்தாரி. ஒரு 20 நிமிட படத்தை சமரசமின்றி வெட்டித் தூக்கி இருந்தால், விக்ராந்த் ரோணா ஒரு முறையாவது பார்க்கும் படமாக மாறியிருக்கும். விக்ராந்த் ரோணா - எல்லாம் போச்சு வீணா!

    English summary
    Vikrant Rona movie Review in Tamil(விக்ராந்த் ரோணா விமர்சனம்): Kichcha Sudeepa's dark horror mystery movie upsets fans very much due to poor script.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X