'அழகர் மலையில்' பானு!

By Staff

Bhanu
சங்கிலி முருகன் பெரிய இடைவெளிக்குப் பிறகு தயாரிப்புக்கு வருகிறார். கூடவே அவருடன் இணைகிறார் சங்கிலியாரின் பெஸ்ட் பிரண்டான இளையராஜா. படத்திற்கு பெயர் அழகர் மலை. பக்கா மதுரை பக்க கதையுடன் மண் மணம் கமழ வருகிறது அழகர் மலை.

சங்கிலி முருகனும், இளையராஜாவும் சேர்ந்து மிரட்டிய கடைசிப் படம் காதலுக்கு மரியாதை. அப்படத்தின் பாடல்களும், படமும் சேர்ந்து தமிழ் பெருங்குடி மக்களுக்கு ஏற்படுத்திய மயக்கம் இன்னும் கூட முற்றிலும் போகாமல் மிச்சமுள்ளது.

அதன் பின்னர் தொடர்ந்து தயாரிக்காமல் நிறுத்தி வைத்திருந்தார் சங்கிலி முருகன். நிதிப் பிரச்சினைதான் அதற்கு முக்கிய காரணம்.

இருப்பினும் ஜெயம், எம். குமரன் சன் ஆப் மகாலட்சுமி உள்ளிட்ட படங்களுக்கு தயாரிப்பு கட்டுப்பாட்டாளராக இருந்து வந்தார்.

இந்த நிலையில் கிட்டத்தட்ட 10 ஆண்டு இடைவெளிக்குப் பின்னர் சங்கிலி முருகன் மீண்டும் தயாரிக்க வருகிறார். அதுதான் அழகர் மலை. பொன்மனம் படத்தை இயக்கிய எஸ்.பி.ராஜ்குமார் இப்படத்தை இயக்கவுள்ளார்.

தூண்டில் படத்தில் வில்லனாக வந்த ஆர்கே இப்படத்தின் மூலம் நாயகனாகிறார். தாமிரபரணி நாயகி பானு பெரிய இடைவெளிக்குப் பின்னர் இப்படம் மூலம் நாயகியாக ரீ என்ட்ரி தருகிறார்.

மதுரை, தேனி மாவட்டங்களின் எழில் கொஞ்சும் லொகேஷன்களில் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X