'ஊதித் தள்ளிய' நீது!

யுத்தம் செய் படத்தில் இவருடன்தான் குத்தாட்டம் போட்டார் அமீர். அப்போது நீது நடந்து கொண்ட விதம், எதையும் சட்டென்று ஈர்க்கும் அவரது கற்பூர புத்தி ஆகியவற்றைப் பார்த்து அவரையே 'ஆதிபகவன்' படத்திலும் நாயகியாக்கி விட்டாராம் அமீர்.
"எனக்குத் தெரிஞ்சு, இந்தப் பொண்ணு அளவுக்கு திறமையும், பணிவும் வேற யார்கிட்டயும் பார்க்க முடியல..." என்று சர்ட்டிபிகேட்டும் கொடுத்துள்ளார் அமீர்.
ஆதிபகவனில், கதைப்படி, சிகரெட் பழக்கத்திற்கு அடிமையானவராக நடிக்கிறார் நீது சந்திரா. தினமும் கணக்கில்லாமல் சிகரெட் ஊதித் தள்ளும் கேரக்டராம்.
படத்தில் இடம்பெறும் ஒரு காட்சிக்காக நிஜமாகவே சிகரெட் பிடிக்க வேண்டும் என்றாராம் அமீர். ஆனால் நீது சந்திராவோ, 'நான் இதுவரை சிகரெட்டை தொட்டுப் பார்த்தது கூட கிடையாதே' என நழுவ, 'காட்சி யதார்த்தமாக இருக்க வேண்டும். அப்புறம் உன்னிஷ்டம்', என அமீர் கூற, கடைசியில் பிடித்தே விட்டாராம், சிகரெட்டை.
அடுத்து சிகரெட்டை ஸ்டைலாக பிடிப்பது எப்படி என்று அமீர் க்ளாஸ் எடுக்க, அந்தக் காட்சியை எடுத்து முடிப்பதற்குள் நீதுசந்திரா 28 சிகரெட்டுகளை ஊதித் தள்ளிவிட்டாராம்.
இதன் விளைவு மறுநாள் நீதுவுக்கு தொண்டை வலியே வந்துவிட, டாக்டரிடம் போய் சிகிச்சை பெறும் அளவுக்கு ஆகிவிட்டதாம் நிலைமை!
நல்லவேளை கஞ்சா அடிப்பது போல நீதுவின் கேரக்டரை வைக்கவில்லை அமீர்.


Click it and Unblock the Notifications











