War 2 Review: வார் 2 விமர்சனம்.. உலகம் சுற்றும் வாலிபர்கள்னு வச்சிருக்கலாம்.. கதைதான் நகரல!

Rating:
3.0/5
Star Cast: ஹ்ரித்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர், கியாரா அத்வானி
Director: அயன் முகர்ஜி

சென்னை: 'வார் 2' திரைப்படம் பிரம்மாண்ட சண்டைக் காட்சிகளுடன் உருவாகி இருந்தாலும் கதை மற்றும் திரைக்கதை ரொம்பவே வீக்காக உள்ள நிலையில், வார் படத்தை போல ரசிகர்களை கவரவில்லை என்று தான் சொல்ல வேண்டும். ஹ்ரித்திக் ரோஷன் மற்றும் ஜூனியர் என்டிஆர் இணைந்து பல நாடுகளுக்கும் சுற்றுலா சென்றது போல இருக்கு, ஆனால், கதை தான் நகரவே இல்லை.

அயன் முகர்ஜி இயக்கிய இந்த படத்தில், "இந்தியா ஃபர்ஸ்ட்" தேசபக்தி, பழைய நட்பு, புதிய எதிரிகள் என எங்கெங்கோ செல்கின்றன. ஆனால், ரசிகர்களை முழுப் படமாக திருப்திப்படுத்தவில்லை என்பது தான் வருத்தமடைய செய்கிறது.

War 2 Review  Hrithik Roshan and Jr NTR fights are powerpacked but  story lacks
Photo Credit:

பாலிவுட்டில் ஜூனியர் என்டிஆர் அறிமுகமாகியுள்ள நிலையில், அவரது நடிப்பு மற்றும் துடிப்பு எல்லாம் வெறித்தனமாக இருந்தாலும் திரைக்கதையில் இயக்குநர் கோட்டை விட்டது படத்தை தூக்கி நிறுத்த முடியாமல் தவிக்க பாவம் ஹ்ரித்திக் ரோஷனும், ஜூனியர் என்டிஆரும் என்ன செய்வார்கள் பாவம் என்கிற எண்ணத்தை தான் தூண்டுகிறது. படத்தின் கதை, பிளஸ் மற்றும் மைனஸ் உள்ளிட்டவற்றை விரிவாக பார்க்கலாம் வாங்க..

வார் 2 கதை: வார் படத்தில் நாட்டை உயிரைக் கொடுத்து காப்பாற்றிய ஹ்ரித்திக் ரோஷன் வார் 2 படத்தில் ஒரு ஸ்பெஷல் மிஷனுக்காக தேசத்துரோகியாக மாறுகிறார். அதற்காக அவர் சீனியர் அதிகாரியான ஆஷுதோஷ் ராணாவை கொல்ல நேரிடுகிறது. ஹ்ரித்திக் ரோஷன் கால் எனும் வில்லன் கேங்கில் போக்கிரி விஜய்யாக உள்ளே நுழைய அவரை வேட்டையாட உயர் அதிகாரியின் மகள் காவ்யா கதாபாத்திரத்தில் கியாரா அத்வானியும் விக்ரம் கதாபாத்திரத்தில் ஜூனியர் என்டிஆரும் என்ட்ரியாகின்றனர். ஜூனியர் என்டிஆர் சிறு வயது நண்பராகவும் ஹ்ரித்திக் ரோஷனுக்கு இருக்க, தன்னுடைய மிஷனை அவர் செய்யப் போகும் போதெல்லாம் ஜூனியர் என்டிஆர் தடுக்க வர, இருவரும் வானிலும், நீரிலும், பனியிலும், நெருப்பிலும் சண்டைகள், ரயில் சுரங்கப்பாதையில் மோதல்கள், குண்டுகளைத் தாண்டி கார்த் துரத்தல்கள் என கிளைமேக்ஸ் வரை உலகம் சுற்றும் வாலிபர்களாக மாறுவது தான் படத்தின் கதை.

War 2 Review  Hrithik Roshan and Jr NTR fights are powerpacked but  story lacks
Photo Credit:

பிளஸ்: ஹ்ரித்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இருவரும் ஆக்‌ஷனில் பட்டையை கிளப்புகின்றனர். இந்த சுதந்திர தினத்துக்கான சரியான ட்ரீட்டாக இந்த படம் இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. கிளாமருக்கு கியாரா அத்வானி தனக்கு கொடுத்த வேலையை செய்து முடித்திருக்கிறார். ஆனால், பெரிதாக அவருக்கு ஸ்கோப் இல்லை. ஆக்‌ஷன் கொரியோகிராஃபி அட்டகாசம். கிளைமேக்ஸில் மாஸ்டர் சண்டைக் காட்சிகள் எல்லாம் செம மாஸாக வைத்திருக்கிறார் இயக்குநர் அயன் முகர்ஜி.

மைனஸ்: ஒரு கட்டத்திற்குப் பிறகு, உண்மையான நோக்கம் மறந்து, ஹ்ரித்திக் ரோஷன் மற்றும் ஜூனியர் என்டிஆரின் சண்டைக் காட்சிகள் மட்டுமே தெரிகிறது. அதிலும் போலியான சிக்ஸ்-பேக் சீன்களும், மோசமான சிஜிஐ தொழில்நுட்பமும் படத்திற்கு பெரிய மைனஸ் ஆக உள்ளது. ஒரு காட்சியில், என்டிஆர் நெஞ்சுக்கு மிக அருகில் ஒரு குண்டடி பட்டு, அறுவை சிகிச்சைக்குப் பின் மார்பில் ஒரு முடி கூட சிதையாமல் வருகிறார். மற்றொரு காட்சியில், ஹ்ரித்திக் மற்றும் கியாரா ஒரு ஜீப்பில் இருந்து குதித்தாலும் எந்தப் பாதிப்பும் இல்லாமல் இருக்க, ஜீப் மீது பைக்கர்கள் தொடர்ந்து சுட்டாலும், அதன் ஹெட்லைட்கள் பிரகாசமாக எரிகின்றன. வார் முதல் பாகத்தை இயக்கிய சித்தார்த் ஆனந்த் அடுத்ததாக ஹ்ரித்திக் ரோஷனை வைத்து எடுத்த ஃபைட்டர் படமே ஃபிளாப் ஆனது. இந்நிலையில், அயன் முகர்ஜி வார் 2 படத்தை எடுத்துள்ள நிலையில், இந்த படமும் அவருக்கு பெரிதாக கைகொடுக்கவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X