Youth Review: யூத் விமர்சனம்.. ஹீரோவாகவும் இயக்குநராகவும் கலக்கினாரா கென் கருணாஸ்?.. படம் எப்படி?

Rating:
3.0/5
Star Cast: கென், அனிஷ்மா, தேவதர்ஷினி
Director: கென் கருணாஸ்

சென்னை: நடிகர் கருணாஸ் மகன் கென் இயக்கி நடித்துள்ள 'யூத்' (Youth) திரைப்படம் மார்ச் 19ம் தேதியான இன்று திரையரங்குகளில் வெளியானது. குறைந்த பட்ஜெட்டில் கருப்பையா படத்தை இயக்கினாலும் மலையாள நடிகைகளை நடிக்க வைத்து ஒளிப்பதிவாளர் உதவியுடன் கலர்ஃபுல்லாக படத்தை கொடுத்து இயக்குநராக படத்தில் 10ம் வகுப்பில் பாஸ் ஆனதை போலவே பாஸ் ஆகிவிட்டார்.

கென் கருணாஸ், அனிஷ்மா அனில்குமார், சுராஜ் வெஞ்சரமுடு, தேவதர்ஷினி, பிரியான்ஷி யாதவ், மீனாட்சி தினேஷ், நளினி மற்றும் கென் நண்பர்களாக நடித்த அந்த கேங் என அனைவரும் சிறப்பான நடிப்பையே வெளிப்படுத்தியுள்ளனர்.

Youth Review in Tamil  Ken Karunas debut as hero and director movie is a fun watch

ஜி.வி. பிரகாஷ் இசயில் உருவான 'யூத்' திரைப்படத்தில் ஆரம்பத்திலேயே தளபதி விஜய், சிம்பு, தனுஷ், வெற்றிமாறன் என ஏகப்பட்ட பிரபலங்களுக்கு லிஸ்ட் போட்டு நன்றி தெரிவித்து விட்டே படத்தை தொடங்கினர். 'யூத்' திரைப்படம் படமாக எப்படி இருக்கு? அதன் கதை, பிளஸ் மற்றும் மைனஸ் உள்ளிட்டவை குறித்து விரிவாக பார்க்கலாம் வாங்க..

யூத் கதை: 10ம் வகுப்பில் ஜஸ்ட் பாஸ் ஆகும் பிரவீனுக்கு (கென்) 11வது வகுப்பில் சீட் கொடுக்க மாட்டேன் என ஹெட் மாஸ்டர் நளினி உறுதியாக சொல்லிவிட கென் அம்மாவாக நடித்துள்ள தேவதர்ஷினி போராடி சீட் வாங்கி படிக்க வைக்கிறார். ஆனால், நம்ம ஹீரோ படிக்காமல் பார்க்கும் பெண்களை எல்லாம் காதலித்துக் கொண்டே இருக்கிறார். முதல் பாடலில் ஒரு செட் பெண்களை காட்ட அதன் பின்னர் மூன்று முக்கிய ஹீரோயின்களை ஒன்றன் பின் ஒன்றாக கென் காதலிக்கும் காட்சிகள் வருகின்றன. கடைசியில் எந்த பெண்ணை கென் காதலித்தார். அவரது பெற்றோரின் நிலை என்ன? கிளைமேக்ஸில் சொல்லியுள்ள மெசேஜ் என்ன என்பது தான் யூத் படத்தின் கதை.

படம் எப்படி இருக்கு?: பள்ளிப்பருவத்தில் குடும்ப கஷ்டத்தை எல்லாம் பார்க்காமல் இளம் வயது அழகான பெண்களை பார்த்தால் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் முதல் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் வரை எதிர்காலத்தை நினைக்காமல் காதல் வளர்த்தேன் என சுற்றித் திரிவது எல்லாம் ஒரு கட்டத்தில் வீண் என தெரியவரும் என்கிற மெசேஜ் உடன் படத்தை கொடுத்துள்ள கென்னுக்கு பாராட்டுக்கள்.

ஆரம்பத்தில் மீனாட்சி தினேஷ் உடன் கென்னுக்கு ஏற்படும் காதல் காட்சிகள் எல்லாம் செம கிரிஞ்சாக இருக்க நண்பர்களாக நடித்த நடிகர்கள் மட்டுமே அடிக்கடி காமெடி செய்து படத்தை காப்பாற்றுகின்றனர். ஜி.வி. பிரகாஷின் இசை சிறப்பாக இருந்தாலும், முட்டகலக்கி பாடலை தவிர மற்ற பாடல்கள் எல்லாம் ஒரே மாதிரி இருப்பதும் தேவையே இல்லாமல் பாடல் திணிக்கப்பட்டு ஏகப்பட்ட ரீல்ஸ் காட்சிகளை மட்டுமே எடுத்து ஒட்டியது போலவே மொத்த படமும் உள்ளது.

Youth Review in Tamil  Ken Karunas debut as hero and director movie is a fun watch

தேவதர்ஷினியின் அண்ணன் வீட்டு புதுமனை புகுவிழாவுக்கு போகும் இடத்தில் தேவதர்ஷினி மற்றும் சுராஜ் வெஞ்சரமுடுவுக்கு ஏற்படும் அவமானம் போன்ற காட்சிகளையும் ஆழமாகவும் அழுத்தமாகவும் எடுக்காமல் மேம்போக்காக எடுத்துள்ளது அதிருப்தியை ஏற்படுத்துகிறது. அதே போலத்தான் அம்மாவுக்கு பிறந்தநாள் என நண்பர்களையும் காதலிக்கும் பெண்ணையும் அழைத்து வந்து செய்யும் அக்கப்போர் காட்சிகளும் ஒட்டவே இல்லை.

கடைசியில் படம் இப்படித்தான் முடியும் என்பது ஆரம்பத்தில் இருந்தே தெளிவாக தெரியும் நிலையில், படத்தில் எந்தவொரு சுவாரஸ்யமும் இன்றி படம் செல்ல பிரதீப் ரங்கநாதனின் டிராகன் ஸ்டைலில் படத்தை பல படங்களில் சொல்லப்பட்ட மெசேஜுடன் முடித்து விட்டனர்.

பிளஸ்: கென் கருணாஸ் ஹீரோவாகவும் இயக்குநராகவும் நன்றாகவே உழைத்துள்ளார். போரடிக்கும் காதல் காட்சிகள் மற்றும் சுவாரஸ்யமற்ற காட்சிகளில் ரசிகர்கள் அப்செட் ஆகும் போதெல்லாம் தனது நண்பர்கள் கேங்கை வைத்து காமெடி செய்து தேற்றிவிடுவது படத்திற்கு பெரிய பிளஸ் ஆக மாறியுள்ளது. ஜி.வி. பிரகாஷின் இசை தான் படத்திற்கு பெரிய பலம். விக்கியின் ஒளிப்பதிவு அதிகபட்சம் படத்தின் கதை பள்ளி மற்றும் ஹீரோவின் வீட்டிலேயே இருந்தாலும் அதை செம கலர்ஃபுல்லாக காட்டி பார்க்க வைத்துள்ளார். நாஷின் எடிட்டிங்கும் படத்திற்கு கைகொடுத்துள்ளது.

மைனஸ்: கதையாக பார்த்தால் ரொம்பவே சுமாரான படமாகவே யூத் உள்ளது. நண்பர்களை காதலுக்காக பயன்படுத்துவது, பாடி ஷேமிங் வசனங்கள் என படம் முழுக்க பயணிக்கும் விஷயங்கள் படத்திற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்துகிறது. பள்ளிப்பருவ காதலை சமீபத்தில் வந்த வித் லவ் திரைப்படம் கூட சிறப்பாக கையாண்டது என்றே சொல்லலாம். ஆனால், யூத் படத்தில் ஆழமான, அழுத்தமான காட்சிகள் எல்லாம் இல்லாமல் ஜாலியான ரீல்ஸ் போல படம் செல்கிறது. கென் திரையில் அழகாக இருக்கிறார். சூப்பராக சிரிக்கிறார். நல்லா ரொமான்ஸ் செய்கிறார். ஆக்‌ஷன் காட்சியையும் வைத்துள்ளனர். அடுத்த அடுத்த படத்தில் இன்னமும் சிறப்பான படைப்பை அவர் கொடுப்பார் என்றே தெரிகிறது. ஜாலியான ஒரு ஸ்கூல் லைஃப் மெமரிஸை பசங்களோட சேர்ந்து என்ஜாய் பண்ண 'யூத்' படத்தை பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X