Pekamedalu Review: ச்சீ.. இப்படி ஒரு புருஷனா.. மோசமான கணவனால் சீரழிந்த பெண்ணின் வாழ்க்கை!

சென்னை: நீலகிரி மம்மிளா இயக்கத்தில், ராகேஷ் வர்ரே தயாரிப்பில் ஜூலை மாதம் தியேட்டரில் வெளியானத் திரைப்படம் தான் Pekamedalu. இந்த திரைப்படத்தில் வினோத் கிஷன், அனோஷா கிருஷ்ணா, ரெத்திகா ஸ்ரீனிவாஸ், ஜெகன் யோகிராஜ், அனுஷா நுதாலா, கணேஷ் திப்பராஜு, ஸ்ருதி என பலர் நடித்துள்ளனர். மலையாளத்தில் பல வித்தியாசமான கதைகளை நாம் பார்த்து இருப்போம் அந்த வகையில், ஒரு மோசமான கணவனால் ஒரு மனைவி என்னென்ன பிரச்சனைகளை அனுபவிக்கிறாள் என்பதுதான் இந்த திரைப்படத்தின் கதை.

Pekamedalu: படம் ஆரம்பிக்கும் போது ஹைதராபாத் சேரி காட்டப்படுகிறது அந்த சேரியில் லக்ஷ்மன் (வினோத் கிஷன்) மற்றும் வரலக்ஷ்மி (அனோஷா கிருஷ்ணா) தம்பதியினர் வாழ்ந்து வருகிறார்கள். இந்த தம்பதிக்கு ஒரு மகன் இருக்கும் நிலையில் லக்ஷமன் ரியல் எஸ்டேட் கம்பெனியில் வேலை செய்து வருகிறான். ஆனால், அவன் வேலைக்கு செல்லாமல் குடித்துக்கொண்டு, தினம் சீட்டு விளையாடி வருகிறான். கணவன் இப்படி ஊதாரியாக இருப்பதால், மனைவி வரலட்சுமி போலீஸ்காரர் வீட்டில் வேலை செய்து குடும்பத்தை நடத்தி வருகிறார். அப்படி மனைவி கஷ்டப்பட்டு சம்பாதித்து வரும் பணத்தை திருடிக்கொண்டு போய் குடிப்பதை வேலையாக வைத்து இருக்கிறான் லக்ஷமன்.

pekamedalu  review

பெண்ணுடன் தொடர்பு: ஒருநாள், அமெரிக்காவில் இருந்து இந்தியா வந்துள்ள ஒரு பெண் இந்தியாவில் வீடு வாங்குவதற்கான இடத்தை தேடிக்கொண்டு இருக்க, லக்ஷமன் படித்தவன் என்பதால், அந்த பெண் ஸ்வேதாவுடன் பழகி நட்பாகி விடுகிறான். அந்த பெண்ணிடம் நான் பெரிய தொழில் அதிபர் என்று அடுக்கடுக்கான பல பொய்களை சொல்ல, அந்த பெண்ணும் அது உண்மை என நம்பி நெருங்கி பழகி வருகிறாள். இந்த நேரத்தில் ஸ்வேதாவிடம் பிஸ்னஸ் செய்ய பணம் வேண்டும் என்று கேட்க, அந்த பெண்ணும், லக்ஷமன் மீது இருந்த காதலால் கொடுத்து உதவி செய்கிறாள். இப்படி லக்ஷமன் மனைவிக்கு தெரியாமல் தினமும் வேலை வேலை என்று பொய் சொல்லி ஸ்வேதாவுடன் பணக்கார வாழ்க்கை வாழ்ந்து வருகிறான்.

ஏமாத்துக்காரன்: ஒரு கட்டத்தில் லக்ஷ்மனின் மனைவி வரலட்சுமிக்கு இந்த விஷயம் தெரிய வருகிறது. இதையடுத்து இருவருக்கும் சண்டை வர, என்னால், இந்த குடிசையில் வாழ முடியாது, பணக்கார வாழ்க்கை தான் எனக்கு பிடித்து இருக்கிறது. நான் அவகிட்ட இருந்து நான் பணம் வாங்கி தரேன். நான், அவளை கல்யாணம் செய்யப்போகிறேன். இனிமேல் இந்த வீட்டுக்கு வரமாட்டேன் என்று சொல்லிவிட்டு போகிறான். ஆனால், ஸ்வேதாவிற்கு நண்பன் ஒருவனின் மூலமாக, லக்ஷமனின் ஏமாற்று வேலைகள் அனைத்தும் தெரிந்துவிடுகிறது. இதனால், அவனை வீட்டை விட்டு விரட்டி விடுகிறாள்.

கொடுமைக்கார கணவன்: இதையடுத்து வீட்டிற்கு வரும் லக்ஷமன், மனைவியிடம் மன்னிப்பு கேட்டு இனிமேல் குடிக்க மாட்டேன், எந்த தப்பும் செய்ய மாட்டேன் என்ற காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வரலட்சுமியும் மன்னித்துவிடுகிறாள். இதையடுத்து வரலட்சுமி புதிய வாழ்க்கையை தொடங்கலாம் என்று, வீட்டு வேலை செய்யும் போலீஸ்காரர் வீட்டில் 50 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கி, டிபன் கடையை ஆரம்பிக்கிறாள். இரண்டு நாள் ஒழுங்காக இருந்த லக்ஷமன் மீண்டும் வீட்டில் பணத்தை திருடி குடிக்கிறான். இதனால் வரலட்சுமி கோவப்பட்டு கேட்க, அவளை உருட்டு கட்டையால் அடிக்கிறான். வரலட்சுமியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்த வரலட்சுமியை காப்பாத்துகின்றனர்.

பெண்ணின் தைரியமான முடிவு: இதனால், ஒரு முடிவு எடுத்த வரலட்சுமி மகனின் வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டும் என்றால் இந்த இடத்தைவிட்டு போக வேண்டும். இப்படி ஒரு கணவன் எனக்கு தேவையில்லை என்று முடிவு செய்து குழந்தையை அழைத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே வந்து குழந்தைக்காக கஷ்டப்பட்டு வேலை செய்து நன்றாக படிக்க வைக்கிறாள். ஆனால், லக்ஷமன் மனைவி,மகனை பிரிந்த வலிக்கூட இல்லாமல் அதே போல ஊதாரியாக சுற்றிக்கொண்டு இருக்கிறான். இது ஏற்கனவே நாம் பார்த்த பழைய கதையாக இருந்தாலும் இதன் திரைக்கதை நன்றாக இருக்கிறது. தற்போது இந்த படம் ஓடிடியிலும் உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X