With Love Blue Sattai Maran Review: வித் லவ் ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்.. இடைவேளை ஓகே.. ஆனா மத்தது?
சென்னை: அறிமுக இயக்குநர் மதன் கதை, திரைக்கதை எழுதி இயக்கி உள்ள படம், வித் லவ். இந்த படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகம் ஆகி உள்ளார் டூரிஸ்ட் ஃபேமிலி இயக்குநர் அபிஷன் ஜீவிந்த். இவருக்கு ஜோடியாக அனஸ்வரா ராஜன் நடித்துள்ளார். படத்தை எம்.ஆர்.பி என்டர்டைமெண்ட் மகேஷ் மற்றும் சீயோன் ஸ்டூடியோஸ் சௌந்தர்யா ரஜினிகாந்த் இணைந்து தயாரித்துள்ளனர். படத்திற்கு ஷான் ரோல்டன் இசை அமைத்துள்ளார். படம் நேற்று அதாவது பிப்ரவரி 6ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆனது. படத்திற்கு ப்ளூ சட்டை மாறன் தனது ஸ்டைலில் விமர்சனம் ஒன்றை கொடுத்துள்ளார்.
அவரது விமர்சன வீடியோவில், " படத்தின் கதையை பொறுத்தவரையில் கதாநாயகனுக்கு பெண் பார்க்கிறார்கள். அவர்கள் இருவரும் சந்தித்து பேசும் போது அவர்களது கடந்த காலம் குறித்து பேசுகிறார்கள். இருவரும் ஒரே பள்ளியில் படித்துள்ளார்கள். ஆனால் ஆண்டுகள் வித்தியாசம் உள்ளது. இருவருக்கும் அந்த பள்ளியில் ஒரு காதல் இருந்துள்ளது. அதை இருவருமே வெளிப்படுத்தியது இல்லை. எனவே தங்களது பள்ளி காலத்தில் அவர்கள் காதல்வயப்பட்டவர்களைச் சந்தித்து அவர்களிடம் காதலைச் சொல்ல முடிவெடுக்கிறாரகள். இந்த முடிவு எடுக்கும் போது இடைவேளை வந்துவிடுகிறது. இடைவேளை காட்சியை வித்தியாசமாகவும் சுவாரஸ்யமாகவும் அமைத்திருந்தார்கள்.

இடைவேளை சூப்பர்: இதுவரை பள்ளி கால ஃபிளாஷ் பேக் காட்சிகளை மாற்றி மாற்றி காட்டிக் கொண்டு இருந்தார்கள். அவை எல்லாம் மேம்போக்கான காட்சிகளாகத்தான் இருந்தது. இந்த படத்திற்கு கொஞ்சம் சீரியஸான திரைக்கதை அமைத்திருந்தால், ஆட்டோகிராப், அழகி போன்ற தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கும். ஆனால் சொதப்பலான திரைக்கதையால் படக்குழு அதை கோட்டை விட்டுவிட்டது.
கிளைமாக்ஸ் சொதப்பல்: படத்தில் ஒரு காட்சி நன்றாக இருக்கிறது என்று நினைத்தால் அடுத்த காட்சி முந்தைய காட்சியை சீரழிக்கும் வகையில் உள்ளது. கதாநாயகன் அவர் விரும்பிய பெண்ணுடன் சேர வேண்டும் என்ற எண்ணத்தையோ, கதாநாயகி அவர் விரும்பிய ஆணுடன் சேர வேண்டும் என்ற எண்ணத்தையோ, அல்லது கதாநாயகனும் கதாநாயகியும் சேர வேண்டும் என்ற எண்ணத்தையோ ஏற்படுத்த வில்லை. கதாநாயகன் அவர் விரும்பிய பெண்ணை சந்திக்கும் காட்சி நன்றாக உள்ளது. கிளைமாக்ஸில் ஒரு காட்சி வைத்திருந்தார்கள், அது கொஞ்சம் கூட ஒர்க்-அவுட் ஆகவில்லை" என்று தெரிவித்துள்ளார். அவரது விமர்சனம் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும் ரசிகர்கள் படத்தை பாராட்டி வரும் நிலையில் அவரது இந்த விமர்சனமும் கவனம் பெற்று வருகிறது.


Click it and Unblock the Notifications











