Rathnam Review: ஹரி மாம்ஸ் சம்பவம்.. பழைய விஷால் வந்துட்டாரு.. ’ரத்னம்’ ட்விட்டர் விமர்சனம்!

சென்னை: இயக்குநர் ஹரி இயக்கத்தில் விஷால், பிரியா பவானி சங்கர், சமுத்திரகனி, முரளி ஷர்மா, கெளதம் மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள ரத்னம் படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். கனல் கண்ணன் சண்டைக் காட்சியில் உருவாகி உள்ள இந்த படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி இருக்கிறது.

நடிகர் விஷால் ஏற்கனவே ஹரி இயக்கத்தில் தாமிரபரணி மற்றும் பூஜை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அதன் பின்னர் பல ஆண்டுகள் கழித்து மீண்டும் ஹரி இயக்கத்தில் இணைந்து உருவாக்கியுள்ள படம் தான் ரத்னம்.

Vishal s Rathnam Twitter Review in Tamil

ஆக்‌ஷன் பிளாக்பஸ்டர் படமாகவே இந்த படம் இருக்கும் என ஹரி சொன்ன நிலையில், அந்த படத்தை பார்த்த ரசிகர்கள் ரத்னம் படம் ரசிக்க வைத்ததா? இல்லையா? என்பது குறித்து ட்விட்டர் பக்கத்தில் விமர்சனங்களை அடுக்கி வருகின்றனர்.

ஹரியின் ரத்னம்: தமிழ், சாமி, ஐயா, ஆறு, கோவில், சிங்கம் 1,2 மற்றும் 3, தாமிரபரணி, சேவல், வேங்கை, பூஜை, சாமி ஸ்கொயர், யானை உள்ளிட்ட படங்களை இயக்கிய ஆக்‌ஷன் இயக்குநர் ஹரி இயக்கத்தில் விஷால், பிரியா பவானி சங்கர் நடித்துள்ள ரத்னம் திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது. கடைசி நேரத்தில் கட்ட பஞ்சாயத்து பண்றாங்க திருச்சி மற்றும் தஞ்சாவூர் ஏரியாவில் படத்தை வெளியிட விடாமல் தடுக்கிறாங்க என விஷால் குற்றச்சாட்டை முன் வைத்த நிலையில், ரத்னம் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் ஆதரவு கிடைக்கிறதா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். படத்தை பார்த்த ரசிகர்கள் முதல் பாதி மற்றும் இரண்டாம் பாதி குறித்து வெளியிட்டுள்ள விமர்சனங்களை இங்கே பார்க்கலாம் வாங்க..

கோவிலும் ஹரியும்: சிம்புவை வைத்து கோவில் படத்தை இயக்கிய ஹரி தனது அனைத்து படங்களிலும் டைட்டில் கார்டில் தனது பெயர் வரும் இடத்தில் ஒரு கோயிலை காட்டிவிடுவார். அவருடைய அந்த ஆன்மிக டச் இந்த ரத்னம் படத்திலும் இடம்பெற்றிருப்பதே பார்க்க நல்லா இருக்கு என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

மாஸ்டர்பீஸ்: புஷ்பா 2 படத்துக்கு இசையமைத்து வரும் தேவி ஸ்ரீ பிரசாத் தான் விஷாலின் ரத்னம் படத்துக்கும் இசையமைத்துள்ளார். அவர் படத்துக்கு போட்டுள்ள தரமான பிஜிஎம் படத்தை தூக்கி நிறுத்துகிறது என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். நல்ல நடிப்பு மற்றும் விறுவிறுவென இருக்கும் ஸ்க்ரீன்பிளே மிரட்டுகிறது. ஹரி இன்னொரு மாஸ்டர்பீஸை ரசிகர்களுக்கு கொடுத்திருப்பதாக இந்த நெட்டிசன் விமர்சனத்தை முன் வைத்துள்ளார்.

பழைய விஷால் வந்துட்டாரு: ரத்னம் படத்தின் முதல் பாதியை பார்த்து விட்டேன். ஹரி மாம்ஸ் தரமான சம்பவம் செய்துள்ளார். பழைய விஷால் இந்த படத்தின் மூலம் மீண்டும் வந்து விட்டாரு என ரசிகர்கள் பாசிட்டிவ் விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர்.

எல்லாமே இருக்கு: ரத்னம் படத்தின் முதல் பாதியில் 4 சண்டைக் காட்சிகள், 3 பாடல்கள், 2 எமோஷனல் சீன், ஒரு சின்ன ட்விஸ்ட்னு எல்லாமே இருக்கு என தில் ராஜு மீம் போட்டு இந்த ரசிகர் ட்வீட் போட்டுள்ளார்.

ஆவரேஜ் தான்: ஹரி இயக்கத்தில் விஷால் நடித்துள்ள ரத்னம் படத்தின் முதல் பாதியை பார்த்து விட்டேன். ஆவரேஜான படம் தான். இரண்டாம் பாதியாவது இன்ட்ரஸ்டிங்காக இருக்கா என பொறுத்திருந்து பார்ப்போம் என இந்த நெட்டிசன் நெகட்டிவ் விமர்சனத்தை கொடுத்துள்ளார்.

ரொம்ப டல் அடிக்குது: ரத்னம் படம் முதல் 30 நிமிடங்கள் ரொம்பவே டல் அடிக்குது. லவ் சீன்லையும் ஒரு சென்டிமென்ட் கனெக்‌ஷன் இருக்கு. அந்த 5 நிமிஷம் சிங்கிள் ஷாட் ஸ்டண்ட் வேறலெவல். எமோஷனலா கனெக்ட் ஆகுது, படம் பார்க்கலாம் என இந்த ரசிகர் விமர்சித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X