காவ்யா மாதவன், குடும்பத்தினரை தொந்தரவு செய்யக் கூடாது-கணவர் வீட்டாருக்கு உத்தரவு

By Chakra

மலையாள நடிகை காவ்யா மாதவன் வீட்டுக்கோ அல்லது அவர் படப்பிடிப்பில் இருக்கும் இடத்திற்கோ சென்று எந்தவகையிலும் தொந்தரவு செய்யக் கூடாது என்று காவ்யா மாதவனின் கணவர் மற்றும் குடும்பத்தாருக்கு கேரள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நிஷால் சந்திராவை கடந்த ஆண்டு மணந்தார் காவ்யா. ஆனால் போன வேகத்திலேயே தனது பிறந்த வீட்டுக்குத் திரும்பி விட்டார்.இருவரும் பிரிந்து வாழ்கின்றனர்.

இந்த நிலையில், தனது கணவர், மாமனார் சந்திர மோகன், மாமியார் மணிமோகன், கணவரின் சகோதரர் தீபன் ஆகியோர் மீது எர்ணாகுளம் குற்றவியல் முதல் வகுப்பு நீதிமன்றத்தில் காவ்யா மாதவன் கடந்த மாதம் வழக்கு தொடர்ந்தார்.

அதில், நானும் நிஷால் சந்திராவும் பிரிந்து வாழ்கிறோம். இதனால் என்னை அவருடைய குடும்பத்தினர் வீடு புகுந்து துன்புறுத்துவார்கள் என அச்சப்படுகிறேன். என்னை தொலைபேசி மூலமாகவோ அல்லது வீடு புகுந்தோ எந்த தொந்தரவும் செய்யக் கூடாது என்று நீதிமன்றம் அவர்களுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

மனுவை விசாரித்த நீதிபதி, காவ்யா மாதவனை எந்த இடத்திலும் குறிப்பாக வீட்டிலோ அல்லது படப்பிடிப்பு தளத்திலோ சென்று கணவர் குடும்பத்தினர் இடையூறு ஏற்படுத்தக் கூடாது என்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X