For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  Yaanai Review: கம்பீரமாக கம்பேக் கொடுத்தாரா இயக்குநர் ஹரி? அருண் விஜய் நடித்த யானை விமர்சனம் இதோ!

  |

  Rating:
  3.0/5

  நடிகர்கள்: அருண் விஜய், பிரியா பவானி சங்கர், சமுத்திரகனி

  இசை: ஜி.வி. பிரகாஷ்

  இயக்கம்: ஹரி

  சென்னை: விக்ரம் நடிப்பில் ஹரி இயக்கத்தில் வெளியான சாமி ஸ்கொயர் படம் சொதப்பிய நிலையில், பெரிய எதிர்பார்ப்புடன் இன்று வெளியாகி இருக்கிறது யானை திரைப்படம்.

  அருண் விஜய், பிரியா பவானி சங்கர், சமுத்திரகனி, கேஜிஎஃப் ராமசந்திரா ராஜு, ராதிகா சரத்குமார், யோகி பாபு உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

  ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த ஆக்‌ஷன் கமர்ஷியல் திரைப்படம் இயக்குநர் ஹரிக்கும், நாயகன் அருண் விஜய்க்கும் கம்பேக் கொடுத்ததா என்பது குறித்து விரிவாக இங்கே அலசுவோம்.

  யானை ஜோக் கதிருக்கு எப்போது திருமணம்?... எப்படி பட்ட பொண்ணு தெரியுமா? யானை ஜோக் கதிருக்கு எப்போது திருமணம்?... எப்படி பட்ட பொண்ணு தெரியுமா?

  யானை படத்தின் கதை

  யானை படத்தின் கதை

  ராமநாதபுரத்தில் உள்ள பி.ஆர்.வி குடும்பத்துக்கும் ராமேஷ்வரத்தில் உள்ள சமுத்திரம் குடும்பத்துக்கும் இடையே பெரும் பகை உள்ளது. பி.ஆர்.வி குடும்பத்தின் கடைசி மகனான ரவிச்சந்திரன் (அருண் விஜய்) சமுத்திரம் குடும்பத்தின் வாரிசான லிங்கத்திடம் (கேஜிஎஃப் ராமசந்திரா ராஜு) இருந்து எப்படி தனது குடும்பத்தை காப்பாற்றுகிறார். மாற்றான் தாய் பிரச்சனை காரணமாக அண்ணன் சமுத்திரகனியே எப்படி அருண் விஜய்யை வீட்டை விட்டுத் துரத்த தனது குடும்பத்திற்கு உண்மையை புரிய வைத்தாரா? வில்லனை எப்படி வீழ்த்தினார் என்பது தான் யானை படத்தின் பலமான கதை.

  கம்பேக் கொடுத்தாரா ஹரி

  கம்பேக் கொடுத்தாரா ஹரி

  யானை படம் ஏற்கனவே இயக்குநர் ஹரியே பலமுறை அடிச்சித் துவைச்சக் கதை தான். மாஸ் மசாலா கமர்ஷியல் ரசிகர்களுக்கு பிடிக்கு வகையில் ஆக்‌ஷன் என்டர்டெயினராக கொடுத்து ஸ்கோர் செய்திருக்கிறார். சூர்யாவை வைத்து சிங்கம் என காட்டு விலங்கின் பெயர் வைத்த ஹரி, அருண் விஜய்யின் இந்த படத்திற்கு யானை என மீண்டும் காட்டு விலங்கின் பெயரையே வைத்திருக்கிறார். குடும்பத்தையே தாங்கும் பலம் வாய்ந்த ஹீரோவை குறிப்பதாக இந்த டைட்டில் அமைந்துள்ளது.

  அருண் விஜய்

  அருண் விஜய்

  தடம் படத்திற்கு பிறகு பல படங்களில் ஹீரோவாக அருண் விஜய் கமிட் ஆனாலும், அவருக்கு ஒரு மிகப்பெரிய வெற்றி கிடைக்காத நிலையே நிலவியது. இந்நிலையில், இயக்குநர் ஹரி உடன் இணைந்து அவர் நடித்துள்ள யானை திரைப்படம் பக்கா கமர்ஷியல் படம் என்பதால், நிச்சயம் இந்த வாரத்தில் மற்ற படங்களை விட கலெக்‌ஷனை அள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆக்‌ஷன் காட்சிகளில் அருண் விஜய் அடிக்கிற ஒவ்வொரு அடியும் இடிமாதிரி தான் இருக்கு. ஒன்றரை டன் வெயிட்டோட இவர் அடிக்கிற அடி இரண்டரை டன் வெயிட்டா இருக்கு.

  கொடுத்த வேலையை செஞ்சிருக்காங்க

  கொடுத்த வேலையை செஞ்சிருக்காங்க

  நாயகி பிரியா பவானி சங்கர், நடிகை ராதிகா சரத்குமார் கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்காங்க. இஸ்லாமிய இளைஞரை காதலித்து தப்பிச் செல்லும் அம்மு அபிராமியின் போர்ஷன் படத்தில் அருமையாக பொருந்தியிருக்கிறது. வில்லனாக மிரட்டும் ராமசந்திரா ராஜு கிளைமேக்ஸில் தனது நடிப்பால் மெய் சிலிர்க்க வைத்து விடுகிறார். சமுத்திரகனிக்கு இந்த படத்தில் பாதி வில்லன், பாதி நல்லவர் ரோல் தான், மனுஷன் எதை கொடுத்தாலும் பிரித்து மேய்ந்து விடுவார் என்பது தெரிந்த கதை தான். யானை படத்திலும் அசத்தி இருக்கிறார் சமுத்திரகனி.

  யானையின் பலம்

  யானையின் பலம்

  இயக்குநர் ஹரி மற்றும் அருண் விஜய் இருவரின் பலமே ஆக்‌ஷன் காட்சிகள் தான். யானை படத்தில் அது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தும் வகையில் உள்ளது. குடும்பத்துக்காக போராடும் இளைஞன், ஜாதி மத ரீதியாக ஊறிய ஒரு கிரமத்தானாக இருந்தாலும், மனசாட்சி உள்ள மனிதனாக அதை எல்லாம் கடந்து ஹீரோ செய்யும் செயல்களை இயக்குநர் காட்சிப்படுத்திய விதம் படத்திற்கு பெரிய பிளஸ் ஆக மாறி உள்ளது. யோகி பாபு பல இடங்களில் காமெடி செய்ய முயற்சித்தாலும், உணர்ச்சி பொங்க ஒரு காட்சியில் நடித்து மனுஷன் கைதட்டல்களை அள்ளுகிறார்.

  யானையின் பலவீனம்

  ஹரியின் முந்தைய படங்களின் சாயல் பல இடங்களில் எட்டிப் பார்ப்பதை தவிர்க்காதது ஒரு பெரிய பலவீனமாகவே மாறி உள்ளது. ஜி.வி. பிரகாஷின் பின்னணி இசை பிரமாதமாக இருந்தாலும், பாடல்கள் இந்த படத்திற்கு பெரிதாக கை கொடுக்கவில்லை. குடும்பம் தான் முக்கியம், யாரும் தோற்றுவிடக் கூடாது என விஷாலின் தாமிரபரணி படத்தில் இடம்பெற்றதை போல சில காட்சிகள் மற்றும் கதையும் இருப்பது ஃப்ரெஷ் ஆக தெரியவில்லை. மொத்தத்தில் கமர்ஷியல் ரசிகர்களுக்கு இந்த யானை கண்டிப்பாக பிடிக்கும். இன்னும் இந்த காலக்கட்டத்திற்கு ஏற்ற படமாக திரைக்கதையை சற்றே மெருகேற்றி இருந்தால் யானை ஆதிக்கம் செலுத்தி இருக்கும்.

  English summary
  Yaanai Movie Review in Tamil(யானை விமர்சனம்): Director Hari and actor Arun Vijay done the old magic again with a full and full pakka mass commercial movie with some touching sentiments scenes.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X