twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    Vikrant Rona Twitter Review: கேஜிஎஃப் 2வை விட பயங்கரமா இருக்கா விக்ராந்த் ரோணா?

    |

    சென்னை: இயக்குநர் ராஜமெளலியின் நான் ஈ படத்தில் வில்லனாக மிரட்டிய கன்னட நடிகர் கிச்சா சுதீப் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள விக்ராந்த் ரோணா இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.

    கன்னட திரைப்படமான கேஜிஎஃப் 2 இந்த ஆண்டு ராஜமெளலியின் ஆர்ஆர்ஆர் படத்தையே பாக்ஸ் ஆபிஸில் பின்னுக்குத்தள்ளிய நிலையில், விக்ராந்த் ரோணாவும் பாக்ஸ் ஆபிஸ் மேஜிக் செய்யுமா என்கிற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    3டியில் உருவாகி உள்ள இந்த படத்தை பார்த்த ரசிகர்கள் ட்விட்டரில் பதிவிட்டுள்ள விமர்சனங்களை இங்கே பார்ப்போம்..

    ரன்வீர் சிங்கோட அதைப் பத்தி வருத்தப்படுற அளவுக்கு நாம ஒன்னும்.. மூடர்கூடம் இயக்குநர் நவீன் ட்வீட்!ரன்வீர் சிங்கோட அதைப் பத்தி வருத்தப்படுற அளவுக்கு நாம ஒன்னும்.. மூடர்கூடம் இயக்குநர் நவீன் ட்வீட்!

    பீரியட் படம்

    பீரியட் படம்

    1960களில் நடக்கும் பீரியட் படமாக விக்ராந்த் ரோணாவை இயக்குநர் அனூப் பந்தாரி இயக்கி உள்ளார். 3டியில் வெளியாகி உள்ள இந்த படத்தை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கண்டு ரசிக்கும் படியாக காட்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. கிச்சா சுதீப்பின் பவர்ஃபுல் பர்ஃபார்மன்ஸ் தியேட்டரை தெறிக்கவிடுகிறது என இந்த ரசிகர் தனது கருத்தை முன் வைத்துள்ளார்.

    தேவையில்லாத லவ் டிராக்

    தேவையில்லாத லவ் டிராக்

    ஹாரர் படமாக உருவாகி உள்ள விக்ராந்த் ரோணா படத்தின் முதல் பாதி நல்லா இருக்கு, ஆனால், தேவையில்லாமல் லவ் டிராக்குகளை திணித்து இயக்குநர் சில இடங்களில் சொதப்பி உள்ளார். கிச்சா சுதீப்பின் வித்தியாச முயற்சியை ரசிகர்கள் வரவேற்பார்களா என்பதை வெயிட் பண்ணி பார்க்க வேண்டும் என இந்த நெட்டிசன் விமர்சித்துள்ளார். ஹாரர் படமாக உருவாகி உள்ள விக்ராந்த் ரோணா படத்தின் முதல் பாதி நல்லா இருக்கு, ஆனால், தேவையில்லாமல் லவ் டிராக்குகளை திணித்து இயக்குநர் சில இடங்களில் சொதப்பி உள்ளார். கிச்சா சுதீப்பின் வித்தியாச முயற்சியை ரசிகர்கள் வரவேற்பார்களா என்பதை வெயிட் பண்ணி பார்க்க வேண்டும் என இந்த நெட்டிசன் விமர்சித்துள்ளார்.

    ரங்கிதாரங்க 2

    ரங்கிதாரங்க 2

    2015ம் ஆண்டு இயக்குநர் அனுப் பந்தாரி இயக்கத்தில் வெளியான ரங்கிதாரங்க படத்தின் 2ம் பாகம் மாதிரியே இருக்கு, அந்த படத்தையே மீண்டும் கிச்சா சுதீப் நடிப்பில் பார்த்தது போன்ற உணர்வை தருகிறது. திரைக்கதையில் எந்தவொரு புதிய விஷயமும் இல்லாமல், படம் மண்ணைக் கவ்வி விட்டது என நெட்டிசன்கள் விளாசி உள்ளனர்.

    வெங்கட் பிரபு வாழ்த்து

    வெங்கட் பிரபு வாழ்த்து

    இயக்குநர் ராஜமெளலி, பிரசாந்த் நீல் உள்ளிட்ட பிரபலங்கள் படம் வெளியாவதற்கு முன்பே கிச்சா சுதீப்பின் இந்த பிரம்மாண்ட முயற்சி வெற்றி பெற வேண்டும் என வாழ்த்தி இருந்தனர். இந்நிலையில், கோலிவுட் இயக்குநரான வெங்கட் பிரபுவும் படம் பிளாக்பஸ்டர் அடைய தனது வாழ்த்துக்களை கூறி உள்ளார்.

    கேஜிஎஃப் அளவுக்கு இல்லை

    கேஜிஎஃப் அளவுக்கு இல்லை

    விக்ராந்த் ரோணா திரைப்படம் கேஜிஎஃப் படத்தை விட பிரம்மாண்டமாக இருக்கும் என்று எதிர்பார்த்து தியேட்டருக்கு சென்ற ரசிகர்களை ஏமாற்றி விட்டது என ரசிகர்கள் புலம்பி வருகின்றனர். 3டி விஷுவல்ஸ் அட்டகாசமாக உள்ளது என்றும், அதற்காகவும் கிச்சா சுதீப்பின் மிரட்டலான நடிப்புக்காக படத்தை ஒரு முறை பார்க்கலாம் என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

    English summary
    Vikrant Rona Twitter Review: Kichcha Sudeepa's period film getting Mixed Reviews from fans and it will can't beat KGF 2 at the box office reports are coming.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X