விஷாலின் வீரமே வாகை சூடும் படம் எப்படி இருக்கு? சண்டைக்கோழியா? சண்டைக்கோழி 2வா?

சென்னை: விஷால், டிம்பிள் ஹயாத்தி, ரவீனா நடிப்பில் வெளியாகி உள்ள வீரமே வாகை சூடும் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளன.

பொங்கலுக்கு முன்னணி நடிகர்கள் படங்கள் ஏதும் வெளியாகாத நிலையில், பிப்ரவரி மாதம் தியேட்டர்களை திறந்து வைத்திருக்கிறார் விஷால்.

இந்தியாவில் 1500 தியேட்டர்களில் இன்று வெளியாகி உள்ள வீரமே வாகை சூடும் படம் எப்படி இருக்கு என நெட்டிசன்கள் பதிவிட்டுள்ள விமர்சனத்தை இங்கே காண்போம்..

2000 தியேட்டர்களில்

2000 தியேட்டர்களில்

முதல் நாளிலேயே ஒட்டுமொத்த வசூலையும் அள்ளி விடலாம் என நினைத்த விஷால் உலகம் முழுவதும் 2000 தியேட்டர்களிலும் அதில், இந்தியாவில் மட்டும் 1500 திரையரங்குகளில் சோலோ ரிலீசாக களமிறங்கி உள்ளார். விஷாலின் வீரமே வாகை சூடும் திரைப்படம் மீண்டும் தியேட்டர் ஓனர்களுக்கு வாழ்வளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தெறிக்கும் முதல் பாதி

தெறிக்கும் முதல் பாதி

வீரமே வாகை சூடும் படத்தின் முதல் பாகம் அருமையாக உள்ளதாகவும் ஏகப்பட்ட கிரைம் டிராக்குகள் இடம்பெற்று இருப்பதாகவும் விஷால் ஆக்‌ஷன் அவதாரத்தில் மிரட்டி உள்ளதாகவும் யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை தியேட்டரில் தெறிப்பதாகவும் ஃபர்ஸ்ட் ஹாஃப் பற்றிய பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.

கிளைமேக்ஸ் வரைக்கும் பரபரப்பு

கிளைமேக்ஸ் வரைக்கும் பரபரப்பு

நல்லா இருக்கு.. ப்ரீ இன்டர்வெலில் ஆரம்பமான பரபரப்பு கிளைமேக்ஸ் வரைக்கும் குறையவில்லை என இந்த நெட்டிசன் தனது விமர்சனத்தை முன் வைத்துள்ளார். மீண்டும் தியேட்டர்களில் ரசிகர்களின் கைதட்டல்கள் மற்றும் விசில் சத்தத்தை கேட்பதே சூப்பராக இருக்கு என்றும் ஒடிடியில் அந்த அனுபவம் இல்லை என ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

மைனஸ்

மைனஸ்

இன்டர்வெல் வரைக்கும் படம் நல்லா போச்சு.. சில க்ளிஷேக்களை தவிர்த்து இருக்கலாம். பிஜிஎம் மற்றும் கேமரா பர்ஃபார்மன்ஸ் அருமை. இரண்டாவது பாதிக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர் என இந்த நெட்டிசன் தனது கருத்தை பதிவிட்டுள்ளார். பெரும்பாலான ரசிகர்கள் விஷாலுக்கு இது நிச்சயம் ஒரு கம்பேக் படம் என்றே கூறி வருகின்றனர்.

சண்டக்கோழி தான்

சண்டக்கோழி தான்

முதல் பாதி படம் முடிந்தது. கிட்டத்தட்ட சண்டக்கோழி வைப் தான்.. ப்ரீ இன்டர்வெல் சண்டைக் காட்சி அனல் தெறிக்குது.. விஷாலுக்கு ஒரு சாலிட் கம்பேக் என இந்த நெட்டிசன் படத்திற்கு பாசிட்டிவான பல விஷயங்களை கூறியுள்ளார்.

Recommended Video

Veerame Vaagai Soodum | Dimple Hayathi | Vishal Sir தான் என்னுடைய Inspiration | Filmibeat Tamil
பழைய கதை

பழைய கதை

வீரமே வாகை சூடும் முதல் பாதி பொறுமையை ரொம்ப சோதிக்குது.. படம் முழுக்க பார்த்து பார்த்து புளித்துப் போன விஷாலின் பழைய படக் காட்சிகளே நிறைந்து காணப்படுகின்றன. இயக்குநரிடம் நிறைய எதிர்பார்த்தேன் ஆனால், ஏமாற்றி விட்டார் என இந்த நெட்டிசன் கமெண்ட் அடித்துள்ளார். கலவையான விமர்சனங்களுடன் அடுத்த பெரிய படம் வெளியாகும் வரை திரையரங்குகளில் விஷால் படம் வெற்றிநடை போடும் என தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X