With Love X Review: வித் லவ் ட்விட்டர் விமர்சனம்.. டூரிஸ்ட் ஃபேமிலி இயக்குநர் ஹீரோவாக அசத்தினாரா?
சென்னை: கடந்த ஆண்டு சசிகுமார், சிம்ரனை வைத்து டூரிஸ்ட் ஃபேமிலி எனும் படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமான அபிஷன் ஜீவிந்த் தனது முதல் படத்திலேயே மிகப்பெரிய சிக்சர் விளாசி பிளாக்பஸ்டர் வெற்றியை கொண்டாடினார். இந்த ஆண்டு அதிரடியாக அதே பிரதீப் ரங்கநாதன் ரூட்டில் ஹீரோவாக அவதாரம் எடுத்துள்ளார்.
அவரது உதவி இயக்குநர் மதன் இயக்கத்தில் உருவான 'வித் லவ்' திரைப்படம் வரும் பிப்ரவரி 6ம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாக உள்ள நிலையில், அதன் சிறப்புக் காட்சி இன்று பத்திரிகையாளர்களுக்காக திரையிடப்பட்டது.

செளந்தர்யா ரஜினிகாந்த், எம்.ஆர்.பி என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தில் அபிஷன் ஜீவிந்த் ஜோடியாக மலையாள நடிகை அனஸ்வரா ராஜன் நடித்துள்ளார். ஷான் ரோல்டனின் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தின் ட்விட்டர் விமர்சனத்தை இங்கே பார்க்கலாம் வாங்க..
4 ரேட்டிங் குவியுது: அபிஷன் ஜீவிந்த் இயக்கிய டூரிஸ்ட் ஃபேமிலி படத்தையும் விமர்சகர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் வெகுவாக பாராட்டினர். படத்துக்கு மக்கள் மத்தியிலும் நல்ல ஆதரவு கிடைக்க படம் மிகப்பெரிய பாக்ஸ் ஆபீஸ் வெற்றியையும் பெற்றது. அதேபோல தற்போது அபிஷன் ஜீவிந்த் ஹீரோவாக நடித்துள்ள "வித் லவ்" படத்தை பார்த்து விட்டு பலரும் 4 ஸ்டார் ரேட்டிங் போட்டு வருகின்றனர். ரமேஷ் பாலா தனது ட்விட்டர் பக்கத்தில் அபிஷன் ஜீவிந்த் ஹீரோவாக சிறப்பாக நடித்துள்ளார். அனஸ்வரா ராஜனின் நடிப்பு படத்திற்கு பெரிய பலம். அறிமுக இயக்குநர் மதன் சினிமாவில் நாவல் படிக்கும் அனுபவத்தை கொடுத்துள்ளார் என பாராட்டியுள்ளார்.
பிளாக்பஸ்டர்: இந்த காதலர் தினத்துக்கு ஒரு சிறப்பான காதல் படமாக 'வித் லவ்' திரைப்படம் வெளியாக காத்திருக்கிறது. கண்டிப்பாக இந்த படம் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் என பலரையும் கவர்ந்து விடும் என சுகுமார் ஸ்ரீனிவாசனும் 5க்கு 4 ரேட்டிங் கொடுத்துள்ளார்.
ஆட்டோகிராப், 96 பட வரிசையில்: "ஆட்டோகிராப், அழகி, 96 படங்கள் போல மனதை கொய்து விட்டு போகிறது with Love.. இந்த வருடத்தின் முதல் சூப்பர் ஹிட் # withLove" என பத்திரிகையாளர் அந்தணன் விமர்சித்துள்ளார். படம் வெளியாவதற்கு முன்னதாகவே பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வரும் நிலையில், அபிஷன் ஜீவிந்த் படத்துக்கு நல்ல ஓபனிங் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











