With Love First Review: வித் லவ் முதல் விமர்சனம்.. தேசிய விருது வாங்கினவர் இப்படி போட்டு உடைச்சுட்டாரே

சென்னை: டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான அபிஷன் ஜீவிந்த் அந்த படத்தில் சப்போர்ட்டிங் கதாபாத்திரம் ஒன்றிலும் நடித்திருந்தார். இந்த படம் மாபெரும் வெற்றிப் படமாக மாறியது. ரசிகர்கள் தொடங்கி பிரபலங்கள் வரை பலரும் படத்தை பாராட்டினர். படத்திற்கு தேசிய விருதுகள் கிடைக்க கூட வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் வித் லவ் என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார்.

இந்த படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளான சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் எம்.ஆர். பி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் மகேஷ் ராஜ் என இருவரும் இணைந்து தயாரித்துள்ளார்கள். படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். படத்தில் கதாநாயகியான அனஸ்வரா ராஜன் நடித்துள்ளார். படம் வரும் 6ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ள நிலையில் படம் பார்த்த தேசிய விருது பெற்ற இயக்குநரான ராம்குமார் பாலகிருஷ்ணன் தனது விமர்சனத்தை எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

With Love Movie First Review By Ramkumar Balakrishnan He Appreciates Abishan Jeevinth Anaswara Rajan Performance

முதல் விமர்சனம்: அவரது எக்ஸ் பதிவில், " மிகவும் நெருக்கமானதாகவும் புதிதாகவும் கதை உள்ளது. படம் நமது பள்ளி நினைவுகளை மீண்டும் நினைத்துப் பார்க்க வைக்கிறது. அபிஷன் ஜீவிந்த் கலக்கிவிட்டார். அவரது கதாபாத்திரத்தை அவர் கையாண்ட விதம், எமோஷனலான காட்சிகள், நகைச்சுவைக் காட்சிகள் என அனைத்து காட்சிகளிலும் மிரட்டி விட்டார். அனஸ்வரா ராஜன் நடிப்பு அவருக்கு மிகச் சிறந்த எதிர்காலத்தை உருவாக்கி கொடுக்கும். ஷான் ரோல்டன் வழக்கம் போல சிறப்பாக இசையமைத்துள்ளார்.

ஃபீல் குட் படம்: இயக்குநர் மதன் தனது அறிமுக படத்திலேயே கவனத்தை ஈர்த்துள்ளார். தயாரிப்பாளர்களான சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் மகேஷ் ராஜ் என இருவருக்கும் வாழ்த்துகள். இந்த ஃபீல் குட் படத்தைக் கொடுத்ததற்காக நன்றிகளும். படத்தை தியேட்டரில் மிஸ் செய்துவிடாதீர்கள்" என்று பதிவிட்டுள்ளார். அவரது இந்த விமர்சனம் சினிமா ரசிகர்கள் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. படம் வரும் 6ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளதால், படத்தின் புரோமோசன் வேலைகளிலும் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

With Love Movie First Review By Ramkumar Balakrishnan He Appreciates Abishan Jeevinth Anaswara Rajan Performance

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X