twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    விடாப்பிடியாக ஜடா ஆடும் ஆட்டம் , ஆவிகளுடன் ஆர்ப்பாட்டம்

    |

    Rating:
    3.0/5
    Star Cast: கதிர், ரோஷினி பிரகாஷ், யோகி பாபு, ராஜ்குமார், பாலா
    Director: குமரன்

    Recommended Video

    Today Releasing Tamil movies | Gundu | Iruttu | Dhanusu Raasi Neyargalae | Jada

    சென்னை : பரியேரும் பெருமாள் படத்திற்கு பிறகு கதிர் ஹீரோவாக நடித்து அசத்திருக்கும் படம் தான் 'ஜடா'.ஜடா படத்தை அறிமுக இயக்குனரான 'குமரன்' இயக்கியுள்ளார் .படத்தை போயட் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது .படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார்.படத்தில் கதிர் ,ரோஷினி பிரகாஷ்,யோகிபாபு, கிஷோர்,ஸ்வாதிஸ்டா ,பிரஜுனா சாரா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர் .

    பிகில் படத்திலே கதிர் ஒரு சிறிய காட்சியில் கால் பந்து வீரராக வந்து படம் முழுதும் பயிரச்சியாளராக நடித்திருப்பார் .ஜடா படத்தில் முழுக்க முழுக்க கால்பந்து வீரராகவே நடித்திருக்கிறார் கதிர் .படத்திற்கென பிரத்யேக மாக கால்பந்து விளையாட கற்று கொண்டு அதன் பின் அவர் கால்பந்து விளையாடுபவர்களுடன் விளையாடி அதனை படமாக்கிருக்கிறார்கள் .

    yet another sports film with ghost ride


    தற்போது ஜடா படம் முக்கியமான படங்களுடன் போட்டியாக வெளியாகி இருக்கிறது இருப்பினும் ,படம் சொல்ல வந்த விசயத்தை மக்கள் ஏற்று கொண்டு பாராட்டி செல்கின்றனர் .ஜடா படத்தில் கால்பந்து விளையாட்டு ரீதியில் நடக்கும் பல உன்மை அரசியலை பலிச்சிடும் அளவில் பேசியிருக்கிறார் இயக்குனர் குமரன் .

    ஜடா படத்தில் ரோஷினி பிரகாஷ் கதாநாயகியாக நடித்துள்ளார். இவருக்கு கதாநாயகியாக ஜடாவே முதல் படம் . படத்தில் கதாநாயகிக்கென பெரும் கதை இல்லையென்றாலும் கொடுத்துள்ள காட்சிகளில் சிறப்பாக நடித்திருக்கிறார். கன்னடத்து பைங்கிளி கிளோஸ் அப் காட்சிகளில் அழகாக இருக்கிறார். ஆனால படம் முழுக்க அவரை தேடி பார்த்தால் வந்து போனது என்னவோ பத்து நிமிஷம் தான். ஹீரோயினுடன் ரொமான்ஸ் காட்சிகள் ஏதும் அதிகமாக இல்லாததால் நிறைய பேட்டிகளில் ஹீரோ கதிர் சிரித்து கொண்டே புலம்பினார்.

    yet another sports film with ghost ride

    சேது கதாபாத்திரத்தில் கிஷோர் நடிப்பு சுமாருக்கும் சூப்பருக்கும் நடுவில் சிக்கி கொண்டு தவிக்கறது . பயங்கர பில்ட் அப் மியூசிக் போட்டு சேது சேது சேது அண்ணா என்று நிறைய கதாபாத்திரங்கள் கூவி கொண்டே இருக்கு . ஆனால் பொசுக்கு என்று கால் பந்து காத்து போனது போல் சாய்ந்து விடுகிறார். இன்னும் சில காட்சிகள் அவர் கால்பந்து விளையாடுவது போல் ,அல்லது சுவாரஸ்யமான காட்சிகள் சில அமைந்து இருந்தால் அந்த இழப்பு பலமாக இருந்திருக்கும்.

    yet another sports film with ghost ride

    முதல் பாதி லெவென்ஸ் கால்பந்து என்றால் என்ன , செவன்ஸ் கால் பந்து என்றால் என்ன என்பதை பக்காவாக டியூஷன் எடுக்கிறார்கள். யோகி பாபு காமெடி சில இடங்களில் மட்டுமே சிரிப்பு. வெறி தனமாக விளையாடி விதிமுறைகள் இல்லாமல் ஓடி அடிபட்டு பல சேதாரம் ஏற்பட்டால் அதுவே 7 பேர் கொண்ட செவன்ஸ்.
    அப்படி பட்ட முரட்டு தனமான கால்பந்து விளையாட்டில் , ஏரியா வாரியாக பிரித்து போட்டி நடத்தி வில்லன்களை உருவாக்கி , அரசியல் செய்யும் ரௌடிகளை எப்படி ஜெயிக்கிறார் ஹீரோ கதிர் என்பதே ஜடா படத்தின் கதை.

    yet another sports film with ghost ride

    முதல் பாதி கால் பந்து , இரண்டாம் பாதி ஆவி, பேய் என்று இயக்குனர் ட்ரெண்டிங்கான கான்செப்டை பிடிக்கிறார். அனால் கொஞ்சம் பேய் , ஆவி என்று வந்தாலே இப்போதெல்லாம் அலுப்பு தட்டுகிறது. அதிக பேய் படங்கள் வந்த ஆண்டு 2019ஆக இருக்க வேண்டும் என்று பலரும் தமிழ் சினிமாவில் முயற்ச்சி செய்கின்றனர்.
    கதிர் பய படுவதிலும், விளையாடுவதில் அதிகம் மெனக்கெட்டு நடித்திருப்பது நன்கு தெரிகிறது.

    செவன்ஸ் போட்டி நடத்தும் கதாபாத்திரத்தில் இயக்குனர் ஷண்முகம் நடித்திருக்கிறார், நல்ல தேர்வு. இவருடன் ஏ.பி ஸ்ரீதர் வில்லனாக மிரட்டுகிறார். தாடியுடன் அந்த கதா பாத்திரம் நன்கு பொருந்தி இருக்கிறது. போட்டி நடக்கும் இடங்களில் எல்லாம் கமெண்ட்ரி கொடுக்கும் குரு, தங்கதுரை , லோகேஷ் மைக் பிடித்தபடி பல கவுண்டர் கொடுக்கிறார்கள் . அவர்களுக்கும் ஒரு சபாஷ் போடலாம்.

    கிராமத்தில் நடக்கும் இரண்டாம் பாதி காட்சிகளில் சாம் சி.ஸ் பின்னணி இசையில் மிரட்டுகிறார். ஆனால் எல்லாம் பார்த்து பார்த்து அலுத்து போன காட்சிகள் என்பது மட்டுமே வருத்தமான விஷயம். ஒரு பக்கம் கால் பந்து பைனல்ஸ மேட்ச் , இன்னொரு பக்கம் ஆவி பேய் என்று இயக்குனர் கையாண்ட இஸ்க்ரீன் பிலே பிரமாதம் . விஷயம் என்ன வென்றால் சமீபத்தில் மக்கள் பார்த்த நிறைய ஆவி படங்களும் . இஸ்போர்ட்ஸ் படங்களும் ஒன்று சேர்ந்து மனதில் நிற்பதினால் இந்த படத்தின் பல காட்சிகள் அலுப்பு தட்டுகிறது.

    yet another sports film with ghost ride

    கிளைமாக்ஸ் காட்சியில் கதிர் பேசும் வசனங்கள் அப்படியே பரியேறும் பெருமாள் படத்தை ஞாபக படுத்துகிறது. இனி இது போன்ற சாதி , மதம், சமநிலை கருத்துக்கள் போன்ற படங்களில் இருந்து கொஞ்சம் அட்வைஸ் செய்யும் வசங்களில் இருந்தும் கதிர் சில காலம் தள்ளி இருக்க வேண்டும்.

    குமரன் இயக்கிய முதல் படம் இந்த ஜடா , விடா முயற்ச்சியுடன் உழைத்திருக்கிறார் என்பது பாராட்ட தக்கது. மேலும் மேலும் பேய் டிரீட்மென்ட் கொடுக்காமல் புது டிரீட்மென்ட் கொடுத்து நிறைய வித்யாசமான ஸ்கிரிப்ட்ஸ் செய்ய வேண்டும் என்று வாழ்த்துவோம்.

    பேய் பிடித்த ஜடா தியேட்டர் கலக்ஷனில் கோல் அடிப்பாரா என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம்.

    English summary
    kathir is one of the hero who is very choosy in selecting different scripts. this time he has tried local sport activity with the game of football and also second half with lots of twists and turns with horror treatment. kumaran has directed this movie and sam c.s has done the music. Actor kishore has performed an important role which is the base of the story line.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X