படம் செம மொக்கை.. விமலின் இமேஜே போச்சு.. தேசிங்கு ராஜா 2 பட விமர்சனம் இதோ!

Rating:
2.0/5
Star Cast: விமல்,பூஜிதா பொன்னடா,
Director: எஸ்.எழில்

சென்னை: நடிகர் விமல் நடிப்பில் இன்று தியேட்டரில் வெளியானத் திரைப்படம் தேசிங்கு ராஜா 2. இந்த படத்தில் விமல், புகழ், சினேகா குப்தா, ஜனா, பூஜிதா பொன்னடா, ஹர்சிதா பண்ட்லாமுரி, ரவி மரியா, சிங்கம்புலி, வையாபுரி, மொட்டை ராஜேந்திரன் ஆகியோர் நடித்துள்ளனர். 2013ம் ஆண்டு வெளியான தேசிங்கு ராஜா படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. அதில் விமல், பிந்து மாதவி, சூரி ஆகியோர் அட்டகாசமாக நடத்திருந்தனர். அதிக அளவில் வசூலை அள்ளி, இந்த படத்தின் வெற்றியால் இரண்டாம் பாகம் எப்போது வரும் என பலர் காத்திருந்த நிலையில், படம் இன்று தியேட்டரில் வெளியாகி உள்ளது. அதன் விமர்சனத்தை இப்போது பார்க்கலாம்.

கதையில் விமல் (குலசேகர பாண்டியன்) ஒரு காவல் நிலையத்தில் ஆய்வாளராக இருக்கிறார். அதே ஊரில் மற்றொரு காவல் நிலையத்தின் ஆய்வாளராக புகழ் பெண் வேடத்தில் (வர்னஜாலம்) என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதில், குலசேகர பாண்டியனுக்கும், வர்னஜாலத்திற்கும் யார் பெரியவர்கள் என்பதில் போட்டா போட்டி வருகிறது. இந்த நேரத்தில் 'மார்க்கெட் ரௌடி' ஒருவன் கொல்லப்படுகிறான். இந்த கொலையை செய்தது எம்.எல்.ஏ. ரவி மரியா என ஒரு ரௌடி கும்பல் சந்தேகப்படுகிறது. இதனால், ரவி மரியாவின் மகனை தீர்த்து கட்ட பழியை தீர்த்து கொள்ள அந்த ரௌடி கும்பல் திட்டம் போடுகிறது. இதை தெரிந்து கொண்ட எம்.எல்.ஏ, மகனை ரௌடிகளிடம் இருந்து காப்பாற்ற, விமலின் உதவியை நாடுகிறான். இதில், எம்.எல்.ஏ. மகனின் உயிர் தப்பியதா... இல்லையா.. என்பது தான் தேசிங்கு ராஜா 2 படத்தின் கதை.

desingu raja 2  vimal  review                                        2
Photo Credit:

தேசிங்கு ராஜா: தேசிங்கு ராஜா படத்தின் கதை இதுதான் என்று எழுதுவதற்குள், தலையே சுற்றிவிட்டது. அந்த அளவிற்கு திரைக்கதையில் பல ஓட்டைகள். சொல்லப்போனால், படத்தில் கதையே இல்லை. நகைச்சுவை என்ற பெயரில் ரசிகர்களை இரண்டரை மணி நேரம் கொடுமைப்படுத்தி அனுப்பி இருக்கிறார் இயக்குநர் எழில். தேசிங்கு ராஜா முதல் பாகம் மிகப்பெரிய வெற்றிப்படமாக்கிய இயக்குநர், இந்த படத்தில் கதையை கோட்டைவிட்டு விட்டார். ரவி மரியா, மொட்டை ராஜேந்திரன், சிங்கம்புலி, புகழ், வையா புரி என பல நகைச்சுவை நடிகர்கள் இருந்தும், படத்தில் பெயரளவிற்கு கூட சிரிப்பு வரவில்லை. குக் வித் கோமாளி புகழ், இந்த படத்தில் வர்னஜாலம் என்ற பெண் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படம் முழுக்க பெண் வேடத்திலே வந்ததால், அது எடுபடாமல் போனது. இருந்தாலும், புகழ் தன் வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார்.

விமலின் இமேஜை போச்சு: புதுமுக நாயகியாக பூஜிதா பொன்னடா காவல்துறை உயர் அதிகாரியாக நடித்து இருக்கிறார். அவருக்கு எதற்கு அந்த கதாபாத்திரம் என்று தெரியாத அளவிற்கு பெயருக்கு படத்தில் வந்து சென்றுள்ளார். அதே போல, குலசேகரன் கதாபாத்திரத்தில் வரும் விமலின் கதாபாத்திரமும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இல்லை. விலங்கு, ஓம் காளி ஜெய் காளி போன்ற வெப்தொடரில் மிரட்டி இருப்பார் விமல். கடந்த மாதம் விமல் நடிப்பில் வெளியான பரமசிவம் பார்வதி படத்தில் கலங்கி இருந்த விமல் இந்த படத்தில் நடித்து பெயரை கெடுத்துக்கொண்டார். நல்ல திறமையான நடிகரை இயக்குநர் வீணடித்துவிட்டார். வித்யா சாகரின் இசை எந்த இடத்திலும் எடுபடவில்லை, பாடல்கள் மனதில் ஒட்டவும் இல்லை. தலைநகரம் 2, சந்திரமுகி 2, இந்தியன் 2, விடுதலை 2 போன்ற திரைப்படங்கள் தோல்வியைத் தழுவிய நிலையில் அந்த வரிசையில் தேசிங்கு ராஜா 2 திரைப்படமும் இணைந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X