For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  Viruman Review: கார்த்தியின் விருமன் கர்ஜனையா? காமெடியா? விருமன் விமர்சனம் இதோ!

  |

  நடிகர்கள்: கார்த்தி, அதிதி ஷங்கர்

  இசை: யுவன் சங்கர் ராஜா

  இயக்கம்: முத்தையா

  Rating:
  3.5/5

  சென்னை: அண்ணன் சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிப்பில் தம்பி கார்த்தி நடித்துள்ள விருமன் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது.

  இந்த படத்தின் மூலம் இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் அறிமுகமாகி உள்ளார். அதற்கு சூர்யாவும் ட்வீட் போட்டு ரெட் கார்ப்பெட் விரித்து விட்டார்.

  இயக்குநர் முத்தையாவின் முந்தைய படங்களான கொம்பன், மருது போல படம் கர்ஜித்ததா இல்லை புலிக்குத்தி பாண்டி போல சுமார் ரகமா என்பதை விரிவாக இங்கே பார்ப்போம்..

   விருமன் பட கொண்டாட்டம்.. அடுத்தடுத்து ட்வீட் செய்த சூர்யா -கார்த்தி! விருமன் பட கொண்டாட்டம்.. அடுத்தடுத்து ட்வீட் செய்த சூர்யா -கார்த்தி!

  என்ன கதை

  என்ன கதை

  கணவர் முனியாண்டி (பிரகாஷ் ராஜ்) வேலைக்காரியோடு தொடர்பு வைத்திருக்கிறார் என்பதை அறிந்து மனமுடைந்து தற்கொலை செய்து கொள்கிறார் சரண்யா பொன்வண்ணன். அம்மா சாவுக்கு அப்பா தான் காரணம் என அறிந்த நிலையில், சிறு வயதிலேயே வீட்டை விட்டு வெளியேறி குஸ்தி வாத்தியாரான மாமா ராஜ்கிரண் உடன் சேர்ந்து கொள்ளும் விருமன் (கார்த்தி) வளர்ந்து பெரியவனான நிலையிலும் அப்பாவை பழிவாங்க போராடுவதும், கடைசியில் இருவரும் சேர்ந்தார்களா? இல்லை கிளைமேக்ஸில் என்ன ஆனது என்பது தான் விருமன் படத்தின் கதை.

  நான்காவது மகன்

  நான்காவது மகன்

  தாசில்தாரான முனியாண்டியின் 4வது மகன் தான் விருமன். விருமன் வீட்டை விட்டு வெளியேறினாலும் மற்ற மூன்று அண்ணன்கள் அப்பாவோடு இருக்கின்றனர். அந்த மூன்று பேருக்கும் இருக்கும் பிரச்சனைகளை ஒவ்வொன்றாக சரி செய்து அவர்களை தன் பக்கம் இழுத்து அப்பாவை பழிவாங்க நினைக்கிறார் விருமன். நக்கல், நையாண்டி, வீரம், மிரட்டல் என கார்த்தி ஒவ்வொரு ஃபிரேமிலும் சிறுத்தையாக சீறுகிறார்.

  தேன் இனிக்கிறாங்களா

  தேன் இனிக்கிறாங்களா

  இயக்குநர் ஷங்கரின் இளைய மகளான அதிதி ஷங்கர் டாக்டர் படிப்பை முடித்து விட்டு நடிகையாக விருமன் படத்தின் மூலம் அறிமுகமாகி உள்ளார். முதல் படம் என்பது தெரியாத அளவுக்கு அப்படியே ஒரு மதுரைக்காரப் பொண்ணாகவே தேன் எனும் கதாபாத்திரத்தில் திமிரும் அழகுடன் நடித்திருக்கிறார் அதிதி ஷங்கர். இடைவேளை காட்சியின் போது பஞ்சாயத்து நடந்து கொண்டிருக்க கார்த்திக்கு அவர் அடிக்கும் லிப் கிஸ் காட்சி ரசிகர்களை ஷாக் ஆக்குகிறது. தேன் இனிச்சாங்களான்னு கார்த்திக்குத் தான் வெளிச்சம். நடிப்பில் நல்ல துவக்கம் தான்.

  நடுவில் இருப்பவர்களின் சதி

  நடுவில் இருப்பவர்களின் சதி

  தங்கையின் சாவுக்கு மச்சான் தான் காரணம் என்பதால், சகோதரர்களான கருணாஸ் மற்றும் ராஜ்கிரணும் பிரகாஷ் ராஜுக்கே எதிராகவே இருப்பார்கள். வில்லன் ஆர்கே சுரேஷ் உள்ளிட்ட நடுவில் இருப்பவர்கள் சிலர் அப்பாவுக்கும் மகனுக்கும் இடையே இருக்கும் பகையை பயன்படுத்தி சொத்துக்களை அபகரிக்க போடும் திட்டம் என்ன ஆகிறது, விருமன் எப்படி முறியடிக்கிறான், ஒவ்வொரு பிரச்சனையும் ரிவீல் செய்ய தேன் எப்படி உதவுகிறாள் என்பது தான் மொத்தக் கதையே..

  பலம்

  பலம்

  ஏ சென்டர் ஆடியன்ஸ் இந்த படத்தை பார்க்கவில்லை என்றாலும் பரவாயில்லை பி அண்ட் சி பார்த்தால் போதும் என்கிற நோக்கத்துடன் தான் இயக்குநர் முத்தையா படத்தை இயக்கி உள்ளார். கார்த்தி, அதிதி ஷங்கரின் நடிப்பு படத்திற்கு பலம். யுவன் சங்கர் ராஜாவின் பிஜிஎம் மற்றும் பாடல்கள் மற்றும் அந்த பாடல்கள் எடுக்கப்பட்ட விதம் என அனைத்துமே அசத்தல். பொம்பளைங்கள ஆம்பளைங்க கேவலமா பார்க்கிறது. அழகான மனைவி இருக்கும் போதே தேவையில்லாமல் எக்ஸ்ட்ரா ஒன்று தேடுவது எல்லாம் குடும்பத்தை சீர் குலைக்கும் என சொல்லி இருப்பது நல்ல மெசேஜ்.

  Recommended Video

  Viruman எப்படி இருக்கு? குச்சி ஐஸ் சாப்பிட்டு Cool-லா அடிக்கும் Karthi

  பலவீனம்

  இந்த படத்தில் மெயின் வில்லன் என்றால் அது பிரகாஷ் ராஜ் தான். ஏற்கனவே பல படங்களில் பார்த்த அதே நடிப்பை இங்கேயும் ஏன் கொடுத்துள்ளார் என்கிற கேள்வி படம் பார்க்கும் போது இயல்பாகவே எழுகிறது. சூரி மற்றும் ரோபா சங்கர் மகள் இந்திரஜா சங்கர் பண்ணும் காமெடி காட்சிகள் ஒட்டவில்லை. வழக்கமான முத்தையா ட்ரீட்மென்ட் தான். பாசமும், உறவு முறையும் மனுஷனுக்கு எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்தும் கதையை கிராமத்து மசாலா படங்களின் கலவையாக கொடுத்திருக்கிறார். பருத்தி வீரன் அளவுக்கெல்லாம் ரசிகர்களால் கொண்டாடப்படும் அளவுக்கு எல்லாம் ஒன்றுமே இல்லை. ஜாலியாக குடும்பத்துடன் ஒருமுறை பார்க்கலாம்! do

  English summary
  Viruman Movie Review in Tamil (விருமன் விமர்சனம்): Karthi and Aditi Shankar done a good job, but Prakash Raj spoils the show with his old wine acting. Muthaiah gave a family bonding entertainment movie with commercial mixture.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X