'ராணா பணிகள் துவங்கிவிட்டன; அக்டோபர் முதல் முழு வீச்சில் ஷூட்டிங்!'- கேஎஸ் ரவிக்குமார்

By Shankar

ரஜினி மூன்று வேடங்களில் நடிக்கும் ராணா படப் பணிகள் மீண்டும் ஆரம்பமாகிவிட்டதாகவும், அக்டோபரில் முழூவீச்சிலான படப்பிடிப்பு தொடங்குவதாகவும் இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் அறிவித்துள்ளார்.

ரஜினிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு சிங்கப்பூர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று சென்னை திரும்பியுள்ளார். தற்போது வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார். இதனால் ராணா படப்பிடிப்பு சில மாதங்களாக நிறுத்தப்பட்டது.

இப்போது ரஜினி பூரண குணம் அடைந்துள்ளதால் படப்பிடிப்பை மீண்டும் தொடங்க ஏற்பாடுகள் நடக்கின்றன.

அக்டோபரில் மீண்டும் தொடங்க உள்ளனர். இதற்காக ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் பிரமாண்ட மாட மாளிகை அரங்குகள் அமைக்கப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாயின.

இதுபற்றி கே.எஸ். ரவிக்குமாரிடம் கேட்ட போது, "ரஜினி முழுக்க தயாரான பிறகே ராணா பட ஷூட்டிங் தொடங்க வேண்டும் என்பதில் தெளிவாக உள்ளோம்.

இன்னும் செட் அமைக்கவில்லை

ராணா படப்பிடிப்புக்காக ஹைதராபாத்தில் மாளிகை அரங்குகள் அமைக்கப்பட்டு வருவதாக செய்திகள் வந்துள்ளன. அது போன்று அரங்குகள் எதுவும் இன்னும் அமைக்கப்படவில்லை. லொக்கேஷன்களும் இன்னும் முடிவு செய்யவில்லை.

இப்போதைக்கு படத்தின் ஸ்கிரிப்ட் மற்றும் பாடல் கம்போசிங் பணிகளில்தான் கவனம் செலுத்துகிறோம். ஏ.ஆர். ரஹ்மான் ஏற்கனவே பாடல்களுக்கு இசையமைக்கும் பணியைத் துவங்கி விட்டார்.

படப்பிடிப்பை அக்டோபரில் துவங்க திட்டமிட்டுள்ளோம் என்பது உண்மைதான். படப்பிடிப்பை ஆரம்பித்த பிறகு எந்த தங்குதடையும் இல்லாமல் தொடர்ந்து நடத்துவோம்," என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X