twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    யூ டியூப்பில் கலக்கும் 'யாம்'.. என்ன சிறப்பம்சம் இந்த குறும்படத்தில்!

    தமிழில் வந்து இருக்கும் யாம் குறும்படம் மக்களின் கவனத்தை ஈர்த்து இருக்கிறது.

    By Shyamsundar
    |

    சென்னை: தமிழில் பாராடாக்ஸ் வகையை மையமாக வைத்து வெளியவரும் படங்கள் மிகவும் குறைவு. அந்த கதை களத்தை மையமாக வைத்து வரும் குறும்படங்கள் மிகவும் குறைவு. அப்படி வந்து மக்களின் கவனத்தை ஈர்த்து இருக்கும் படம்தான் 'யாம்'.

    என்.சிவானந்தன் இயக்கத்தில் டி.என்.உதயகுமார் ஒளிப்பதிவில் இந்த படம் வெளியாகி இருக்கிறது. தமிழில் பொதுவாக வரும் குறும்படங்கள் போல இல்லாமல் இந்த படம் வித்தியாசமாக இருக்கிறது.

    YAAM short film review

    ஹாலிவுட்டில் வருடம் நோலன் கதை சொல்லல் பாணி சமீப காலமாக நம் கோலிவுட்டிற்கும் குடிபெயர்ந்து இருக்கிறது. அப்படிப்பட்ட படம்தான் யாம்.

    மூன்று நண்பர்கள். வேலை தேடும் ஒருவன், சூதாட்டம் செய்யும் சோம்பேறி நண்பன் ஒருவன், சினிமாவில் இயக்குனர் ஆக வாய்ப்பு தேடும் ஒருவன் என வெவ்வேறு சூழ்நிலையை கொண்ட மூன்று பேரும் ஒரே வீட்டில் தங்கி இருக்கிறார்கள்.

    இவர்களில் ஒருவனுக்கு கிடைக்கும் டைரியும் அதற்கு பின்பான நிகழ்வுகளுமே படத்தின் ஒன்லைன். ஒரு டைரியில் நீங்கள் இன்னும் இத்தனை நாளில் இறந்துவிடுவீர்கள் என்றால் என்ன செய்வீர்கள். அந்த டைரியில் அப்படித்தான் இருக்கும்.

    அந்த டைரியில் இருக்கும் அந்த மிரட்டலை தொடர்ந்துதான் படம் நகரும். மூன்று பேரில் யார் முதலில் சாவார்கள், யார் சகமாட்டார்கள் என்று விரியும் கதை 'வேண்டேஜ் பாயிண்ட்' போல ஒரு புள்ளியில் முடியும்.

    அந்த புள்ளியில் இருந்து படத்தில் பல முக்கியமான டிவிஸ்டுகள் வருகிறது. படத்தின் உண்மையான கதைக்களம் தெரியவருகிறது. பார்க்கும் மக்களையும் 'வாவ்ல..!' என்று உற்சாகம் கொள்ள வைக்கிறது.

    லைட்டிங் குறைபாட்டை தவிர இந்த படத்தில் குறை என்று கூற எதுவும் இல்லை. இன்னும் சில வருடங்களில் இந்த கோலிவுட்டில் இன்னொரு வட்டம் அடிக்கும் என்று கூறலாம்.

    English summary
    A Tamil film named YAAM deals with paradox kind of screenplay. It gives new opening to film making.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X