twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    யாருக்கு தெரியும் - சினிமா விமர்சனம்

    By Shankar
    |

    Rating:
    3.0/5
    -எஸ் ஷங்கர்

    நடிப்பு: கலாபவன் மணி, ஜெயப்பிரகாஷ், சஞ்சனா சிங், அச்சுத குமார், அக்ஷதா, தர்மா, திலீப் ராஜ், ஹாரிஸ் ராஜ், நிஷான்

    இசை: கண்ணன்

    பிஆர்ஓ: ஏ ஜான்

    தயாரிப்பு: ஸ்ரீதர் (அருபேரா ஆர்ட் வெஞ்ச்ரா )

    கதை, திரைக்கதை, இயக்கம்: ஸ்ரீதர்

    ஒரு சில படங்கள் பார்க்க ஆரம்பித்த பத்து நிமிடங்கள் தலையும் புரியாமல் வாலும் புரியாமல் விழிக்க நேரிடம்... ஆனால் க்ளைமாக்ஸ் நெருங்கும்போது படத்துக்குள் நம்மையும் அறியாமல் போய்விட்டிருப்போம்.

    அப்படி ஒரு த்ரில்லர் படம் யாருக்குத் தெரியும்.

    படம் ஆரம்பிக்கும்போது, குடோன் மாதிரி ஒரு இடத்தில் ஒருவன் மயக்கம் தெளிந்த நிலையில் திணறிக் கொண்டிருக்கிறான். இன்னொருவன் நாற்காலியில் கட்டுண்டு கிடக்கிறான். மூன்றாமவன் தரையில் ரத்தம் வழிய கிடக்கிறான்.

    அடுத்த சில நிமிடங்களில், இன்னொருவன் ஒரு அறையிலிருந்து வருகிறான். அடுத்த காட்சி நகர, ஒரு பெண்ணும் ஆணும் மயக்கம் தெளிந்து எழுகிறார்கள்.

    இந்த ஏழு பேருக்கும் தாங்கள் எப்படி அங்கே வந்தோம் என்பது நினைவில் இல்லை. தாங்கள் யார் என்பதும் தெரியவில்லை. வெளியே போகலாம் என்றால் அந்த இடம் முழுமையாக அடைக்கப்பட்டுள்ளது.

    இவர்கள், ஏன் அங்கே வந்தார்கள்? எப்படி மயங்கினார்கள்? தங்களைப் பற்றி அறிந்து, எப்படி வெளியில் செல்கிறார்கள்? என்பதுதான் மீதிக் கதை.

    ஆரம்பத்தில் கொஞ்சம் குழப்பியடித்தாலும், காட்சிகள் நகர நகர, ஒவ்வொரு முடிச்சும் அவிழ அவிழ, ஒரு துப்பறியும் நாவலின் சுவாரஸ்யம் வந்துவிடுகிறது.

    தெரிந்த முகம் என்று பார்த்தால், கலாபவன் மணி, ரியாஸ்கான், சஞ்சனா மற்றும் ஜெயப்பிரகாஷ்தான். மற்றவர்கள் புதுமுகம் என்றாலும் சின்சியராக நடிக்க முயற்சித்திருக்கிறார்கள். குறிப்பாக பணத்துக்காக எதையும் செய்யத் தயாராக இருக்கும் அந்த குடிகாரன் பாத்திரத்தில் வரும் அச்சுத குமார்!

    ஹீரோயின் என்று தனியாக யாருமில்லை. சஞ்சனா சிங்கும், புதுமுகம் அக்ஷதாவும்தான் படத்தில் வரும் மொத்த பெண் பாத்திரங்களே.

    தமிழ்ப் படம் கண்ணனின் இசையும், மகேஷ் கே தேவின் ஒளிப்பதிவும் படத்தின் சஸ்பென்ஸைக் காப்பாற்றும் அளவுக்கு உள்ளன. பாடல்கள் எதுவும் மனதில் நிற்கவில்லை.

    ஆரம்பக் காட்சிகளில் இன்னும் கூட அமெச்சூர்த்தனத்தைக் குறைத்திருக்கலாம் இயக்குநர். குறிப்பாக இரு முறை பேக்டரிக்கு வரும் போலீசார், கேட்டைக் கூட திறக்காமல் அப்படியேவா திரும்பிப் போவார்கள்?

    குடிக்கும்போது நண்பர்களுக்குள் ஸ்டேடஸ் பிரச்சினை வர, அது பெரிய பிரச்சினையாக மாறுவதை தத்ரூபமாக படமாக்கியிருக்கிறார்கள்.

    படத்தின் நீளம் குறைவு என்பது இன்னொரு பெரிய ஆறுதல். நிச்சயம் ஒரு முறை பார்க்கக் கூடிய படம்தான்!

    English summary
    Yaarukku Theriyum is a nail biting thriller made by Ganesan Kamaraj with almost new comers.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X