Sir Review: சார் விமர்சனம்.. கல்விக்கு எதிராக கடவுளை வைத்து ஏமாற்றும் கூட்டம்.. விமல் பாஸ் ஆனாரா?

Rating:
2.5/5

நடிகர்கள்: விமல், சாயா கண்ணன்

இசை: சித்துகுமார்

இயக்கம்: போஸ் வெங்கட்

சென்னை: இந்த ஆண்டு தொடர்ந்து ஏகப்பட்ட சாதிய ரீதியிலான படங்களும் அடக்குமுறை கருத்துக்களை கொண்ட படங்களும் வரிசையாக வெளியாகி வருகின்றன. இப்போ தும்முனாதான் உண்டு என்பது போல தொடர்ந்து இயக்குநர்கள் இது போன்ற கதைகளை எடுத்து படமாக்கி காசு பார்த்து வருகின்றனர்.

ரசிகர்களை என்டர்டெயின் செய்யும் படங்களை தாண்டி நல்ல கருத்துள்ள படங்கள் வருவது நல்ல விஷயம் தானே என்கிற கருத்துக்களும் எழத்தான் செய்கின்றன. தங்கலான், வாழை, லப்பர் பந்து, நந்தன் படங்களை தொடர்ந்து தற்போது வெற்றிமாறன் வெளியீட்டில் சார் படம் வெளியாகி இருக்கிறது.

vimal   review

கன்னி மாடம் படத்தை இயக்கிய நடிகர் போஸ் வெங்கட் இயக்கத்தில் 2வது படமாக உருவாகியுள்ள படம் தான் 'சார்'. விலங்கு வெப்சீரிஸுக்கு பிறகு வெற்றிக்காக போராடி வரும் விமலுக்கு இந்த படம் வெற்றிக் கனியை பரிசளித்ததா? இல்லையா? என்பது குறித்து விரிவாக இங்கே பார்க்கலாம் வாங்க.

சார் படக்கதை: மாங்கொல்லை ஊரில் 1960 முதல் 1980கள் வரை நடைபெற்ற கதையாகத்தான் இந்த படம் விரிகிறது. ஞானம் கதாபாத்திரத்தில் விமல் நடித்துள்ளார். அவருடைய தாத்தா கட்டிய பள்ளியை அவருடைய அப்பா நடுநிலை பள்ளியாக மாற்றுகிறார். அந்த பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக மாற்றி ஞானம் அங்குள்ள மாணவர்களுக்கு கல்வி கொடுத்து வருகிறார். ஆனால், ஆதிக்க சாதியை சேர்ந்த தலைவர் ஜெயபாலன் அனைத்து மக்களுக்கும் கல்வி கிடைத்து விட்டால் நமக்கு அடிமைகளாக இருக்க மாட்டார்கள் என்கிற நோக்கத்துடன் கடவுளின் பெயரை பயன்படுத்தி அந்த பள்ளிக் கூடத்தையே இடிக்க சதித்திட்டம் தீட்டுகிறார். அதை செய்யவிடாமல் விமல் தடுத்தாரா இல்லையா? அந்த ஊர் மக்களுக்கு கல்வி கிடைத்ததா? இல்லையா? என்பது தான் 'சார்' படத்தின் கதை.

படம் எப்படி இருக்கு?: ஞானம் கதாபாத்திரத்தில் விமல் வழக்கம் போல தனது நடிப்பில் எந்தவொரு குறைவும் வைக்காமல் நடித்துள்ளார். வாகை சூடவா படத்திற்கு பிறகு ஆசிரியராக நடிக்கும் வாய்ப்பு கிடைத்த நிலையில், அசத்திவிட்டார். அவருக்கு ஜோடியாக சாயா கண்ணன் வழக்கமான ஹீரோயினாக வந்து போகிறார். வில்லனாக வரும் ஆடுகளம் ஜெயபாலன் இந்த படத்திலும் நடிப்பில் மிரட்டியுள்ளார். முதல் பாதியில் காதல், காமெடி என படத்தின் டிராக் மாறி சென்றாலும், இரண்டாம் பாதியில் படம் கதையை சரியாக தேர்வு செய்து ரசிகர்களை கவர்கிறது.

பிளஸ்: கல்வி எந்தளவுக்கு முக்கியம் என்றும் சாமியே தடுத்தாலும் கடவுள் பெயரால் மூடநம்பிக்கையை யார் விதைத்தாலும் அவங்க சாமி இல்லை ஆசாமி தான். கல்வி தான் அனைவருக்குமான சாமி என்பதை இயக்குநர் போஸ் வெங்கட் எடுத்துக் கூறியுள்ள விதம் சிறப்பு. சித்துகுமாரின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை ரசிக்க வைக்கிறது. இனியன் ஹாரிஸ் தனது ஒளிப்பதிவால் படத்திற்கு தேவையான காட்சிகளை பிரம்மிப்பாக கொடுத்துள்ளார். கிராமத்தின் அழகு மற்றும் பீரியட் படத்துக்கான விஷயங்களை அருமையாக கையாண்டுள்ளார்.

மைனஸ்: படத்தின் முதல் பாதி சொல்ல வந்த கதையை விட்டு விட்டு தேவையில்லாமல் எங்கெங்கோ சென்றது தான் படத்திற்கு மிகப்பெரிய மைனஸ் ஆக மாறியுள்ளது. இரண்டாம் பாதியை கொண்டு சென்றதை போலவே முதல் பாதியையும் கதைக்கு நெருக்கமாகவும் தேவையற்ற காட்சிகளை தவிர்த்து இருந்தால் இந்த 'சார்' திரைப்படம் நிறைய மார்க் எடுத்திருக்கும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X