twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    யான் விமர்சனம்

    By Shankar
    |

    எஸ் ஷங்கர்

    நடிப்பு: ஜீவா, துளசி, நாசர், ஜெயப்பிரகாஷ்

    இசை: ஹாரிஸ் ஜெயராஜ்

    தயாரிப்பு: எல்ரெட் குமார்

    இயக்கம்: ரவி கே சந்திரன்

    சிறந்த ஒளிப்பதிவாளர்கள் எனப் பெயரெடுத்த ஒருவர் சிறந்த இயக்குநராகவும் இருப்பார் என நம்பி படத்தை ஒப்படைப்பது எத்தனை பெரிய தவறு என்பதை தயாரிப்பாளர் எல்ரெட் குமாருக்கும் ஹீரோ ஜீவாவுக்கும் உணர்த்தியிருக்கும் படம் யான்.

    இந்தத் திரைக்கதை மேற்கண்ட இருவரையும் எந்த அளவுக்கு வசீகரித்திருக்கும் என்ற கேள்வி படம் பார்த்துவிட்டு வந்து நெடுநேரமாகியும் மனதுக்குள் உறுத்திக் கொண்டே இருந்தது.

    எம்பிஏ முடித்துவிட்டு மும்பையில் வசதியான பாட்டி வீட்டில் தங்கியிருக்கும் ஜீவா, வேலை வெட்டியில்லாமல் ஊரைச் சுற்றும் இளைஞர். ஒரு என்கவுன்ட்டரில் சிக்கவிருந்த துளசியைக் காப்பாற்றுகிறார். அவருடைய 'அழகில்' (?!) கிறங்கி ஒருதலையாகக் காதலிக்கிறார் ஜீவா. அந்தக் காதலையும் ஒரு நாள் சொல்லிவிடுகிறகார். அதுவும் எப்போது, தந்தை நாசருடன் துளசி வரும் நேரத்தில்!

    கோபமடையும் நாசர் வீட்டுக்கு ஜீவாவை வரவழைத்துப் பேசும்போதுதான், நாயகன் ஒரு வெட்டி ஆபீசர் என்பது தெரிகிறது. கண்டபடி திட்டி அனுப்பிவிடுகிறார் நாசர். வெளியேறும் ஜீவா, தனது எம்பிஏ சான்றிதழை தூசி தட்டி எடுத்து, ஒவ்வொரு கம்பெனியாக வேலை தேடுகிறார். கடைசியில் ஒரு ஏஜென்ட் மூலம் ஏதோ ஒரு ஆப்ரிக்க நாட்டுக்குப் போகிறார். அங்கு விமானநி்லையத்தில் அவரது பைகளைச் சோதிக்கும்போது, போதை மருந்து சிக்க, அந்த நாட்டு சட்டப்படி தலையைத் துண்டிக்க உத்தரவிடுகிறார்கள்.

    ஜெயிலில் இவருக்கு சக கைதி தம்பி ராமையா. அவர் ஒரு நாள் விடுதலை பெறுகிறார். அப்போது மும்பையில் உள்ள தன் குடும்பத்திடம் நிலைமையைச் சொல்லி காப்பாற்றுமாறு கேட்கிறார் ஜீவா.

    தம்பி ராமையாவும் தகவல் சொல்கிறார். விஷயம் கேள்விப்பட்ட துளசி, தானே தனித்து கிளம்புகிறார் ஜீவாவை மீட்க. மீட்டாரா என்பதை முடிந்தால் திரையில் பார்த்துக் கொள்ளுங்கள்!

    லாஜிக் ஓட்டை என்றால் என்னவென்பதை கத்துக்குட்டி இயக்குநர்கள் கற்றுக் கொள்ள இந்தப் படத்தை பாடமாக வைக்கலாம். அரண்மனை வீடு, ஐபோன், வசதியான வாழ்க்கை என இருக்கும் ஜீவா, கம்பெனி கம்பெனியாக வேலைத் தேடிப் போவதில் தொடங்கி, அந்த ஆப்ரிக்க நாட்டுக்கு தன்னந்தனியாக தன் மகளை நாசர் அனுப்பும் வரை அபத்தங்கள் தொடர்கின்றன. அந்த பிரமாண்ட சிறையிலிருந்து ஜீவா தப்புவதையெல்லாம், யாராவது வெளிநாட்டுக்காரர்கள் பார்த்தால் கெக்கபிக்கே என சிரித்துவிடுவார்கள்!

    நாயகன் ஜீவா சண்டைக் காட்சிகளில் நம்பகத் தன்மை வருமளவுக்கு நடித்திருக்கிறார். ஆனால் அவருக்கும் துளசிக்குமான காதல் காட்சிகளில் ஈர்ப்போ, ரொமான்சோ தெரியவில்லை.

    Yaan review

    நாயகி துளசி, கடல் படத்தில் பார்த்ததை விட சீனியராக, இளம் ஆன்ட்டி மாதிரி தெரிகிறார். கூடுதலாக கவர்ச்சியும் காட்டுவதால், ரசிகர்கள் உற்சாகமாகிவிடுகிறார்கள்.

    நாசர், தம்பி ராமய்யா, கருணாகரன் என பழகிய முகங்கள் வந்து போகின்றன அவ்வப்போது.

    மனுஷ் நந்தன் ஒளிப்பதிவு மட்டும்தான் படத்தில் டிஸ்டிங்ஷனில் தேறும் அம்சம். தன்னை இனியும் நம்புவது தவறு என நிரூபித்திருக்கிறார் ஹாரிஸ் ஜெயராஜ்.

    முதலிலேயே சொன்னதுபோல.. நல்ல ஒளிப்பதிவாளர், நல்ல இயக்குநராகவும் இருக்க வேண்டிய அவசியமில்லையே!

    English summary
    Ravi K Chandiran's Yaan movie is disappointing in every aspect except camera work and Jiiva's performance.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X