Trauma Review: ட்ராமா படம் எப்படி இருக்கு.. பயில்வான் ரங்கநாதனின் விமர்சனம் இதோ!
சென்னை: இயக்குனர் தம்பிதுரை மாரியப்பன் இயக்கிய திரைப்படம் தான் க ட்ராமா. டர்ம் புரொடக்ஷன்ஸ் பேனரில் எஸ். உமா மகேஸ்வரி தயாரிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படம் நேற்று தியேட்டரில் வெளியானது. அதில் விவேக் பிரசன்னா, பூர்ணிமா ரவி, ஆனந்த் நாக், சாந்தினி தமிழரசன், நிழல்கள் ரவி, மாரிமுத்து, பிரதோஷ், வையாபுரி, ரமா, நமோ நாராயணன், பிரதீப் கே. விஜயன், 'ஸ்மைல்' செல்வா, மதனகோபால் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சமுதாயத்துக்குத் தேவையான ஆனால் பேசப்பாடத ஒரு விஷயத்தை கையில் எடுத்து ஒரு நல்ல திரைப்படமாக கொடுத்து இருக்கிறார். இயக்குநர் இப்படம் குறித்து பயில்வான் ரங்கநாதனின் விமர்சனத்தை பார்க்கலாம்.
ட்ராமா திரைப்படத்தில் விவேக் பிரசன்னாவின் மனைவியாக சாந்தினி தமிழரசன் நடித்திருக்கிறார். நல்ல வேலை, அன்பான மனைவி என இவர்களின் வாழ்க்கை சென்று கொண்டிருக்கிறது. ஆனால், விவேக் பிரசன்னாவிற்கு குழந்தை இல்லை. சாந்தினி தமிழரசனுக்கு குழந்தைகள் என்றால் கொள்ள பிரியம். குழந்தை பிறக்க வேண்டும் என்பதற்கான இருவரும் பல மருத்துவமனைகளுக்கு செல்கின்றனர். இதில், தனக்குத்தான் குறை இருக்கிறது என்பதை தெரிந்து கொண்ட விவேக் பிரசன்னா, மாற்று வழியின் மூலம் குழந்தை பெற்றுக் கொள்வதற்கான முயற்சிகளை மேற்கொள்கிறார்.

படத்தின் கதை: ஒரு பக்கம் கதை இப்படியே சென்றுகொண்டிருக்க, மற்றொரு கதையில், பூர்ணிமா ரவி ஒருவரை காதலிக்கிறார். இவர்கள் காதலிப்பதற்கு முக்கிய காரணமே பூர்ணிமா ரவியின் பெட்ரோல் பங்க் ஓனர் தான். ஒரு நாள் பூர்ணிமா ரவி தனியாக இருப்பதை தெரிந்து கொண்டு, அவரை கற்பழிக்க முயற்சி செய்கிறார். அப்போது, பிரதோஷம் அவளை காப்பாற்றுகிறார்.இதன்பின் ஒருவரை ஒருவர் காதலிக்கின்றனர். ஒரு கட்டத்தில் இருவரும் வரம்பு மீறி பழகிவிட,பூர்ணிமா ரவி கர்ப்பம் அடைகிறாள். வீட்டில் பெற்றோர் கருவை கலைக்க சொல்கின்றனர். பூர்ணிமா கருவை கலைத்தாரா... இல்லையா என்பது சஸ்பென்ஸ். அதே நேரம், குழந்தைக்கு தாயான சாந்தினி தமிழரசனுக்கு ஒரு வீடியோ வருகிறது. அந்த வீடியோவில், உன் கையில் இருக்கும் குழந்தை உனக்கும் எனக்கும் பிறந்த குழந்தை, நான் தான் உன்னுடன் உடலுறவு கொண்டேன் என்று சொல்ல,சாந்தினி அதிர்ச்சி அடைகிறாள்.இப்படி இரண்டு பெண்களின் சோதனை மற்றும் துயரத்தை அழகாக கதையாக்கி நகர்த்தி இருக்கிறார் இயக்குநர் தம்பிதுரை மாரிமுத்து.

விவேக் பிரசன்னா: இந்தத் திரைப்படத்தில் வில்லனாக நடித்திருக்கும் விவேக் பிரசன்னா, தன்னுடைய திறமையான நடிப்பை வெளிப்படுத்தி அப்ளாசை பெற்று இருக்கிறார். அவருக்கு ஒரு நல்ல கதாபாத்திரத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் தம்பிதுரை மாரியப்பன். தன்னால் மனைவிக்கு ஒரு குழந்தையை கொடுக்க முடியவில்லை என்ற ஏக்கம், இதை தெரிந்து கொண்ட ஒருவன் மனைவியுடன் விளையாடிவிட்டானே என்கின்ற ஆத்திரத்தை என சமமான நடிப்பை திரையில் காட்டி இருக்கிறார் விவேக் பிரசன்னா. அதேபோல, உயிருக்கு உயிராக காதலித்த காதலன், தன்னை ஏமாற்றி விட்டானே என்றார் விரக்தியில் பரிதவிப்பதை அழகாக வெளிப்படுத்தி இருக்கிறார் பூர்ணிமா ரவி.
சிறப்பான கதை: இந்த திரைப்படத்திற்கு ஆர் எஸ் ராஜ் பிரசாத் இசையமைத்திருக்கிறார். பாடல்கள் பெரிதாக மனதை தொடவில்லை என்றாலும் பின்னணி இசையில் பெயர் வாங்கி இருக்கிறார்.பின்னணி இசையில் பெயர் வாங்கியதை பாடலில் காட்டி இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்து இருக்கும். இயக்குநர் தம்பிதுரை மாரியம்மன் அறிமுக இயக்குநராக இருந்தாலும், முதல் படத்திலேயே அழமாக மனதை கவர்ந்து இருக்கிறார். அதற்கு காரணம் படம் ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் செல்கிறார். அந்த காட்சி இதுவாகத்தான் இருக்கும் நாம், நினைத்தால் திரையில் வேறுமாதிரி காட்டி இருக்கிறார் இயக்குநர். ட்ராமா என்றால் அதிர்ச்சி என்று பொருள். செயற்கை கருவுறுதல் என்ற விஷயத்திற்கு பின் இருக்கும் அதிர்ச்சி தரும் க்ரைம் அம்சத்தை சொல்லி இருக்கிறார்.. அதுதான் படத்தின் விறுவிறுப்புக்கு காரணமாக உள்ளது.

நல்ல படம்: இதுபோன்ற ஆந்தாலஜி படைப்புகளுக்கு படத்தொகுப்பு தான் பலம். அதனை இந்த படத்தில் நேர்த்தியாக செய்திருக்கிறார் படத்தொகுப்பாளர் முகன் வேல். சிறிய முதலீட்டு திரைப்படமாக இருந்தாலும் ஒளிப்பதிவாளர் அஜித் ஸ்ரீனிவாசன் சிறப்பான வேலையை கையாண்டுள்ளார். மொத்தத்தில் ட்ராமா திரைப்படம் நல்ல க்ரைம்,திரில்லர் திரைப்படமாக மட்டுமில்லாமல், படத்தில் காதலும் இருக்கிறது. பாடமும் இருக்கிறது. இதனால், அனைவரும் பார்க்கக்கூடிய ஒரு தரமான திரைப்படமாக உள்ளது. அனைவரும் தியேட்டருக்கு சென்று இந்த படத்தை பார்த்து ரசிக்கலாம். இந்த படத்திற்கு நான் கொடுக்கும் மதிப்பெண் 100க்கும் 55 என பயில்வான் ரங்கநாதன் விமர்சனத்தில் கூறியுள்ளார்.

ராதா ரவி பேச்சு: கடந்த வாரம் ட்ராமா திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய ராதா ரவி, இப்படத்தில் நடிக்க வைப்பதற்காக என்னுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். அதன் பிறகு படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக வருகை தாருங்கள் என அழைத்தார். நான் இங்கு வருகை தராமல் இருந்திருந்தால் ஒரு நல்ல விஷயத்தை தவறவிட்டிருப்பேன் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், நடிகர்களுக்கு அடையாளம் என்பது முக்கியம். தற்போது கூட என் தந்தையார் எம்.ஆர். ராதாவை பற்றி பல விஷயங்களை பேசிக்கொண்டு தான் இருக்கிறார்கள். சரியோ தவறோ பேசிக் கொண்டு தான் இருக்கிறார்கள். நமக்கு மரியாதை கொடுத்தால் தான் மரியாதை கொடுப்போம். சினிமாக்காரர்கள் யாரும் தரக்குறைவானவர்கள் அல்ல. இயக்குநரை பற்றி மற்றவர்கள் அனைவரும் பேசும்போது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. நான் சினிமாவில் அறிமுகமாகி 51 வருடங்கள் ஆகின்றன. நான் நடிப்பதற்கு மட்டும் தான் லாயக்கு, என் சகோதரர் கமல் ஹாசனை போல் என்னால் இருக்க முடியாது. ஏனெனில் எனக்கு ஏகப்பட்ட 'வெளி' வேலைகள் இருக்கின்றன. இந்த திரைப்படத்தில் நடிக்க முடியவில்லையே என்ற வருத்தம் உள்ளுக்குள் இருந்து கொண்டு தான் இருக்கிறது.
இந்தப் படத்தின் பெயர் 'ட்ராமா'. ஆனால், இந்தப் படத்தை பார்ப்பவர்களை ட்ராமாவில் விடாது. தற்போது சினிமா எடுப்பதும் எளிது, சினிமாவில் நடிப்பதும் எளிது, வெளியிடுவது தான் கஷ்டம். அதே போல முன்பெல்லாம் 25வது நாள், ஐம்பதாவது நாள், நூறாவது நாள் என்று தான் படத்தின் வெற்றிவிழாவை கொண்டாடுவார்கள். ஆனால், தற்போது படம் வெளியாகி மூன்றாவது நாளிலேயே வெற்றிகரமான மூன்றாவது நாள் செக்சஸ் மீட் வைத்து போஸ்டர் அடித்து கொண்டாடுகிறார்கள் என்று பேசி இருந்தார்,


Click it and Unblock the Notifications











