பாலம் இடிந்து நரேன் படுகாயம்

பிரபு-நரேன் இணைந்து நடிக்கும் படம் தம்பிக்கோட்டை. இதன் படப்பிடிப்பு தஞ்சையில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் கதையில், பழமையான ஒரு பாலம் இடம்பெறுகிறது.
இதற்காக தஞ்சை அருகில் உள்ள ஒரு காட்டாற்றின் குறுக்கே ரூ.1 கோடி செலவில், ஒரு செயற்கை பாலத்தை படப்பிடிப்புக் குழுவினரே கட்டினார்கள். ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இரவு-பகலாக உழைத்து, அந்தப் பெரிய பாலத்தை அமைத்தார்கள்.
அந்த பாலத்தில் பரபரப்பான கார் துரத்தல் காட்சியும், வில்லன்களுடன் நரேன் மோதும் சண்டை காட்சிகளும் படமாக்கப்பட்டது. சண்டை காட்சியில் நரேன் நடித்துக்கொண்டிருந்தபோது, திடீரென்று பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.
இதனால் பாலத்திலிருந்து ஆற்றில் விழுந்த நரேன் இடிபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்தார்.
உடனடியாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இயக்குநர் அம்மு ரமேஷ், பட அதிபர் ஆர்.கே.சுரேஷ் ஆகிய இருவரும் நரேனை ஆற்றில் இருந்து மீட்டு, அருகில் உள்ள ஒரு மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின்னர் படப்பிடிப்பு தொடர்ந்தது. நரேன் சம்பந்தப்படாத காட்சிகள் படமாக்கப்பட்டன. இப்போது சிகிச்சைப் பெற்று வருகிறார் நரேன்.


Click it and Unblock the Notifications











