twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நவரசாவின் இரண்டாம் சுவை... யோகிபாபு நடித்த "சம்மர் ஆப் 92" எப்படி இருக்கு ?

    |

    சென்னை : 9 படங்கள் 9 எமோஷன்ஸ் ஒன்பது வகையான திரைக்கதைகள் என்று மணி ரத்னம் தயாரிப்பில் விதவிதமான இயக்குனர்கள் தங்களது படைப்பை சமர்ப்பித்துள்ளனர்.

    அப்படிப்பட்ட வரிசையில் இரண்டாவதாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் நாம் காணவிருக்கும் படம் ப்ரியதர்ஷன் இயக்கத்தில் யோகி பாபு ரம்யா நம்பீசன் போன்றவர்கள் நடித்த படம் "சம்மர் ஆப் 92"

    ஹாஸ்யம் என்ற உணர்வை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த முயற்சி ,பல வெற்றிப்படங்களை இயக்கிய ப்ரியதர்ஷன் யோகிபாபுவையும் ,நம் வீடுகளில் வளர்க்க படும் செல்லமான ஒரு நாய் மற்றும் அதன் பின்னணி வைத்து நகைச்சுவை பிளான் போட்டு உள்ளார் .

    'நவரசா' விமர்சனம்: நவரசாவின் முதல் சுவை... விஜய்சேதுபதி நடித்த எதிரி எப்படி இருக்கு ? 'நவரசா' விமர்சனம்: நவரசாவின் முதல் சுவை... விஜய்சேதுபதி நடித்த எதிரி எப்படி இருக்கு ?

    வெற்றி பெற முடியும்

    வெற்றி பெற முடியும்

    கல்ட் மூவிஸ் என்று சொல்லக்கூடிய ஒரு ஜானர் இயக்குனர் பிரியதர்ஷன் அவர்களுக்கு கைவந்த கலை. மிகப்பெரிய ஹிட் படங்கள் கொடுத்த இயக்குனர் பிரியதர்ஷன் இந்த முறை நவரசா ஏன்னும் இந்த ஆந்தாலஜி படைப்பில் தனக்கென்று ஒரு பகுதியை எந்த அளவுக்கு பயன்படுத்தி வெற்றி பெற முடியும் என்பதை ஆலோசித்து அதை முயற்சி செய்திருக்கிறார்.

    பள்ளிக்கூட நினைவு

    பள்ளிக்கூட நினைவு

    படம் ஆரம்பமான முதல் காட்சியிலேயே ( நடிகர் வேலுசாமியாக )யோகி பாபு காரில் அமர்ந்து செல்லும் காட்சி - தனது கிராமிய வாழ்க்கையும் பள்ளிக்கூட நினைவுகளையும் சுமந்துகொண்டு மனதில் அசை போட்டுக்கொண்டு காரில் வலம் வருகிறார் .

    காமெடியான துன்பங்களை

    காமெடியான துன்பங்களை

    கிராமத்தின் உள்ளே நுழைந்த யோகிபாபு ஒரு பள்ளியின் விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். வெற்றி பெற்ற ஒரு நடிகனாக அதுவும் குறிப்பாக ஒரு காமெடி நடிகனாக அந்தப் பள்ளியின் மேடையில் தான் கடந்து வந்த பாதையை காமெடியான துன்பங்களை சொல்ல ஆரம்பிக்கிறார்.

     சிறுவயது வேலுசாமியாக

    சிறுவயது வேலுசாமியாக

    யோகி பாபு என்ன செய்தாலும் சிரிப்பு வரும் என்று நம்பியோ என்னவோ இந்த கதாபாத்திரத்தில் யோகி பாபுவை தேர்ந்தெடுத்து பிரியதர்ஷன் பயன்படுத்தியுள்ளார் . படத்தின் முதல் காட்சியிலிருந்து கிளைமாக்ஸ் வரை யோகி பாபு பேசும் வசனங்கள் அனைத்தும் அந்த மேடையிலேயே முடிந்துவிடுகிறது . யோகி பாபு அந்தப் பள்ளியின் விழா மேடையில் பேசும் காட்சிகள் எதுவும் அத்தனை சிரிப்பு வெடி வருமளவுக்கு ஒன்றுமில்லை . யோகி பாபு தன் பிளாஷ்பேக் கதைகளை ஒவ்வொன்றாக சொல்லும் பொழுது சிறுவயது வேலுசாமியாக (யோகிபாபு) நடித்தவர் மிகவும் அசால்டாக நம்மை ஆச்சரியப்படுத்துகிறார்.

    உண்மை கதை

    உண்மை கதை

    படத்தில் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால் இது ஒரு நிஜக் கதை. உண்மை கதையை படமாக்கும்போது சில சமயங்கள் சுவாரசியங்கள் கூடும் சில சமயங்கள் சுவாரசியங்கள் இல்லாமலும் போகும். ப்ரியதர்ஷன் எடுத்த இந்த படைப்பு நடிகர் இன்னசென்ட் என்பவர் வாழ்க்கையில் நடந்த ஒரு உண்மை கதை இருப்பினும் இந்தக் கதை இயக்குனர் பிரியதர்ஷன் சொல்லிய விதம் திரைக்கதை அமைத்த விதம் நமக்கு அந்த அளவுக்கு மனதை ஆரம்பத்தில் ஈர்க்கவில்லை என்றாலும் கிளைமாக்ஸ் காட்சி டச்சிங் .

    நன்றி விசுவாசம்

    நன்றி விசுவாசம்

    படத்தில் கதை எதை சுற்றி நகர்கிறது என்று உற்று கவனித்தால் யோகி பாபு வா ரிமியா நம்பீசன் அல்லது நெடுமுடி வேணு வா என்று தீவிரமாக சிந்தித்தோமானால் அத்தனையும் கடந்து கதை நகர்வது வீட்டில் வளர்க்கும் ஒரு செல்லப் பிராணியான நாய் மீது தான். மனிதர்களின் மனப்பக்குவம் ஒரு விலங்கின் நன்றி விசுவாசம் செல்லப்பிராணியாக வளரும் ஒரு நாய் தன் எஜமானரை எந்த அளவுக்கு நேசிக்கும் என்றெல்லாம் வெவ்வேறு கோணங்களில் நம்மளை சிந்திக்க வைத்தது பாராட்டத்தக்கது.

    வெரைட்டி காட்டிய ரம்யா

    வெரைட்டி காட்டிய ரம்யா

    படத்தில் வரும் அத்தனை ஆசிரியர் கதாபாத்திரங்களும் மிகவும் அழகாக எதார்த்தமாக நடித்து உள்ளனர் . ரம்யா நம்பீசனுக்கு கூடுதல் பொறுப்பு. கிடைத்த அந்த நல்ல வாய்ப்பை மிகவும் மென்மையாக இளம் வயது மற்றும் முதிர் கன்னி என்று வெரைட்டி காட்டி உள்ளார் . படத்தின் முதல் சில காட்சிகளிலேயே ரம்யா திருமணம் ஆனவரா ஆகாதவரா என்ற வசனம் மற்றும் தோற்றம் அடுத்த அடுத்த காட்சிகளை எளிதில் யூகிக்க முடிகிறது என்பது படத்தின் ஒரு சின்ன மைனஸ் .

    நாற்றம் நம்மை தொற்றிக்கொள்ளும்

    நாற்றம் நம்மை தொற்றிக்கொள்ளும்

    படத்தில் பேசும் வசனங்கள் எதார்த்தமாக இருந்தாலும் பல இடங்களில் கொஞ்சம் முகம் சுளிக்க வைக்கிறது குறிப்பாக நாற்றமடிக்கும் என்று சொல்லும்போதெல்லாம் "பி" என்ற வார்த்தையை அடிக்கடி பயன்படுத்தியது கொஞ்சம் அருவருப்பை ஏற்படுத்தினாலும் படத்தின் மையக்கரு அதுவாகவே இருக்கிறது என்பதை எண்ணிப் பார்க்கும் பொழுது நாற்றம் நம்மை தொற்றிக்கொள்ளும் . படத்தின் திரைக்கதை அமைந்த விதத்தில் நெடுமுடி வேணு ரம்யா ரம்யா நம்பீசனுடைய அப்பாவாக மிகவும் எதார்த்தமாக பதார்த்தமாகும் பக்குவமாக தனக்கே உரித்த நடிப்பாற்றலை வெளிப்படுத்தி அசத்தியுள்ளார்.

    கிளைமாக்ஸ் காட்சி

    கிளைமாக்ஸ் காட்சி

    நவரசா என்னும் ஒன்பது ரசங்களில் ஹாஸ்யம் என்று சொல்லக்கூடிய நகைச்சுவை இந்தப்படத்தில் வரவேண்டும் என்று பிரியதர்ஷன் எடுத்துக்கொண்ட மெனக்கெடல் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் மட்டும்தான் அது வெற்றி பெற்றது.

    நிறுத்தி நிதானமாக

    நிறுத்தி நிதானமாக

    படம் ஆரம்பித்த முதல் கிளைமாக்ஸ் வரை சிரிப்பே வராமல் இருந்தாலும் கூட இறுதிகட்ட காட்சியில் ஒட்டுமொத்தமாக நம் அனைவரையும் ஒரு நிமிடம் வயிறு குலுங்க சிரிக்க வைத்தது இயக்குனருக்கு கிடைத்த வெற்றி . இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டு வசனங்கள் மற்றும் திரைக்கதையில் சுவாரசியங்கள் கூட்டி இருந்தால் ஒரு முழு நகைச்சுவை படமாக இது மாறி இருக்கும் . நிறுத்தி நிதானமாக டெஸ்ட் மேட்ச் விளையாடுவது போல் பொறுமையாக நின்று சொல்லவந்த விஷயத்தை பொறுமையாக சொல்லி இறுதி காட்சியில் சிரிக்கவைத்து சிக்ஸர் அடிக்கிறார் இயக்குனர் பிரியதர்ஷன். 9 படங்கள் 9 உணர்வுகளின் சுவை என்ற அடிப்படையில் நாம் பார்த்து ரசிக்க வைக்கும் இரண்டாம் சுவை கண்டிப்பாக திகட்டாது என்பது தான் உண்மை. கண்டிப்பாக குடும்பத்துடன் பார்க்காலம் என்பது தான் படத்திற்கு மிக பெரிய பிளஸ் .

    English summary
    yogibabu : Navarasa Review::navarsa the anthology concept produced by maniratnam and its Highly anticipated Netflix release today. heart-touching symphony of the nine human emotions represented in the film. out of that yogibabu acted movie titled as summer of 92 directed by priyadarshan
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X