twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    படம் சாம்பியன் தான் , வசூலில் சாம்பியனாக இருக்குமா என்பது பொறுத்து இருந்து பார்ப்போம்

    |

    Rating:
    3.0/5

    நடிகர்கள்: விஸ்வா ,மனோஜ் பாரதிராஜா ,மிர்னாலினி, நரைன். .சௌமியா

    இசை : அரோல் கோரேலி

    இயக்குனர் : சுசீந்திரன்

    தமிழ் சினிமாவின் ஸ்போர்ட்ஸ் படங்களை மொத்தமாக குத்தகைக்கு சுசீந்திரன் அவர்கள் எடுத்து விட்டார் என்பது பலரின் கருத்து ,அதை சரியான முறையில் தொடர்ந்து செய்து வருகிறார் இயக்குனர் சுசீந்திரன். இவரின் ஸ்போர்ட்ஸ் படங்களின் வரிசையில் மற்றொரு ஸ்போர்ட்ஸ் படம்தான் சாம்பியன் .

    சுசீந்திரன் இதுவரை வெண்ணிலா கபடிக்குளு ,ஜீவா,,கெண்ணடி கிளப் ஆகிய ஸ்போர்ட்ஸ் படங்களை இயக்கி இருக்கிறார் . அது மட்டும் இல்லாமல் பெரிய ஹீரோ சின்ன ஹீரோ , புதுமுகம் என்று யோசிக்காமல் எப்போதுமே தனது ஸ்கிரிப்ட்டை நம்புவார்.இன்னும் சொல்ல போனால் புது முகங்கள் நிறைய பேர் வைத்து பல தடவை வெற்றியும் கண்டு உள்ளார் வணிக ரீதியாக தோழ்வியும் கண்டு உள்ளார் .

    yet another sports movie if the year 2019

    தற்போது சாம்பியன் படத்தை இயக்கி இருக்கிறார் சுசீந்திரன் .இந்த படத்தில் விஸ்வா ,மனோஜ் பாரதிராஜா ,மிர்னாலினி, நரைன், ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து இருக்கின்றனர் .இந்த படத்திற்கு ஆரோல் கொரல்ளி இசையமைத்து இருக்கிறார்.சுஜித் சாரங் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார்.

    படத்தில் அறிமுக நாயகானக விஸ்வா நடித்திருக்கிறார் ,இவர் பிரபல தயாரிப்பாளரான ஆர்.கே.சுரேஷின் சொந்தகாரர் அது மட்டுமின்றி அமெரிக்காவிற்கு சென்று நடிப்பில் பட்டம் பெற்று வந்தவர் . ஜோன்ஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் இவருக்கு அப்பாவாக நீண்ட நாட்களுக்கு பிறகு மனோஜ் பாரதிராஜா நடித்திருக்கிறார் அம்மாவாக வாசகி நடித்திருக்கிறார் .சௌமியா என்ற பெண் இந்த படத்தில் முதல் நாயகியாக அறிமுகமாகி இருக்கிறார் .டப்ஸ்மேஸ் புகழ் மிர்னாலினி படத்தின் முக்கிய நாயகியாக நடித்திருக்கிறார் .நடிகர் நரைன் கால்பந்து பயிர்ச்சியாளராக நடித்திருக்கிறார் .மற்றும் பிச்சைக்காரன் படத்தில் ரைட் என்ற கதாபாத்திரத்தில் நடித்த வினோத் அவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார் .

    yet another sports movie if the year 2019

    கால்பந்து வீரராக துடிக்கும் ஹீரோ அவருக்கு ஒரு பள்ளி காதலி ,காதலியின் வேண்டுகொள்ளுக்கு இனங்க அவரிடம் பணம் வாங்கி கொண்டு கால்பந்தை விளையாட தயாராக இருக்கிறார் ஜோன்ஸ் . அதன்பின் காதலியின் வீட்டில் விசயம் தெரிய அவர்கள் காதல் அங்கே பிரிகிறது அதன் பின் பயிரச்சாளர் நரைனிடம் கால்பந்து பயிர்ச்சி மேற்கொள்கிறார் அப்போது மிர்னாலினி மீது காதல் கொண்டு அது ஒரு தனி டிராக்காக செல்கிறது.ஹீரோ ஜோன்ஸ் அதன் பின் இறந்து போன தனது தந்தை பற்றி தகவல் தெரிய அவரை கொன்றவரை பற்றிய தகவலும் தெரிய வர காலபந்தின் மீதிருந்த கவனம் அவருக்கு குறைகிறது இதன் பின் ஹீரோ தன் அப்பாவின் சாவுக்கு பழிவாங்கினாரா அல்லது கால்பந்தில் சாதித்தாரா என்பது தான் கதை .

    நரைன் இந்த படத்தில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார் ,கால்பந்து பயிர்ச்சியாளராக நடித்து அசத்தியிருக்கிறார் .மேலும் கதாநாயகன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள விஸ்வா முதல் படம் என்று எந்த ஒரு பயமும் இன்றி தைரியமாக நடித்திருக்கிறார்.மேலும் படத்தில் நடித்த அனைவரும் அருமையாக தங்களால் முடிந்த உழைப்பை கொடுத்து இருக்கின்றனர் .படத்தில் ராஜீவ் காந்தி கதாபாத்திரத்தில் நடித்த பிச்சைக்காரன் வினோத் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் கவனத்தை ஈர்த்து இருக்கிறார்.

    படத்தின் கதை புதிது அல்ல ஆனால் அதை எந்த விததிலும் குறை கூறா அளவில் திரைக்கதை அமைத்து படமாக்கி இருக்கிறார் இயக்குனர் சுசீந்திரன் .உள்நோக்கி பார்த்தால் வெறும் பலிவாங்கும் கதை தான் சாம்பியன். பாடல்கள் இன்னும் கூட நன்றாக அமைத்து இருந்திருக்கலாம் .மனோஜ் பாரதிராஜா நீண்ட நாட்களுக்கு பிறகு நல்ல கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். படத்தில் நடித்த இரண்டு கதாநாயகிகளும் தங்களது பணியை சரியாக செய்துள்ளனர் .சுசீந்திரன் இயக்கிய வெண்ணிலா கபடிக்குளு மற்றும் ஜீவா அளவிற்கு படமில்லை ஆனால் கென்னடி கிளப் மற்றும் வெண்ணிலா கபடிக்குளு 2 வை கம்பேர் செய்யும் போது சாம்பியன் திரைப்படம் நல்ல திரைப்படம் தான்.

    yet another sports movie if the year 2019

    வில்லனாக நடித்திருக்கும் ஸ்டண்ட் சிவா அவரால் முடிந்த வரை பட்டய கிளப்பி இருக்கிறார். மேலும் மேலும் நல்ல படங்கள் அவருக்கு அமையும் என்று நம்பிக்கை உள்ளது. இந்த படத்தை தயாரித்து இருப்பது ராகவி . ஹீரோவுடைய தாய் தான் ராகவி அவர்கள் . தன் மகன் நம்பிக்கை நட்சத்திரமாக வர வேண்டும் என்பதற்காக நிறைய மெனக்கெட்டு இருக்கிறார். ஆர் கே சுரேஷின் சொந்த அக்கா தான் இந்த ராகவி என்பது குறிப்பிடதக்கது.

    முதல் படம் வெற்றி பெற ஒட்டு மொத்த குடும்பமே நிறைய உழைத்திருக்கிறார்கள். இன்னும் நிறைய கோல் அடிக்க வேண்டும் என்று வாழ்த்துவோம் .

    English summary
    suseenthiran is usually said as p.t master of tamil cinema , since he is directing more sports related scripts. now he has done a new script with foot ball game with new faces and this has been released overall in many theaters of tamil nadu.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X