twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    KGF Chapter 2 Review: அதீராவையும் பிரதமரையும் சமாளித்தாரா ராக்கி பாய்? கேஜிஎஃப் 2 விமர்சனம்!

    |

    Rating:
    4.0/5

    நடிகர்கள்: யாஷ், ஸ்ரீனிதி ஷெட்டி, சஞ்சய் தத், ரவீணா டாண்டன்

    இசை: ரவி பஸ்ரூர்

    இயக்கம்: பிரசாந்த் நீல்

    சென்னை: கேஜிஎஃப் முதல் பாகம் பார்த்து மெய் சிலிர்த்து போனவர்கள் மேலும், கூஸ்பம்ப்ஸ் அடையும் காட்சிகளுடன் ராக்கி பாய் நடத்தும் ராஜாங்கத்தை சிதைக்க இரு பெரும் சக்திகள் குறுக்கே வருகின்றன.

    கருடாவை கொன்று கேஜிஎஃப்பை ராஜ கிருஷ்ணப்பா பைர்யா எனும் ராக்கி பாய் கைப்பற்றி தனது ஆட்சியை தொடங்குகிறார்.

    Recommended Video

    K.G.F: Chapter 2 Review in Tamil | கே ஜி எஃப் 2 விமர்சனம் | Yessa ? Bussa ? | |Yash | Sanjay Dutt

    முதல் பாகத்திலேயே அதீரா மற்றும் பிரதமர் ராமிகா சென் கதாபாத்திரங்களுக்கு லீடு கொடுத்திருந்த நிலையில், அந்த இருவரும் ராக்கி பாயை காலி செய்ய போராடும் முயற்சிகள் வென்றதா? இல்லையா? என்பது தான் கேஜிஎஃப் சாப்டர் 2 படத்தின் கதை.

    ஆன்லைன் புக்கிங்கிலேயே இப்படி ஒரு மிரட்டலா... கேஜிஎஃப் 2 தான் இந்தியாவிலேயே நம்பர் ஒன் ஆன்லைன் புக்கிங்கிலேயே இப்படி ஒரு மிரட்டலா... கேஜிஎஃப் 2 தான் இந்தியாவிலேயே நம்பர் ஒன்

    ராக்கி பாய்

    ராக்கி பாய்

    கேங்ஸ்டர் இல்லை மான்ஸ்டர் என முதல் பாகத்திலேயே தனது ஆளுமையை அதிரடி ஸ்டன்ட்டுகள் மற்றும் ஆக்‌ஷனில் காட்டிய ராக்கி பாய் இரண்டாம் பாகத்தில் என்ட்ரி கொடுக்கும் காட்சியிலேயே ரசிகர்களின் கைதட்டல்களை அள்ளி உள்ளார். வயலென்ஸ் தனக்கு பிடிக்காது என்றும் ஆனால், வயலன்ஸுக்கு தன்னை பிடிக்கிறது என்றும் அவர் சொல்லும் காட்சிகள் டிரைலரை விட அதை எந்த இடத்தில் திரையில் சொல்லுகிறார் என்கிற காட்சி அட்டகாசம். முதல் பாகத்தில் அதிகம் உழைத்து விட்டோம். இரண்டாம் பாகத்தில் லேசாக நடித்தால் போதும் என நடிக்காமல், இந்த பாகத்திலும் முழு உழைப்பை கொட்டி நடித்திருக்கிறார் நடிகர் யாஷ்.

    வில்லன் என்ட்ரி

    வில்லன் என்ட்ரி

    கேஜிஎஃப் சாப்டர் 1ல் வில்லன் கருடா என்ட்ரி தாமதமாகத்தான் காட்டப்படும். ஆரம்பத்தில் இருந்தே ராக்கி பாயின் பேக்ரவுண்ட் பில்டப்புக்காக அதிக காட்சிகளை செலவு செய்திருப்பார்கள். இடைவேளை நேரத்தில் சிலையை திறந்து விட்டு வில்லன் கொடுக்கும் என்ட்ரி அசத்தலாக இருந்திருக்கும். ஆனால், இரண்டாம் பாகத்தில் கருடா இறந்த செய்தி அறிந்ததுமே மீண்டும் கேஜிஎஃப்பை அடைய வேண்டும் என்றும் ராக்கி பாயை துவம்சம் செய்ய வேண்டும் என்றும் அதீரா வரும் காட்சிகள் மிரட்டல். பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்துக்கு சரியான என்ட்ரி சீன் கொடுத்துள்ளனர்.

    பிரதமர் பிரமாதம்

    பிரதமர் பிரமாதம்

    இந்தியாவின் தங்க சுரங்கத்தை ஒரு குறிப்பிட்ட கேங்ஸ்டர் கூட்டம் ஆட்சி செய்வதையும், உலகளவில் கடத்தல் மார்க்கெட் நடத்துவதையும் இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும் என்கிற வெறியுடன் பிரதமர் ராமிகா சென்னாக பாலிவுட் நடிகை ரவீணா டாண்டன் பிரமாதப்படுத்தி உள்ளார். இந்திரா காந்தி என சொல்லி விட்டால் பிரச்சனை வரும் என்பதால் புனைவாக ராமிகா சென் கதாபாத்திரத்தை பிரதமர் ஆக்கி உள்ளனர்.

    ராக்கியை கொல்லும் அதீரா

    ராக்கியை கொல்லும் அதீரா

    கருடனை கொன்று ராக்கி பாய் கேஜிஎஃப் கோட்டையை தனதாக்கி கொள்ளும் நிலையில், ராக்கி பாய்க்கும் அதீராவுக்கும் நடக்கும் போரில் அதீரா ராக்கி பாயை சுட்டு வீழ்த்துவது போல காட்சிகள் அமைக்கப்பட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஆனால், மீண்டும் ராக்கி பாய் உயிர்ப்புடன் வரும் காட்சி தியேட்டரில் செம விசில் பறக்குது. கடைசியில் ராக்கி அதீராவை வதம் செய்தாரா? அல்லது ராமிகா சென் ராக்கியை என்ன செய்தார்? இருவரிடம் இருந்தும் ராக்கி பாய் தப்பித்தாரா? என்பது தான் மீதிக் கதை.

    படத்தின் பலம்

    படத்தின் பலம்

    இயக்குநர் பிரசாந்த் நீல் கேஜிஎஃப் படத்தின் மையக் கதையையே இரண்டாம் பாதியில் வைத்து விட்டுத் தான் முதல் பாதியை பில்டப் செய்யவே எடுத்திருந்தார். அதன் காரணமாக கதை ரீதியாகவும் காட்சி ரீதியாகவும் இரண்டாம் பாகம் பெரிய அளவில் மிரட்டுவதே இந்த படத்திற்கான பலமாக பார்க்கப்படுகிறது. முதல் பாகத்தை போலவே அதே டார்க் கலரில் படத்தை ஒளிப்பதிவு செய்து புவன் கெளடா அசத்தி உள்ளார். ரவி பஸ்ரூரின் பிஜிஎம் இசை ராக்கி பாய், அதீரா மற்றும் ராமிகா சென் என ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் தேவையான மாஸ் எலிவேஷன் உடன் ஸ்கோர் செய்துள்ளது.

    படத்தின் பலவீனம்

    படத்தின் பலவீனம்

    இந்த படத்தின் மைனஸ் என்று பார்த்தால் முதல் பாகத்தை பார்க்காத ரசிகர்களுக்கு நிச்சயம் கதை தெளிவாக புரியாது. என்னடா ஒவ்வொரு காட்சியும் ஓவர் பில்டப்பாக இருக்கே என்பது போலத்தான் தெரியும். பாகுபலி 2ம் பாகத்தை தனியாக பார்த்தாலே ரசிகர்களுக்கு புரியும் படி ராஜமெளலி எடுத்திருப்பார். ஆனால், இது சரியான தொடர்ச்சி படம் என்பது குறிப்பிடத்தக்கது. ஹீரோயின் ஸ்ரீனிதி ஷெட்டி போர்ஷன் முதல் பாகத்தை போலவே இரண்டாம் பாகத்திலும் சுமார் ரகம் தான். அதிகமான வயலென்ஸ் காட்சிகள், காமெடி குறைவு உள்ளிட்ட சிலவற்றைத் தான் குறையாக சொல்ல முடியும்.

    ஸ்பாய்லர் அலர்ட்

    கேஜிஎஃப் சாப்டர் 2வுடன் கேஜிஎஃப் சகாப்தம் முடிகிறதா? என்று பார்த்தால் அதுதான் இல்லை. கேஜிஎஃப் சாப்டர் 3க்கான விஷயத்தை கிளைமேக்ஸில் யார் பார்ப்பது போன்ற காட்சி செம ட்விஸ்ட். 3ம் பாகத்தில் மீண்டும் ராக்கி பாயின் ஆட்டம் எப்படி தொடரப் போகிறது. எத்தனை பேர் அவருக்கு எதிரிகளாக வரப் போகிறார்கள், இன்னும் எத்தனை பாகம் இந்த படம் இருக்கும் என்பது இயக்குநர் பிரசாந்த் நீல்-க்குத்தான் வெளிச்சம். மொத்தத்தில் கேஜிஎஃப் சாப்டர் 2 தியேட்டரில் மிஸ் பண்ணக் கூடாத படம்!

    English summary
    KGF Chapter 2 Review in Tamil [கே.ஜி.எஃப் 2 திரை விமர்சனம்]: பிரஷாந்த் நீல் இயக்கத்தில் யாஷ், ராக்கி பாய், ஸ்ரீநிதி ஷெட்டி, சஞ்சய் தத், உள்ளிட்டோர் நடித்திருக்கும் கே.ஜி.எஃப் 2 திரைப்படத்தின் விமர்சனம் குறித்து இந்த பக்கத்தில் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X