twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    Watchman Review: ஒரு நாயும், ஜி.வி.யும் செய்யும் அட்டகாசத்தை பாருங்கள்... வாட்ச்மேன்! விமர்சனம்

    ஒரு வீட்டிற்குள் திருட செல்லும் நாயகன், அங்கு ஒரு ஆபத்தில் மாட்டிக்கொள்ளும் கதை தான் வாட்ச்மேன் திரைப்படம்.

    |

    Rating:
    3.0/5
    Star Cast: ஜி வி பிரகாஷ் குமார், யோகி பாபு, சாயீஷா சைகல், சம்யுக்தா ஹெக்டே
    Director: ஏ எல் விஜய்

    சென்னை: கடனை அடைப்பதற்காக ஒரு வீட்டிற்குள் திருட செல்லும் நாயகன், அங்கு ஒரு ஆபத்தில் மாட்டிக்கொள்ளும் கதைதான் வாட்ச்மேன் திரைப்படம்.

    கந்து வட்டிக்கு கடன் வாங்கிவிட்டு அதனை திருப்பி செலுத்த முடியாமல் தவிக்கிறார் ஜி.வி.பிரகாஷ். காதலி சம்யுக்தா ஹெட்டே உடன் மறுநாள் திருமண நிச்சயதார்த்தம் என்ற நிலையில், கடனை திரும்ப செலுத்தாவிட்டால் அது நின்றுபோகும் நிலை ஏற்படுகிறது. யாரிடம் கேட்டும் பணம் கிடைக்காத நிலையில், ஒரு பங்களாவில் திருட செல்கிறார் ஜி.வி.பிரகாஷ். அங்கு அவருக்கு ஒரு பெரிய ஆபத்து காத்திருக்கிறது. அது என்ன ஆபத்து, அதில் இருந்து ஜி.வி.எப்படி தப்பிக்கிறார் என்பது தான் கதை.

    Watchman review: A super thriller movie with G.Vs extraordinary background score

    ஒரு பாராவுக்குள் முடியும் இந்த கதையை போலவே, திரைக்கதையையும் ஷார்ப்பாக அமைத்திருக்கிறார் இயக்குனர் ஏ.எல்.விஜய். மொத்தம் ஒன்றரை மணி நேரம் தான் முழு படமும். அதனை விறுவிறுப்பாக சொல்ல வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் திரைக்கதை அமைத்திருக்கிறார் விஜய்.

    Watchman review: A super thriller movie with G.Vs extraordinary background score

    முதல் பாதி படம் ஒரு நாளின் வெவ்வேறு நாளிகைகளில் முன்னும் பின்னுமாக பயணிக்கிறது. இது ஒருவித குழப்பத்தை ஏற்படுத்தினாலும், என்ன நடக்கிறது என்ற ஆவலை தூண்டுகிறது. இரண்டாம் பாதியில் சமமணிக்கு வரும்போது, படம் தெளிவான பாதையில் பயணிக்க தொடங்கி, விறுவிறுப்பாக நகர்கிறது.

    கடந்த வாரம் ரிலீசான குப்பத்து ராஜா, இன்னும் தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கும் போதே, அடுத்த படமும் ரிலீசாகி இருக்கிறது ஜி.வி.க்கு. இந்த படத்திலும் லோக்கல் பையனாக தான் வருகிறார். ஆனால் மெச்சூர்டாக நடித்திருக்கிறார். நாயைக் கண்டு பயந்து ஓடி, தண்டல்காரனை சமாளித்து, காதலியிடம் கெஞ்சி கூத்தாடி, பயங்கரவாதிகளுடன் மல்லுக்கட்டி என ஜி.வி.க்கு இந்த படத்தில் பெர்பாமன்ஸ் காட்ட வேண்டிய கட்டாயம் அதிகம். நன்றாகவே செய்திருக்கிறார்.

    Watchman review: A super thriller movie with G.Vs extraordinary background score

    ஆரம்பத்தில் டெரர் எண்ட்ரி கொடுத்து, போகப் போக தனது செய்கைகளால் ஷோ ஸ்டீலராக மாறிவிடுகிறது ப்ரூனோ (நாய்). தனது முதலாளி மீது ப்ரூனோ வைத்திருக்கும் விஸ்வாசமும், அவரை காப்பாற்ற விவேகத்துடன், அது செய்யும் வீரதீர செயல்களும் ரசிக்க வைக்கின்றன.

    ஓய்வுப்பெற்ற போலீஸ் அதிகாரி ரோலில் கச்சிதமாக பொருந்துகிறார் சுமன். யோகி பாபு காமெடி இந்த படத்தில் ஒர்க்கவுட் ஆகவில்லை. ஷூட்டிங்கில் பேசிய வசனத்தை, டப்பிங்கில் மாற்றிருப்பது, பொருந்தாத உதட்டசைவின் மூலம் அப்பட்டமாக தெரிகிறது.

    Watchman review: A super thriller movie with G.Vs extraordinary background score

    ஜி.வி.யே படத்தின் முழு பொறுப்பையும் பார்த்துக்கொள்வதால், ஹீரோயின் சம்யுக்தா ஹெக்டேவுக்கு வேலையே இல்லை. ஒருநாள் கால்ஷீட்டில் ஹீரோயினின் மொத்த காட்சிகளையும் முடித்திருக்கிறார்கள் போல.

    யோகி பாபு விட்ட இடத்தை முனிஸ்காந்த் தான் நிறைவு செய்கிறார். போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் எடிட்டர் ஆண்டனி, கந்துவட்டிக்காரராக நடித்திருக்கும் ஸ்டண்ட் சில்வா உள்ளிட்டோரும் சில காட்சிகளின் ஃபில்லர்களாக பயன்படுத்தப்பட்டுள்ளனர். வில்லன் ராஜ் அர்ஜுன் பேருக்கு தான் வில்லனாக வருகிறார்.

    Watchman review: A super thriller movie with G.Vs extraordinary background score

    பாடல்கள் இல்லை என்றாலும், தனது பின்னணி இசையால் படத்தை மெருகேற்றியுள்ளார் ஜி.வி.பிரகாஷ். ஒவ்வொரு ஃபிரேமையும் ரசித்து ரசித்து இசையமைதிருக்கிறார். படத்தின் உண்மையான ஹீரோ ஜி.வி.யின். பின்னணி இசைதான்.

    நிரவ்ஷாவின் ஒளிப்பதிவு படத்தை ஹாலிவுட் தரத்திற்கு கொண்டு சென்றுள்ளது. பங்களாவில், இருட்டு அறைகளில் நடக்கும் காட்சிகளில், ஒவ்வொரு ஃபிரேமும் மிரட்டலாக இருக்கிறது. ஒவ்வொரு ஷாட்டும் ரேஸ் கார் போல் பறக்கிறது ஆண்டனியின் எடிட்டிங்கில்.

    Watchman review: A super thriller movie with G.Vs extraordinary background score

    ஒரு நாளில் நடக்கும் சம்பவம் தான் படத்தின் கதை. ஆனால் அதனை முன்னுக்கு பின்னாக மாற்றி மாற்றி காட்டுவதால், தேவையில்லாத குழப்பம் ஏற்படுகிறது. நேர்த்தியான திரைக்கதையில் கூட இதனை காட்சிப்படுத்தி இருக்கலாம்.

    Watchman review: A super thriller movie with G.Vs extraordinary background score

    மொத்தத்தில் 'வாட்ச்மேன்' ஒரு சூப்பரான திரில்லர் அனுபவம்.

    Gangs of Madras review: ரத்தம் தெறிக்க தெறிக்க..ஆண்களை வேட்டையாடும் பெண் புலி.. கேங்ஸ் ஆப் மெட்ராஸ் Gangs of Madras review: ரத்தம் தெறிக்க தெறிக்க..ஆண்களை வேட்டையாடும் பெண் புலி.. கேங்ஸ் ஆப் மெட்ராஸ்

    English summary
    Watchman is a tamil thriller film written and directed by A. L. Vijay. The film stars G. V. Prakash Kumar in lead role as well as the music composer for this film, reuniting with Vijay since their last film, Idhu Enna Maayam (2015). The film stars Samyuktha Hegde as the female lead also stars Yogi Babu and Raj Arjun in supporting roles.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X