With Love Twitter Review: வித் லவ் ரசிகர்கள் டிவிட்டர் விமர்சனம்.. ஒரே பாராட்டு மழையா இருக்கே!

சென்னை: அறிமுக இயக்குநர் மதன் இயக்கத்தில் உருவான படமான வித் லவ் படம் இன்று அதாவது பிப்ரவரி 6ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த். படத்தில் கதாநாயகியாக அனஸ்வரா ராஜா நடித்துள்ளார். படத்தை MRP என்டர்டைமெண்ட் நிறுவனமும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் சௌந்தர்யா ரஜினிகாந்தின் சீயோன் நிறுவனமும் இணைந்து படத்தை தயாரித்துள்ளது. படத்திற்கு ஏற்கனவே செலிபிரிட்டி ஷோ, பத்திரிகையாளர்களுக்கான சிறப்பு திரையிடல் என எல்லாவற்றிலும் பாசிட்டிவ் ரெஸ்பான்ஸ் இருப்பதால் மொத்த படக்குழுவும் மகிழ்ச்சியில் உள்ளனர். இந்நிலையில் இன்று படம் பார்த்த ரசிகர்கள் படம் குறித்த விமர்சனத்தை பதிவிட்டு வருகிறார்கள். அது குறித்து பார்க்கலாம்.

ரசிகர் ஒருவர் தனது எக்ஸ் பக்கத்தில், " வித் லவ் படம் மிகவும் அருமையாக உள்ளது. அழகான பள்ளிக் காலம், அதில் ஏற்படும் முதல் காதல், அபிஷன் மற்றும் அனஸ்வராவுக்கு இடையிலான ரொமாண்டிக் காட்சிகள் என அனைத்தும் சூப்பராக உள்ளது. ஜாலியான ஜனரஞ்சகமான படமாக இந்த படம் வந்துள்ளது. படத்தின் பின்னணி இசை, பாடல்கள் என அனைத்தும் சிறப்பு. முதல் பாதி சூப்பர் என்றால் இரண்டாம் பாதி மிகவும் எமோஷனல் நிறைந்ததாக உள்ளது. மேலும் திருப்திகரமான கிளைமாக்ஸ் உடன் படம் முடிவதால் ஒரு ஃபீல் குட் அனுபவத்தை படம் ஏற்படுத்துகிறது" என்று தெரிவித்துள்ளார்.

With Love Twitter Review By Fans Whole Team Very Happy About Positive Reviews

மற்றொரு இணையவாசி ஒருவர், " படத்தின் முதல் பாதி சிரித்து சிரித்து வயிறு வலியே ஏற்பட்டு விட்டது. எனது பள்ளிக்காலங்களை, எனது வகுப்பறையை படம் பிடித்து காட்டியது போன்ற நெருக்கமான உணர்வை படம் ஏற்படுத்தி உள்ளது. அபிஷன் ஜீவிந்த் முதல் படம் போலவே தெரியவில்லை. அவருக்கு இருக்கும் காமெடிக் காட்சிகள் நன்றாகவே ஒர்க அவுட் ஆகி உள்ளது. இரண்டாம் பாதி அப்படியே எமோஷனலாக உள்ளது. தரமான படத்தை படக்குழு வழங்கியுள்ளது. பாராட்டுக்கள்" என்று பதிவிட்டுள்ளார்.

மற்றொரு ரசிகரோ, " அபிஷன் ஜீவிந்த் - அனஸ்வரா ராஜன் நடித்துள்ள வித் லவ் படமானது மிகவும் சிம்பிளான காதல் கதை. ரொமான்ஸ் மற்றும் காமெடிகள் நிறைந்த ஃபீல் குட் படமாக உள்ளது" என்று பதிவிட்டுள்ளார். அதேபோல் மற்றொருவரோ படத்தின் முதல் பாதி முழுக்க முழுக்க பள்ளி மற்றும் அதன் காமெடி, காதல் காட்சிகளால் நிரம்பி உள்ளது. இரண்டாவது பாதி எமோஷ்னல் மற்றும் காமெடியால் நிரம்பி உள்ளது. மனதைத் தொடும் அளவுக்கான கிளைமாக்ஸ் படத்தை மேலும் தூக்கி நிறுத்துகிறது. காதலர் தின கொண்டாட்டத்திற்கு ஏற்ற படம் என்றும் குறிப்பிட்டுள்ளார். படத்திற்கு தொடர்ந்து பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்து வருவதால் மொத்த படக்குழுவும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X