தூத்துக்குடி மாவட்ட மக்கள் ரெம்பவும் நல்லவர்கள் - சூர்யா

டைரக்டர் ஹரி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்து வரும் படம் சிங்கம். இந்த படத்தின் பெரும்பாலான பகுதிகள் நெல்லை மாவட்டத்தில் எடுக்கப்படுகிறது.
திருச்செந்தூர் அருகேயுள்ள தேரிக்குடியிருப்பு பகுதியிலும் சிங்கம் படப்பிடிப்பு நடந்தது. அங்கு நடிகர் சூர்யா நடித்த சண்டைக்காட்சி படமாக்கப்பட்டது. இதற்காக அங்கு பிரமாண்ட அய்யனார் சிலை வைக்கப்பட்டிருந்தது.
படப்பிடிப்பு இடைவெளியின்போது நடிகர் சூர்யா செய்தியாளர்களிடம் பேசுகையில்,
தூத்துக்குடி மாவட்ட மக்கள் மிகவும் பாசக்காரர்களாக இருக்கிறார்கள். மிகவும் நல்லவர்கள், சிங்கம் பட சூட்டிங்கை வாலிபர்கள் முதல் அனைத்து தரப்பினரும் பார்த்து செல்கின்றனர்.
அவர்கள் என்னை நடிகனாக மட்டும் பார்க்காமல் குடும்பத்தில் ஒருவனாக பார்த்து அன்புடனும், பாசத்துடனும் பேசி பழகுகின்றனர். இந்த பகுதியில் உள்ளவர்கள் பிழைப்புக்காக வெளியூர் சென்று நல்ல நிலையில் உள்ளனர். ஆனாலும் இந்த மண்ணை மறக்காமல் முக்கிய விசேஷங்களுக்கு வந்து செல்கிறார்கள்.
ஊரோடும், தேரோடும் இருக்க வேண்டும் என்பது பழமொழி. சொந்த மண் என்ற வேரை மறக்காதவர்கள் தூத்துக்குடி மாவட்ட மக்கள்.
இந்த பகுதியில் நிறைய வளம் உள்ளதாலும், தமிழ் மக்களின் மணம் உள்ளதாலும் தற்போது நிறைய படப்பிடிப்பு நடந்து வருகிறது.
குற்றாலம், திருச்செந்தூர், தூத்துக்குடி, நெல்லை பகுதியில் எடுக்கப்படும் டைரக்டர் ஹரியின் படங்கள் வெற்றி பெற்றுள்ளன என்றார் சூர்யா.


Click it and Unblock the Notifications











